மரபியல்பு (கணினியியல்)
இருக்கும் வகுப்புக்களில் இருந்து பிற வகுப்புக்களை வரையறை செய்யகூடியதாக இருப்பதை மரபியல்பு (Inheritance) எனலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இது ஒரு முக்கிய அம்சம். ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட வகுப்புக்களில் இருந்து புதிய வகுப்புக்களை வரையறை செய்வதன் மூலம் நிரலாக்க வேளைப்பளு குறைகின்றது.
மேல்நிலை வகுப்புக்கள் அல்லது மீவுவகுப்புக்களில் இருந்து கீழ்நிலை வகுப்புக்களை வரையறை செய்யலாம். உதாரணமாக, வடிவம் என்ற வகுப்பில் இருந்து வட்டம் என்ற வகுப்பை வரையறை செய்யலாம்.
பி.எச்.பி எடுத்துகாட்டு
பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது.
<?php include("C:\Documents and Settings\HP_Owner\Desktop\calc.php"); $c1 = new Calculator; $c1->set_numbers(1,3); echo "This sum is: ".$c1->sum()."<br />"; echo "The multiple is: ".$c1->mul()."<br />"; $c2 = new Calculator2; $c2->set_numbers(5,2); echo "This sub is: ".$c2->sub()."<br />"; ?>
This sum is: 4 The multiple is: 3 This sub is: 3
- calc.php கோப்பு
<?php class Calculator { //class-wide variables var $x; var $y; //function to gather two numbers function set_numbers($num1, $num2){ $this->x = $num1; $this->y = $num2; } //function to add numbers together function sum(){ $ans = $this->x + $this->y; return $ans; } function mul(){ $ans = $this->x * $this->y; return $ans; } } class Calculator2 extends Calculator { function sub(){ $ans = $this->x - $this->y; return $ans; } } ?>