மருத்துவப் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு

மருத்துவப் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வுகள் (National Exit Test (சுருக்கமாக:NExT), 2023-ஆம் ஆண்டு முதல் இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் அனைத்து எம்.பி.பி.எஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்கள் இத்தேர்வின் முதல் பகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக (ஹவுஸ் சர்ஜன்) பணியாற்ற அனுமதிக்கப்படுவர். பின்னர் இத்தேர்வின் இரண்டாம் பகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க தேசிய மருத்துவ ஆணையத்தால் அனுமதி வழங்கப்படும்.[1][2] மேலும் இரண்டாம் பகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர அனுமதிக்கப்படுவர். இப்புதிய தேர்வு முறை அடுத்த ஆண்டு டிசம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இப்புதிய தேர்வு முறையால் நீட் முதுநிலை மருத்துவத்திற்கான தேர்வு மற்றும் அயல்நாட்டில் இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் பணி மேற்கொள்ள தனித்தேர்வுகள் எழுத தேவையில்லை.[3][4][5]

நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான நடை முறைகள் இனிமேல் அறிவிக்கப்படும். இந்தத் தேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் வாயிலாக நடத்தாமல், புது தில்லி எய்ம்ஸ் மூலம் நடத்தப்பட உள்ளது.

தேர்வு முறை

நெக்ஸ்ட் தேர்வு இரு பகுதிகளாகக் கொண்டது: எழுத்துத் தேர்வு (NEXT-1) மற்றும் செய்முறை தேர்வு (NEXT-2).

நெக்ஸ்ட்: 1

இத்தேர்வானது மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் சாதாரணமாக எழுதும் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் 1 தேர்வு இந்தியா முழுவதற்குமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவ மனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்றத் (ஹவுஸ் சர்ஜன்) தகுதி பெறுவார். வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களும் நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவருவராக பணியாற்ற முடியும். இத்தேர்வில் 50% விழுக்காடு மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தவர்களாக கருதப்படுவர். ஆனால் இந்த மதிப்பெண்ணால் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு தகுதி பெறமுடியாது.[6]

நெக்ஸ்ட்: 2

மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றியவர்கள், மருத்துவராக பணியாற்ற அல்லது முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நெக்ஸ்ட் 2 செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன் மூலம் நீட் முதுநிலை மருத்துவத்திற்கான தேர்வு நீக்கப்படுகிறது. நெக்ஸ்ட் தேர்வுகள் இந்தியா முழுவதும் டிசம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்