மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி Parti Pribumi Bersatu Malaysia (பெர்சத்து) | |
---|---|
சுருக்கக்குறி | பிபிபீஏம் |
நிறுவனர் | மகாதீர் பின் முகமது |
முதன்மை துணைத் தலைவர் | அகமட் பைசால் அசுமு |
துணைத் தலைவர்கள் | ரொனால்டு கியான்டி முகமட் ரட்சி ஜிடின் அஸ்மின் அலி |
தலைமைச் செயலாளர் | அசா சைனுடின் |
இளைஞர் பிரிவு தலைவர் | வான் அகமட் பைசால் |
மகளிர் பிரிவு தலைவி | ரினா அருண் |
குறிக்கோளுரை | Bersatu, Beramanah, Bermaruah (ஒன்றுபட்ட, நம்பகமான, கண்ணியமான) |
தொடக்கம் | 8 செப்டம்பர் 2016[1][2] |
சட்ட அனுமதி | 14 சனவரி 2017[3] |
கலைப்பு | 5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[4] |
பிரிவு | அம்னோ |
தலைமையகம் | புத்ராஜாயா |
செய்தி ஏடு | MY BERSATU[5] Unofficial: MalaysiaNow |
உறுப்பினர் (2020) | 563,524[6] ▲ |
தேசியக் கூட்டணி | பெரிக்காத்தான் நேசனல் |
பண் | எங்கள் போராட்டம் |
தேர்தல் சின்னம் | |
கிளாந்தான், திராங்கானு, சபா தவிர்த்து பெர்சத்து சபா பெர்சத்து கிளாந்தான், திராங்கானு | |
இணையதளம் | |
bersatu |
பெர்சத்து அல்லது பிபிபீஏம் எனும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி; (மலாய்: Parti Pribumi Bersatu Malaysia (BERSATU அல்லது PPBM); ஆங்கிலம்: Malaysian United Indigenous Party; சீனம்:土著团结党; ஜாவி: ڤرتي ڤريبومي برساتو مليسيا ); என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக முகிதீன் யாசின் இருக்கிறார்.[7]
பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் சரிந்த பின்னர், பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி (Perikatan Nasional); மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியில் (Barisan Nasional) இது ஒரு முக்கியமான கட்சியாகும்.
பொது
14 ஜனவரி 2017-இல், சங்கப் பதிவாளரால் (Registrar of Societies), பெர்சத்து கட்சி அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மற்றும் பெர்சத்து சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசிய தேர்தல் ஆணையம் (Malaysian Election Commission) அங்கீகரித்தது.
மே 2020 முதல் ஆகஸ்டு 2021 வரை பிரதமர் பதவியையும், அமைச்சரவையில் பெரும்பான்மையான பதவிகளையும் கட்சி தக்க வைத்து இருந்தது.[8]
பூமிபுத்ரா உறுப்பினர்கள்
இந்தக் கட்சியின் நிறுவன உறுப்பினர்கள்; ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான (அம்னோ) மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியின் கிளர்ச்சிக் குழுவான காபுங்கான் கெத்துவா சாவாங்கான் (Gabungan Ketua Cawangan Malaysia) கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
பூமிபுத்ராக்கள் மட்டுமே இந்தக் கட்சியில் முழு உறுப்பினர்களாக முடியும். பூமிபுத்ரா அல்லாதவர்கள் கட்சியில் இணை உறுப்பினர்களாகச் சேரலாம். இருப்பினும் அவர்களுக்கு வாக்களிக்கவும் மற்றும் கட்சித் தேர்தல்களில் போட்டியிடவும் தகுதி இல்லை.[9]
மேற்கோள்கள்
- ↑ Mazwin Nik Anis (8 September 2016). "Zahid: RoS approves Muhyiddin's party, will be known as PPBM". The Star. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
- ↑ Azura Abas; Irwan Shafrizan Ismail; Zanariah Abd Mutalib (5 April 2018). "(Update) RoS slaps provisional dissolution order on PPBM". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
- ↑ the Sun Daily (2017-01-14). "ROS: PPBM has been legalised and approved to ROS and EC". the Sun Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-14.
- ↑ ROS temporarily dissolves PPBM
- ↑ "This apps information is from the official website of BERSATU (please see the bottom of the official website of BERSATU)" (in English). BERSATU.org. https://bersatu.org/. ""Muhyiddin: Sila muat turun aplikasi rasmi MyBERSATU seperti yang tertera di bahagian paling bawah laman web rasmi Parti BERSATU Malaysia""
- ↑ Madiha Abdullah (9 September 2020). "Bersatu sasar 1 juta ahli menjelang hujung tahun ini" (in Malay). Astro AWANI. https://www.astroawani.com/berita-malaysia/bersatu-sasar-1-juta-ahli-menjelang-hujung-tahun-ini-258630.
- ↑ Utusan Digital, Zareen Humairah Sejahan (2021-08-16). "All Perikatan Nasional Cabinet resign". Utusan Digital. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ Utusan Digital, Zareen Humairah Sejahan (2021-08-16). "All Perikatan Nasional Cabinet resign". Utusan Digital. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ Arfa Yunus (17 January 2018). "Syed Saddiq pledges to do away with PPBM's Bumiputera-centric position". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.