மூக்கணி

மூக்கணி அணிந்த இந்திய மணமகள்

மூக்கணி என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தே இந்தியாவில் பெண்களின் அலங்காரத்தில் முக்கிய பங்களிக்கும் ஒரு வகை முக நகையாகும்.

அம்சங்கள்

மூக்கணி அல்லது மூக்குச் சங்கிலி என்பது மூக்கிலும் காதிலும் துளையிட்டு ஏற்படுத்தும் துளைகளுக்கு இடையே இணைத்து போடப்படும் ஒரு அணிகலனாகும். பொதுவாக, "சங்கிலிகளாக" அல்லது சங்கிலி இணைப்புகளாக, இருக்கும் இவ்வணி (எப்போதும் இல்லை என்றாலும்) பெரும்பாலும் தங்கம், வெள்ளி போனற உலோகங்களால் செய்யப்பட்டும். சில சமயங்களில் இவை செபமாலை மணிகளைப் போன்றும் செய்யப்படலாம். இந்த அணிகலணில் மணிகள், ஜிமிக்கிகள் போன்றவை அலங்காரத்திற்காக இணைக்கப்படும்.

வரலாறு

மூக்கணி பொதுவாக பல நூற்றாண்டுகளாக தெற்காசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் (சூடான்) உள்ள பெண்களால் அணியப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெண்கள் 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே அணிந்து வருவது பல்வேறு இந்திய சிற்பங்கள், ஓவியங்கள் வழியாகத் தெளிவாக அறியலாம்.[1]

பெரும்பாலும் திருமண விழாக்களில் இது முக்கியமாக அணியப்படுகிறது. திருமண நாள் இரவில், மணமகள் மூக்குச் சங்கிலியை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று இந்து பாரம்பரியம் வலியுறுத்துகிறது, அது ஒரு சங்கிலியால் காதில் அல்லது த்லைமுடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மூக்கு சங்கிலி இரண்டு காரணங்களுக்காக பெண்களால் அணியப்படுகிறது: முதலில் திருமணத்தின் தெய்வமாக கருதப்படும் பார்வதி தேவிக்கு மரியாதை மற்றும் பக்தியைக் காட்டவும் இரண்டாவதாக ஆனால் முதல் காரணத்திற்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தான, தனது கணவரிடம் பக்தி மற்றும் அவருக்கு கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. இந்த நடைமுறை 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து வருகிறது, அப்போது மணமகள்கள் கணவரின் சொத்தாகக் கருதப்பட்டனர், மேலும் கணவர் அறைக்குள் அவர்போது, இப்படி அலங்கருத்திருந்தால் அது மங்களகரமானதவும் மகிழ்ச்சிக்கான பொருளாகவும் எண்ணப்படும் எனவே பெண்கள் தங்களை அலங்கரிக்க மூக்குச் சங்கிலியை அணிவார்கள்.

துணைக் கலாச்சாரம்

தற்காலத்தில், கோதிக் ஒப்பனைக் கலாச்சாரத்தின் படி சமீபமாக மீண்டும் மூக்கு சங்கிலி அணிவது உலகம் முழுவதும் பரவலாக உயர்ந்துள்ளது. பல்வேறு துணை கலாச்சாரங்களில் அதன் பயன்பாட்டிற்காக அணியப்படுகிறது. [2]

மேற்கோள்கள்