மந்சோர் போர்

மந்சோர் போர் (Battle of Mandsaur) என்பது மராட்டியப் பேரரசின் படைகளுக்கும் இராசபுத்திரர்களின் படைக்கும் இடையே இந்தியாவின் மந்சோரில் நடைபெற்ற போராகும். மல்கர் ராவ் மராட்டியப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். இரசபுத்திரப் படைகளுக்கு செயசிங் தலைமை தாங்கினார். இப்போரில் செயசிங் 1733 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டார். புந்தேல்கண்ட் , பண்டி பகுதிகளைக் கைப்பற்றி மல்கார்ராவ் ஒல்கார் ஆட்சியமைத்தார் [1]

வரலாறு

மந்சோர் போர் கி.பி 1733 இல் நடைபெற்றது. மராட்டிய பேரரசர் பேரரசை விரிவாக்கும் எண்னம் கொண்டிருந்தார், இராசபுத்திரர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் ஆசையும் கொண்டார். கச்வாகா இராசபுத்திரர்களை தன்னுடைய எதிரிகளாகக் கருதினார்.

விளைவுகள்

மந்சோர் போரில் மராட்டியர்கள் பெற்ற பின்வரும் விளைவுகளை கொண்டிருந்தது: சிந்தியர்களும் ஓல்கார்களும் ராசத்தான் மீது தங்களது தாக்குதலை புதுப்பிக்க ஊக்கமும் ஆதரவும் பெற்றனர். கோட்டா மற்றும் பண்டியை அடுத்த போர் இலக்காக மராட்டியர்கள் முடிவு செய்தனர்,

மேற்கோள்கள்

  1. P. K. Sethi, S. K. Bhatt, R. Holkar., A study of Holkar state coinage, page 32