மாங்கனீசு(II) ஆக்சைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
1344-43-0 ![]() | |
பப்கெம் | 14940 |
வே.ந.வி.ப எண் | OP0900000 |
UNII | 64J2OA7MH3 ![]() |
பண்புகள் | |
MnO | |
வாய்ப்பாட்டு எடை | 70.9374 கி/மோல் |
தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் அல்லது தூள் |
அடர்த்தி | 5.43 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,945 °C (3,533 °F; 2,218 K) |
கரையாது | |
கரைதிறன் | அமிலத்தில் கரையும் |
+4850.0·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.16 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | பாறை உப்பு (கனசதுரம்), cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் (Mn2+); எண்முகம் (O2−) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy offormation ΔfH |
−385 கிலோயூல்·மோல்−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
60 யூல்·மோல்−1·K−1[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(II) புளோரைடு மாங்கனீசு(II) சல்பைடு மாங்கனீசு(II) செலீனைடு]] மாங்கனீசு(II) தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(II) ஆக்சைடு (Manganese(II) oxide) என்பது MnO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] இது பச்சை நிற படிகங்களாக உருவாகிறது. உரங்கள் மற்றும் உணவு சேர்க்கைப் பொருட்களின் ஓர் அங்கமாக பெரிய அளவில் இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கட்டமைப்பு
பல மோனாக்சைடுகளைப் போலவே, MnO சேர்மமும் பாறை உப்பு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதில் நேர்மின் அயனிகளும் எதிர்மின் அயனிகளும் எண்முகமாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும் பல ஆக்சைடுகளைப் போலவே, மாங்கனீசு(II) ஆக்சைடும் பெரும்பாலும் விகிதாச்சாரவியல் அடிப்படையில் இருப்பதில்லை. இச்சேர்மத்தில் MnO முதல் MnO1.045 வரை விகிதங்கள் மாறுபடும்.[3]
118 கெல்வின் வெப்பநிலைக்கு கீழ் MnO எதிர்பெர்ரோ காந்தப்பண்பை கொண்டுள்ளது.[3] MnO சேர்மத்தின் காந்தக் கட்டமைப்பானது நியூட்ரான் விளிம்புவளைவு சோதனையால் தீர்மானிக்கப்பட்டது. இச்சோதனையால் தீர்மானிக்கப்பட்ட முதல் சேர்மம் MnO ஆகும்.[4] இந்த அறிக்கை 1951 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[5] Mn2+ அயனிகள் முகமைய கனசதுர காந்த துணை-அணிக்கோவையை உருவாக்குகின்றன. அங்கு ஃபெரோ காந்தமாக இணைக்கப்பட்ட தாள்கள் அருகிலுள்ள தாள்களுடன் இணையாக உள்ளன.
வினைகள்
மாங்கனீசு(II) ஆக்சைடு ஓர் அயனி ஆக்சைடின் பொதுவான இரசாயன வினைகளுக்கு உட்படுகிறது. அமிலங்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது இது தொடர்புடைய மாங்கனீசு(II) உப்பு மற்றும் தண்ணீராக மாறுகிறது.[3] மாங்கனீசு(II) ஆக்சைடின் ஆக்சிசனேற்ற வினையில் மாங்கனீசு(III) ஆக்சைடை அளிக்கிறது.
தயாரிப்பு
மாங்கனோசைட்டு என்ற கனிமமாக மாங்கனீசு(II) ஆக்சைடு இயற்கையில் தோன்றுகிறது. ஐதரசன், கார்பன் மோனாக்சைடு அல்லது மீத்தேன் ஆகியவற்றுடன் சேர்த்து MnO2 சேர்மத்தை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வணிக ரீதியாக மாங்கனீசு(II) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது:[2]
- MnO2 + H2 → MnO + H2O
- MnO2 + CO → MnO + CO2
450 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது, மாங்கனீசு(II) நைட்ரேட்டு ஆக்சைடுகளின் கலவையை அளிக்கிறது. MnO2-x, இது ஐதரசனுடன் சேர்க்கப்பட்டு ≥750 °செல்சியசு வெப்பநிலையில் மோனாக்சைடாகக் குறைக்கப்படும். MnO குறிப்பாக நிலைப்புத்தன்மை கொண்டதாகும். மேலும் ஒடுங்குவதை இது எதிர்க்கிறது.[6] கார்பனேட்டை சூடாக்குவதன் மூலமும் MnO தயாரிக்கலாம்:[7]
- MnCO3 → MnO + CO2
இந்த நெருப்பிலிடும் செயல்முறை காற்றில்லா முறையில் நடத்தப்படுகிறது. இது Mn2O3 வடிவத்தை உருவாக்காது. ஒரு மாற்று வழியாக பெரும்பாலும் கற்பித்தல் நோக்கங்களுக்காக ஆக்சலேட் முறை பயன்படுத்தப்படுகிறது. இரும்பு ஆக்சைடு மற்றும் வெள்ளீய ஆக்சைடு ஆகியவற்றின் தயாரிப்புக்கும் பொருந்தும். ஆக்சிசன் இல்லாத சூழலில் (பொதுவாக CO2 இல்லாத சூழல்) சூடாக்கும்போது, மாங்கனீசு(II) ஆக்சலேட்டு MnO ஆக சிதைகிறது:[8]
- MnC2O4·2H2O → MnO + CO2 + CO + 2 H2O
பயன்கள்
மாங்கனீசு சல்பேட்டுடன் சேர்க்கப்பட்டு MnO சேர்மம் உரங்கள் மற்றும் உணவு சேர்க்கைகளின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் டன்கள் MnO பயன்படுத்தப்படுகிறது. அல்லைல் ஆல்ககால் தயாரிப்பில் ஒரு வினையூக்கியாகவும், பீங்கான், வண்ணப்பூச்சுகள், வண்ணக் கண்ணாடி, நெசவுத்துணிகளில் அச்சிடுதல் போன்ற பயன்பாடுகளுக்கும் மாங்கனீசு(II) ஆக்சைடு பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. ISBN 978-0-618-94690-7.
- ↑ 2.0 2.1 2.2 Arno H. Reidies "Manganese Compounds" Ullmann's Encyclopedia of Chemical Technology 2007; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123
- ↑ 3.0 3.1 3.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
- ↑ J.E Greedon, (1994), Magnetic oxides in Encyclopedia of Inorganic chemistry Ed. R. Bruce King, John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
- ↑ Shull, C. G.; Strauser, W. A.; Wollan, E. O. (1951-07-15). "Neutron Diffraction by Paramagnetic and Antiferromagnetic Substances". Physical Review (American Physical Society (APS)) 83 (2): 333–345. doi:10.1103/physrev.83.333. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-899X.
- ↑ Wellbeloved, David B.; Craven, Peter M.; Waudby, John W. (2000). "Manganese and Manganese Alloys". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a16_077. ISBN 3527306730.
- ↑ W.H. McCarroll (1994) Oxides- Solid State Chemistry, Encyclopedia of Inorganic Chemistry Ed. R. Bruce King, John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
- ↑ Arthur Sutcliffe (1930) Practical Chemistry for Advanced Students (1949 Ed.), John Murray - London.