மண்டி இல்லம்
28°37′27″N 77°13′58″E / 28.624172°N 77.232701°E
மண்டி இல்லம் (Mandi House) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு பகுதி. இது தில்லியில் உள்ள மண்டி அரசரின் முன்னாள் இல்லமாக இருந்தது.
வரலாறு
1940களில், மண்டி சமஸ்தானத்தின் 18வது மன்னர், ராஜா சர் ஜோகிந்தர் சென் பகதூர் இந்த மாளிகையினைக் கட்டினார். இது இப்போது இமாச்சல் பவன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அடுத்ததாக உள்ளது. இது 1970களில் விற்கப்பட்டுப் பிரிக்கப்பட்டது.[1] 1990களில் கட்டப்பட்ட பெரிய, நவீன அலுவலகங்களுக்கு வழி வகுக்கும் வகையில் பழைய அரண்மனை இடிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் மாநில இல்லமான இமாச்சல் பவன் இப்போது இங்கு அமைந்துள்ளது. தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் தலைமையகமான தூர்தர்ஷன் பவன் இங்கு அமைந்துள்ளது. இன்று, அலுவலக வளாகத்தின் பெயர் பழைய அரச குடியிருப்பு, மண்டி இல்ல மெட்ரோ நிலையம் ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது.[2] சுற்றியுள்ள பெரிய பகுதி இன்னும் மண்டி இல்லம் என்று குறிப்பிடப்படுகிறது.
அக்ரசேன் படிக்கிணறு மண்டி இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Home". 23 November 2017.
- ↑ Doordarshan பரணிடப்பட்டது 13 செப்டெம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்