முல்லன்பூர் கரிப்தாஸ்

முல்லன்பூர் கரிப்தாஸ்
நகரம்
முல்லன்பூர் கரிப்தாஸ் is located in பஞ்சாப்
முல்லன்பூர் கரிப்தாஸ்
முல்லன்பூர் கரிப்தாஸ்
இந்தியாவின் பஞ்சாப்பில் அமைவிடம்
முல்லன்பூர் கரிப்தாஸ் is located in இந்தியா
முல்லன்பூர் கரிப்தாஸ்
முல்லன்பூர் கரிப்தாஸ்
முல்லன்பூர் கரிப்தாஸ் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°47′56″N 76°44′35″E / 30.799°N 76.743°E / 30.799; 76.743
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்எஸ் ஏ எஸ் நகர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,143
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

முல்லன்பூர் கரிப்தாஸ் என்பது இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள எஸ். ஏ. எஸ் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மொகாலி, சண்டிகர் நகரங்களுக்கு வடக்கே உள்ளது. கரிப்தாஸ் கிராமம் இந்த நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [1]

வரலாறு

இந்த நகரம் மன்னர் ஹத்னோரியா ராஜாவின் தளபதியான கரிப்தாசால் நிறுவப்பட்டது. இந்த நகரத்தின் முழு பெயர் "முல்லன்பூர் கரிப்தாஸ் டா". துர்க்கையின் ரூபமான ஜெயந்தி தேவி, பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காகக் கொடூரமான மன்னருக்கு எதிராகப் போராடுமாறு கரிப்தாஸைக் கேட்டதாகப் புராணக்கதை கூறுகிறது. கரிப்தாஸ் போரில் வெற்றி பெற்று முல்லன்பூரைத் தனது பேரரசின் முதல் கிராமமாக நிறுவினார்.

மக்கள் வகைப்பாடு

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முல்லன்பூர் கரிப்தாஸ் மக்கள் தொகை 6143 ஆகும்.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும், பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். முல்லன்பூர்-கரிப்தாஸ் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 76% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 67% ஆகவும் உள்ளது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 51.27 மக்கள் தொகையில் சீக்கியர்கள், 46.20% இந்துக்கள் ஆவர்.[3] மொகாலி பெருநகர மேம்பாட்டு ஆணையம் இந்த நகரத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட குடியிருப்பு திட்டத்தை கொண்டுள்ளது.

விளையாட்டு

மகாராஜா யாதவிந்திரா சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் இந்த நகரத்தில் உள்ள ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட மைதானமாகும். முல்லன்பூரில் 150 ஹெக்டேர் பரப்பளவில் கோல்ஃப் மைதானத்தை உருவாக்க பஞ்சாப் அரசு திட்டமிட்டிருந்தது. மேலும் உள்ளக அரங்கு, திறந்த மைதானம் அடங்கிய விளையாட்டரங்கும் அங்கு கட்டப்படும்.[4]

மேற்கோள்கள்