மீப்பெரும் கருந்துளை

ஒரு மீப்பெரும் நிறை கருந்துளை, அருகில் உள்ள வீண்மீனை தனக்குள் ஈர்த்துக் கொள்ளுவது போல் அமைக்கப்பட்ட வண்ண ஒளிப்படம்

மீப்பெரும் கருந்துளை (supermassive black hole) என்பது பெரிய வகைக் கருந்துளைகளைக் குறிப்பது. இத்தகைய கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறையை உடையவை. இவை கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் பேரடை மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. நமது பால் வழி விண்மீன் பேரடையில் தனுசு எ* வீண்மீனின் அமைவிடத்தில் மீப்பெரும் நிறை கருந்துளை இருப்பதாக நம்பப்படுகிறது.

மீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதைக் குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.

மேலும் படிக்க