மனாசேயின் புதல்வர்கள்

மனாசேயின் புதல்வர்கள்
மொத்த மக்கள்தொகை
10,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா7,000[1]
 இசுரேல்3,000[1]
மொழி(கள்)
குகி, மிசோ, எபிரேயம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மிசோ, குகி, சின் மக்கள், கசின், சான், காரென்.

மனாசேயின் புதல்வர்கள் (Bnei Menashe) வடகிழக்கு இந்தியா மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் பகுதியில் வாழும் ஒரு சிறிய இனக்குழுவாகும். இவர்கள் இசுரேலின் இழந்த கோத்திரங்களில் ஒன்றின் வாரிசுகள் என்று தங்களை அழைப்பதோடு, யூத சமயத்தையும் கடைப்பிடிக்கிறார்கள்.[2][3] மனாசேயின் புதல்வர்கள் எனப்படும் இவர்கள் மிசோ மக்கள், குகி, சின் மக்கள் இனத்தவராகவும், திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுபவராகவும், இவர்களுடைய மூதாதையர் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் மியான்மர் பகுதியில் இருந்து ஏழு சகோதரி மாநிலங்களுக்கு குடியேறியவர்களாகவும் உள்ளனர்.[4] 20 ஆம் நூற்றாண்டின் கடைசியில் யூதப் போதகர் ஒருவரால் மனாசே வழி வந்தவர்கள் என்ற பொருளில் "மனாசேயின் புதல்வர்கள்" என அழைக்கப்பட்டனர்.[5] இரு வடகிழக்கு இந்தியா மாநிலங்களில் வாழும் 3.7 மில்லியனுக்கு மேற்பட்டவர்களில் பலர் தங்களை இவ்வாறு கருதுவதில்லை. சிலர் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.

உசாத்துணை

  1. 1.0 1.1 1.2 3,000th Bnei Menashe touches down in Israel
  2. மணிப்பூரில் வசிக்கும் யூதர்களின் நிலை என்ன?
  3. Weil, Shalva. "Double Conversion among the 'Children of Menasseh'" in Georg Pfeffer and Deepak K. Behera (eds) Contemporary Society Tribal Studies, New Delhi: Concept, pp. 84–102. 1996 Weil, Shalva. "Lost Israelites from North-East India: Re-Traditionalisation and Conversion among the Shinlung from the Indo-Burmese Borderlands", The Anthropologist, 2004. 6(3): 219–233.
  4. Kommaluri, Vijayanand; Subramanian, R; Sagar K, Anand (2005-07-07). "Issues in Morphological Analysis of North-East Indian Languages". Language in India. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04.
  5. Fishbane, Matthew (19 February 2015). "Becoming Moses". Tablet Magazine இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603071557/https://tabletmag.atavist.com/becoming-moses. பார்த்த நாள்: 2 May 2016. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bnei Menashe
என்பதில் ஊடகங்கள் உள்ளன.