மூவார்

மூவார்
Muar
Bandar Maharani
Bandar Maharani Bandar Diraja
بندر مهراني بندر دراج
 ஜொகூர்
மேலிருந்து வலது புறம்: மூவார் மணிக்கூண்டு, காலனித்துவக் கால கடைவீதி, சுல்தான் இசுமாயில் பாலம், சுல்தான் இப்ராகிம் ஜமேக் பள்ளிவாசல்
குறிக்கோளுரை:
திறமையுடன் நம்பகமாய் மாறும் வளம்
Cekap Amanah Dinamik Makmur
ஆள்கூறுகள்: 2°3′00″N 102°34′00″E / 2.05000°N 102.56667°E / 2.05000; 102.56667
நாடு மலேசியா
மாநிலம்ஜொகூர்
மாவட்டம்மூவார் மாவட்டம்
ஊராட்சி1885
நகராட்சி2001
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மூவார் நகராட்சி
 • தலைவர்சமீல் அசுனி அப்துல்லா
பரப்பளவு
 • மொத்தம்1,376 km2 (531 sq mi)
ஏற்றம்
36.88 m (121 ft)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்3,14,776
 • அடர்த்தி230/km2 (590/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
84000
தொலைபேசி எண்கள்06-95xxxxx - 06-98xxxxx
போக்குவரத்துப் பதிவெண்கள்Jxx
இணையதளம்www.mpmuar.gov.my
www.johordt.gov.my/pdmuar

மூவார் அல்லது பண்டார் மகாராணி (மலாய்; ஆங்கிலம்: Muar அல்லது Bandar Maharani சீனம்: 麻坡), என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தின் வரலாற்றுத் தலைப்பட்டினம் ஆகும். இந்த நகரம் 'பண்டார் மகாராணி' என்று தற்போது அழைக்கப் படுகிறது. இது ஓர் அரச நகரமாகும். ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு, பத்து பகாட், குளுவாங் நகரங்களுக்கு அடுத்து நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

ஜொகூர் மாநிலத்தில் வட மேற்கே அமைந்து இருக்கும் இந்த நகரத்தின் மாவட்டமும் மூவார் என்றே அழைக்கப் படுகிறது. முன்பு இந்த நகரம் தங்காக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூவார் என்பது தனி நகரமாகவும், ஒரு தனி மாவட்டமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.[2]

பொது

மலேசியாவில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] இந்த நகர்ம் அண்மையில், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இசுகந்தர் அவர்களால் ஜொகூர் அரச நகரமாக அறிவிக்கப்பட்டது. இந்த நகரம் மூவார் மாவட்டம் மற்றும் புதிய தங்காக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[4]

தென்கிழக்கு ஆசியாவின் தூய்மையான நகரங்களில் மூவார் நகரமும் ஒன்றாகும். 2017-ஆம் ஆண்டில், இந்த நகரத்திற்கு ஆசியான் தூய்மையான நகர வழங்கப்பட்டது.[5]

வரலாறு

மலேசிய நகரங்களில் மூவார் நகரம் மிகவும் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு பல வரலாற்று பதிவுகளும், தொல்பொருள் பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. மலாக்கா சுல்தானகம் தொடங்குவதற்கு முன்பாகவே மூவாரின் வரலாறு தொடங்கி விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1361-இல், மஜாபாகித் இந்துப் பேரரசின் ஒரு பகுதியாக மூவார் இருந்து உள்ளது.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா. இவர் சுமத்திரா, துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டதும், மலாக்காவிற்குச் சென்ற போது, இந்த மூவார் பகுதியில் கோத்தா பூரோக் எனும் இடத்தில் சில காலம் தங்கி இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும், மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த முகமுட் ஷா, இந்த மூவாரில் தான் தஞ்சம் அடைந்தார். மூவாரில் இருந்தவாறு முகமுட் ஷா, போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போராடி வந்தார். [6]

மலாக்காவை ஆட்சி செய்த ஏழாவது அரசர், சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷாவின் (1477–1488) கல்லறையும் சேதம் அடைந்த நிலையில் இன்னும் மூவாரில் தான் இருக்கிறது. அந்தக் கல்லறையை போர்த்துகீசியர்கள் சிதைத்து விட்டனர். மலேசிய வரலாற்றுப் பதிவுகளில் மூவார் எனும் நகரம் பல இடங்களில் காணப்படுகிறது.

