மடை

நீர்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற அல்லது மறிக்க உதவும் மடை

மடை அல்லது மதகு என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவாகும். இது மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கைகளால் இவற்றைத் திறக்கவும் அல்லது மூடவும் இயலும்.

மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாதவாறு மதகுகள் மூலம் மூடப்படுகிறது. மேலும் கால்வாய்களில் பாயும் நீர், மதகுகளைத் திறப்பதன் மூலம் வயல்கள் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

அணைகள் மற்றும் வீராணம் ஏரி போன்ற பெரிய நீர்நிலைகளில் பெரிய அளவில் உள்ள மதகுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்