மாலிக் ஆம்பர்
மாலிக் ஆம்பர் | |
---|---|
பிறப்பின்போதான் பெயர் | வாக்கோ[3] Chapu[3] |
பிறப்பு | 1548[4] Harar[5] |
இறப்பு | 11 மே1626 (அகவை 77–78) |
சார்பு | அகமத்நகரின் நிசாம் ஷா |
மாலிக் ஆம்பர் (1548 – 13 மே 1626) என்பவர் சித்தி இனத்து இராணுவத் தலைவரும், இந்தியாவின் தக்காணப் பீடபூமியின் அகமதுநகர் சுல்தானகத்தின் ஆளுநராக இருந்தவரும் ஆவார்.[6] அடல் சுல்தானகத்தில் (தற்போதைய எத்தியோப்பியா) பிறந்த இவர் தமது பெற்றோர்களின் வறுமையினால் அடிமையாக விற்க்கப்பட்டு இந்தியாவிக்கு கொண்டுவரப்பட்டார். இந்தியாவில் இருந்தபோது இவர் 1500 ஆண்கள் கொண்ட ஒரு கூலிப்படையினை உருவாக்கினார். இது தக்காணப் பீடபூமியில் அமைந்திருந்தது. இப்படையினை உள்ளூர் மன்னர்கள் தேவைக்கேற்ப பணியமர்த்தினர். தமது நிர்வாகத் திறனால் அகமதுநகர் சுல்தானகத்தின் ஆளுநராக இவர் உயர்ந்தார். இவர் இப்பகுதியில் கரந்தடிப் போர் முறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தக்காணப் பகுதியில் வருவாய் தீர்வை மேற்கொண்ட பெருமைக்குரியவர் இவர். இதுவே பின்னாகளில் இவ்வகை சிக்கலுக்கு தீர்வு காண அடிப்படையாக அமைந்தது. அவர் குஜராத்தின் சித்திகளுக்கு வணக்கத்திற்குறிய நபர் ஆவார். இவர் முகலாயர்களின் வலிமையினை அடக்கி, பிஜாப்பூரின் ஆதில் ஷாவின் நிலையை உயர்த்தினார்.[7][8]
மேற்கோள்கள்
- ↑ Sheikh Chand, Malik Ambar,"Ehde Afreen; Hyderabad; 1929
- ↑ Times of India, Plus Supplement, ஜூலை 1999,
- ↑ 3.0 3.1 Kenneth X. Robbins, John McLeod (2006). African Elites in India. Mapin. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8188204730. இணையக் கணினி நூலக மைய எண் 701823920.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
- ↑ "Malik Ambar: The African slave who built Aurangabad and ruined the game for Mughals in the Deccan".
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Michell, George & Mark Zebrowski. Architecture and Art of the Deccan Sultanates (The New Cambridge History of India Vol. I:7), Cambridge University Press, Cambridge, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56321-6, p.11-12