மூவார் போர்

மூவாரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்த போது, டச்சுக்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போர்த்தலேசா டி மூவார் எனும் கோட்டையை இங்கு கட்டினார்கள். இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இங்கு ஒரு பெரிய போர் நடந்தது. அதை மூவார் போர் என்று அழைக்கிறார்கள்.[7]

1942 ஜனவரி 14-இல் இருந்து 22 வரை, மூவாருக்கு அருகாமையில் இருந்த கெமிஞ்சே, மூவார் ஆறு, பக்கிரி மலை போன்ற இடங்களில் மூவார் போர் பலமான சண்டை நடைபெற்றது. மலாயா மீது ஜப்பானியர்கள் தொடுத்த தாக்குதல்களில் இதுவே ஆகக் கடைசியான போர். இந்தப் போரில், பிரித்தானியர்களுக்கு உதவியாக இருந்த 45-வது இந்தியக் காலாட்படை ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டது. [8][9]

புக்கிட் கெப்போங் சம்பவம்

மலாயா அவசரகாலத்தின் போது, மூவாருக்கு அருகில் இருக்கும் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தை மலாயா கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் சுடும் ஆயுதங்களுடன் தாக்கினர். 1950 பிப்ரவரி 23-ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் 26 போலீஸ்காரர்களும், அவர்களின் குடும்பத்தாரும் உயிரிழந்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சி, முன்பு மலாயா தேசிய விடுதலை இராணுவம் (Malayan National Liberation Army) (MNLA) என்று அழைக்கப்பட்டது.[10]

மூவார் மாவட்டம்

மூவார் மாவட்டத்தின் பரப்பளவு 2346.12 சதுர கிலோமீட்டர்கள். மூவார் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்து இருக்கிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 150 கி,மீ. தென் கிழக்கிலும், சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. வட மேற்கிலும், மலாக்கா நகரில் இருந்து 45 கி.மீ. தெற்கிலும் இருக்கிறது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.

மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது ஒரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு. தங்காக் ஒரு துணை மாவட்டமாக நிலை உயர்த்தப் பட்டதும், மூவார் ஒரு தனி நகராண்மைக் கழகமானது. இரண்டும் இப்போது தனித்தனியாகச் செயல் படுகின்றன.

மூவார் புறநகர்

மூவார் புறநகரில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:

  • பண்டார் மகாராணி
  • சுங்கை பாலாங்
  • ஸ்ரீ மெனாந்தி
  • பாரிட் ஜாவா
  • பாரிட் பாக்கார்
  • பாக்ரி
  • புக்கிட் நானிங் / ஆயர் ஈத்தாம்
  • சுங்கை தெராப்
  • ஜோராக் / பாகோ
  • லெங்கா
  • புக்கிட் கெப்போங்

லேடாங் புறநகர்

லேடாங் புறநகரில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:

  • கீசாங்
  • சுங்கை மத்தி
  • செரோம்
  • புக்கிட் காம்பிர்
  • கிரிசெக்
  • பஞ்சூர்
  • குண்டாங்
  • கம்போங் தெராத்தாய்
  • புக்கிட் செராம்பாங்

மூவார் கலிடி தமிழ்ப்பள்ளி

மூவார் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 108‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் 30-ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[11][12]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD5080 மூவார் SJK(T) Jalan Khalidi ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி 84000 மூவார் 108 15

மூவார் நகரப்படத் தொகுப்பு

மேற்கோள்

  1. "ASEAN TOURISM FORUM 2018" (PDF). asean.org (in ஆங்கிலம்). Archived from the original (PDF) on 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  2. Muar to say goodbye to Tangkak பரணிடப்பட்டது 1 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், 20 November 2006, The Star (Malaysia)
  3. "ASEAN TOURISM FORUM 2018" (PDF). asean.org (in ஆங்கிலம்). Archived (PDF) from the original on 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  4. Muar to say goodbye to Tangkak பரணிடப்பட்டது 1 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  5. "Muar Gets Honoured With Asean Clean Tourist City Award". MIX. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  6. "Parameswara, Malacca empire founder, have set up a settlement in Pagoh, Ulu Muar after fleeing from Temasik before heading to Malacca". Archived from the original on 2014-06-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  7. The Battle of Muar was the last major battle of the Malayan campaign. It took place from 14 January to 22 January 1942 around Gemensah Bridge and on the Muar River.
  8. "A complete failure which resulted in the near-annihilation of the British-Indian 45th Brigade and heavy casualties for its two attached Australian Infantry battalions". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.
  9. "After the Australian Imperial Force's 30th Battalion had ambushed the Japanese at Gemencheh on the 14th, the 29th Battalion were now engaged in a famous action to hold up the Japanese at the Muar River". Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.
  10. Bukit Kepong Incident was an armed encounter which took place on February 23, 1950 between the Federation of Malaya Police and the communist terrorists of Malayan Communist Party during the Malayan Emergency.
  11. "PANCARAGAM SJKT JALAN KHALIDI" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  12. "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.

வெளி இணைப்புகள்