மலேசிய எரிசக்தி ஆணையம்

மலேசிய எரிசக்தி ஆணையம்
Energy Commission of Malaysia
Suruhanjaya Tenaga Malaysia

மலேசிய எரிசக்தி ஆணையத் தலைமையகம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 சனவரி 2002; 23 ஆண்டுகள் முன்னர் (2002-01-01)
முன்னிருந்த அமைப்பு
  • மின்சாரம் எரிவாயு வழங்கல் துறை
    (Jabatan Bekalan Elektrik Gas)
தலைமையகம்No 12, Jalan Tun Hussein, Presint 2, 62100 புத்ராஜெயா
பொறுப்பான அமைச்சர்கள்
  • சம்சுல் அனுவார் நசரா
    (Shamsul Anuar Nasarah)
  • அலி பிஜு
    (Ali Biju)
அமைப்பு தலைமை
  • அசியான் ஒசுமான்
    (Azian Osman)
மூல அமைப்புமலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு
வலைத்தளம்www.st.gov.my
அடிக்குறிப்புகள்
எரிசக்தி ஆணைய சட்டம் 2001
(Energy Commission Act 2001)

மலேசிய எரிசக்தி ஆணையம் (மலாய்: Suruhanjaya Tenaga Malaysia (ST); ஆங்கிலம்: Energy Commission of Malaysia) (ECM); என்பது மலேசிய நடுவண் அரசு சார்ந்த மின்சாரம்; எரிவாயு வழங்கல் சேவைகளுக்கு (Electricity and Natural Gas Supply Industry) பொறுப்பு வகிக்கும் ஆணையம் ஆகும்.[1]

எரிசக்தி ஆணைய சட்டம் 2001-இன் (Energy Commission Act 2001) கீழ் தீபகற்ப மலேசியா மற்றும் சபா எரிசக்தி துறைக்கான புதிய கட்டுப்பாட்டாளராக 2001-ஆம் ஆண்டில், இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

பொது

உலக மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கலின் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும்; எரிசக்தித் துறை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைவதை உறுதி செய்யும் வகையிலும்; இந்த ஆணையம் நிறுவப்பட்டது.

மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கல் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளையும் இந்த ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது; மற்றும் ஊக்குவிப்பு செய்கிறது.[2]

ஆணையம் தொடர்பான சட்டங்கள்

  • மின்சாரம் வழங்கல் சட்டம் 1990
    • (Electricity Supply Act 1990)
  • உரிமம் வழங்கல் ஒழுங்குமுறை 1990
    • (License Supply Regulation 1990)
  • எரிவாயு வழங்கல் சட்டம் 1993
    • (Gas Supply Act 1993)
  • மின்சார ஒழுங்குமுறை 1994
    • (Electricity Regulation 1994)
  • எரிவாயு வழங்கல் ஒழுங்குமுறை 1997
    • (Gas Supply Regulation 1997)

வரலாறு

1990-ஆம் ஆண்டில் தனியார் மயமாக்கலுக்கு முன், தீபகற்ப மலேசியா மற்றும் சபா பகுதிகளில் மின்சாரம் வழங்கல்; திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்கான பொறுப்புகள் அனைத்தும் தேசிய மின்சார வாரியம் (National Electricity Board) மற்றும் சபா மின்சார வாரியம் (Sabah Electricity Board) ஆகிய இரு வாரியங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

எரிசக்தி அமைச்சின் கீழ் முன்பு இருந்த மின் ஆய்நர் துறையானது (Electrical Inspectorate Department), தன்னிச்சையான மின் உற்பத்தியாளருக்கு (Independent Power Producer) உரிமம் வழங்குவதற்கும்; மின் தளவாட நிறுவல்கள் (Electrical Installations) மற்றும் மின் உபகரணங்களின் பாதுகாப்பிற்கும் (Safety of Electrical Equipments) பொறுப்பாக இருந்தது. அதே வேளையில், சரவாக் மாநிலத்திற்கு, சரவாக் மின்சாரம் வழங்கல் கழகம் (Sarawak Electricity Supply Corporation) பொறுப்பாக இருந்தது.

எரிசக்தி ஆணையம் சட்டம் 2001

1990-ஆம் ஆண்டில், மின் ஆய்நர் துறை நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மின்சாரம் வழங்கல் சட்டம் 1990-இன் (Electricity Supply Act 1990) கீழ் தீபகற்ப மலேசியா மற்றும் சபாவில்; மின்சாரம் வழங்கல் துறை (Department of Electricity Supply) உருவாக்கப்பட்டது.

எரிசக்தி ஆணையம் சட்டம் 2001 (Energy Commission Act 2001) மலேசிய நாடாளுமன்றத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கல் துறை இயங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எரிசக்தி ஆணையம் (Energy Commission 2001) மே 1-இல் நிறுவப்பட்டது; மற்றும் 2 சனவரி 2002-இல், அந்த ஆணையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்