மறுமலர்ச்சி (ஐரோப்பா)
கலை இயக்கங்கள் |
---|
நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலகட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
மறுமலர்ச்சி தோன்றக் காரணம்
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது பண்டைய இலக்கியங்களும் கலைகளும் அங்கு புறக்கணிக்கப்பட்ட அதே நேரத்தில் கான்ஸ்டாண்டினொபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசில் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. 1453 ம் ஆண்டு ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டினொபிளைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த பைசாண்டிய கிரேக்க அறிஞர்கள் ரோமாபுரிக்குத் தப்பியோடினர். அவர்கள் தங்களுடன் கிரேக்க-ரோமானியப் பாரம்பரியச் சிறப்புகளையும் கொண்டு சென்றனர். மீண்டும் பண்டைய இலக்கியங்கள் இத்தாலியில் புத்துயிர் பெற்றமையால் கேள்வி கேட்டு விடை பெறும் மனப்பாங்கு மக்களிடம் பெருகியது. இவ்வுணர்வின் விளைவால் அறிவியல் , புவியியல், சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் ஒரு எழுச்சி உண்டானது.
வரலாற்று வரைவியல்
ரெனைசான்ஸ் (Renaissance) என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதனை பிரெஞ்சு வரலாற்றாளரான ஜூல்ஸ் மிச்செலெட் (Jules Michelet) என்பவர் முதலின் பயன்படுத்தினார். இது 19 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் வரலாற்றாளரான ஜக்கோப் புர்க்கார்ட் (Jacob Burckhardt) என்பவரால் விரிவாக்கம் பெற்றது. இதன் நேரடிப் பொருள் மறுபிறப்பு என்பதாகும். மறுபிறப்பு என்பது இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று பழைய classical நூல்களினதும், படிப்பினைகளினதும், மீள் கண்டுபிடிப்பும், கலை அறிவியல் முதலிய துறைகளில் அவற்றின் பயன்பாடும் என்ற பொருளைத் தருகிறது. மற்றது இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகளின் விளைவுகள், ஐரோப்பியப் பண்பாடு தொடர்பில் ஒரு பொதுவான புத்தூக்கத்தை ஏற்படுத்தியது எனப் பொருள் படுகின்றது. எனவே மறுமலர்ச்சி என்பதை இரண்டு வித்தியாசமான ஆனால் பொருள் பொதிந்த வழிகளில் பேசமுடியும்: பண்டைய நூல்களின் மீள் கண்டுபிடிப்பினூடாக செந்நெறிக்காலப் (classic) படிப்பினைகளினதும், அறிவினதும் மறுபிறவி என்பதும், ஐரோப்பியப் பண்பாட்டின் பொதுவான மறுபிறவி என்பதுமாகும்.
பல் மறுமலர்ச்சிகள்
20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பல அறிஞர்கள், மறுமலர்ச்சி என்பது, பல அவ்வகையான இயக்கங்களில் ஒரு வகை மட்டுமே என்ற நோக்கைக் கொண்டிருந்தனர். இது பெருமளவுக்கு, "12 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைத்த சார்ள்ஸ் ஹெச் ஹஸ்கின்ஸ் (Charles H. Haskins) என்பவரின் ஆய்வுகளாலும், "கரோலிங்கியன் மறுமலர்ச்சி" (Carolingian renaissance) தொடர்பான வாதங்களை முன்வைத்த வரலாற்றாளர்களினாலும் ஏற்பட்டது. இவ்விரு கருத்துக்களுமே தற்போதைய அறிஞர் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக, மறுமலர்ச்சி எனப்படுவதை குறிப்பான சொற்களின் மூலம், உதாரணமாக இத்தாலிய மறுமலர்ச்சி, ஆங்கில மறுமலர்ச்சி முதலியன மூலம், குறிப்பிடுவது தற்கால வரலாற்றாளரிடையே ஒரு போக்காக இருந்து வருகிறது.
மருத்துவத் துறையில் பாரிய புரட்சி
வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால் இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான்.
அறிவியல் வளர வளர மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம், அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே ஆகும்.
மருத்துவம் (ணிலீனீiணீinலீ) என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (திrs ணிலீனீiணீina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ‘குணப்படுத்தும் கலை’ என்பதாகும்.
கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போ கிரடீஸ் என்பவரின் மருத்துவக் குறிப்புகளே சிறந்ததாகவும் ஓரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக் கிடைக்கின்றன. எனவே இவரே ‘மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். ‘அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே.
நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர் இவர். நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுபடுத்தியவரும் இவரேயாவார்.
மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே.
இவருடைய புகழ்வாய்ந்த ‘ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி’ மருத்துவ உலகின் தொன்மையான செம்மையான ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவப் படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது.
இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக்கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் ஆவார்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர்.
மருத்துவத்தைப் பற்றிய கருத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப் படைத்தன. கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டன. இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தது. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது.
கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்த மருத்துவக் கருத்துகள் புறந் தள்ளப்பட்டன. இபேன் அல் நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழைமை வாதத்தில் இருந்த மருத்துவவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ‘திரவக் கோட்பாடு’ மறுக்கப்பட்டது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார்.
முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் செய்தார். விலங்குகளின் மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலில் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிரூபித்தார்.
1880 இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிரூபித்தார். அவை ‘காக்ஸ் கோட்பாடுகள்’ என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன.
18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது.
ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர்.
ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம்.
மறுமலர்ச்சி பரவல்
15ஆம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி இத்தாலியின் பிளோரசன்சில் இருந்து ஐரோப்பாவின் மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. அச்சடிக்கும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புதிய புதிய யோசனைகள் வேகமாக பரவ வழிவகுத்தது. 20 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் மறுமலர்ச்சியை தேசிய மற்றும் மத இயக்கங்களாக பிரித்தனர்.
வடக்கு ஐரோப்பா
வடக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி வடக்கு மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி யோசனைகள் வடக்கு நோக்கி நகர்ந்த பொழுது இசையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஓவியங்களை பொறுத்தவரை இத்தாலிய ஓவியங்கள் மதச்சார்பற்று உருவாக்கப்பட்டன ஆனால் வடக்கு ஐரோப்பாவில் முதலில் மதம் சார்ந்த ஓவியங்களே வரையப்பட்டன. பின்னாட்களில் பீட்டர் பிருகள் போன்றவர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாக தீட்டினர். வடக்கு மறுமலர்ச்சியின் பொழுதே பல ஆண்டுகள் நீடித்திருக்கும் எண்ணெய் ஓவியங்கள் முழுமைபெற்றன.
இங்கிலாந்து
16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மறுமலர்ச்சி தொடங்கிற்று. ஷேக்ஸ்பியர், சர் தாமஸ் மோர், பிரான்சிஸ் பேகன் போன்ற எழுத்தாளர்கள், இண்டிகோ ஜோன்ஸ் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் தாமஸ் டாலிஸ் போன்ற இசை மேதைகள் ஆங்கில மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர்.
பிரான்ஸ்
மறுமலர்ச்சியை குறிப்பிடும் வார்த்தையான "Renaissance" ஒரு பிரெஞ்சு சொல்லாகும். இதன் பொருள் மறுபிறப்பு என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட இந்த சொல் பின்னாளில் பிரான்ஸின் வரலாறு என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தது.
ஜெர்மனி
15ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மறுமலர்ச்சி ஜெர்மனிக்கு பரவத்துடங்கியது. இவற்றில் அச்சகங்களின் பங்கு அலாதியானது.
நெதர்லாந்து
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியின் மறுமலர்ச்சி நெதர்லாந்தையும் சென்றடைந்தது. இதற்கு பெல்ஜியதில் இருந்த டச்சு மொழி பேசும் பிளாண்டர்கள் ப்ருகஸ் நகர் வழியாக மேற்கொண்ட வணிகம் பெரிய அளவில் உதவியது. பிளாண்டர்கள் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட பெரிய கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்துவந்தனர். அறிவியலில் உடற்கூற்றியல் துறை நிபுணர் ஆண்ட்ரீயஸ் போன்றவர்கள் மறுமலர்ச்சியை முன்னெடுத்து சென்றனர்.
போர்ச்சுக்கல்
இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் போர்ச்சுகளை குறைவாக தாக்கியதாகவே கருதப்படுகிறது. போர்ச்சுக்கல் மறுமலர்ச்சி செல்வந்த இத்தாலி மற்றும் பிளண்டர்களின் முதலீடுகளால் சாத்தியப்பட்டது. போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பன் 15 ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கியது. காரணம் கண்டுபிடிப்புக்காலம் என்று போற்றப்படும் பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய பல கடல் பயணங்கள் போர்ச்சுக்கல் மூலமே செயல்படுத்தப்பட்டது.
ஹங்கேரி
இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அடுத்து பரவிய இரண்டாம் நாடு ஹங்கேரி எனலாம். இதற்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி இடையே ஏற்கனவே நிலவிய பல கட்டங்களிலான ஒத்துழைப்பும் ஒரு காரணம்.
ரஷ்யா
இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் ரஸ்சியாவிலும் எதிரொலித்தது ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய அதே வேகத்தில் அல்ல. காரணம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான தூரம் அதிகம். ஈவான் III என்ற இளவரசர் இத்தாலியின்
பின்வருவனவற்றையும் காண்க
- மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
- அறிவியற் புரட்சி
வெளி இணைப்புகள்
- A NEW LIGHT ON THE RENAISSANCE பரணிடப்பட்டது 2005-08-28 at the வந்தவழி இயந்திரம், by Harold Bayley, 1909