மாலிப்டினம்(V) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
மாலிப்டினம்(V) புளோரைடு
மாலிப்டினம் பெண்டாபுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
138619-84-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139613 |
| |
பண்புகள் | |
MoF5 | |
வாய்ப்பாட்டு எடை | 190.952 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
அடர்த்தி | 3.44 கி/செ.மீ3 |
உருகுநிலை | 66 °C (151 °F; 339 K) |
கொதிநிலை | 215.6 °C (420.1 °F; 488.8 K) |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 96.6 யூ/மோல்·கெ |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிகரணி, நீராற்பகுப்பில் HF ஐ வெளியேற்றுகிறது. |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம்(V) புளோரைடு (Molybdenum(V) fluoride) என்பது MoF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், மஞ்சள் நிறப்படிகங்களாகக் காணப்படும் மாலிப்டினம்(V) புளோரைடு ஒரு நல்ல ஆக்சிகரணியாக செயல்படுகிறது. மாலிப்டினம் ஐம்புளோரைடு, மாலிப்டினம் பெண்டாபுளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
மாலிப்டினம் அறுகார்பனைல் என்று அழைக்கப்படும் மாலிப்டினம் எக்சாகார்பனைலுடன் புளோரின் வாயு – 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து மாலிப்டினம்(V) புளோரைடு உருவாகிறது.