மைக்கால் மலைகள்

மைகால் மலைகள்
கபிர்தம் மாவட்டத்திலிருந்து மைகால் மலைகளின் காட்சி
உயர்ந்த புள்ளி
உயரம்941 m (3,087 அடி)
பெயரிடுதல்
தாயகப் பெயர்मैकल पर्वतमाला Error {native name checker}: parameter value is malformed (help)
புவியியல்
மைகால் மலைகள் is located in இந்தியா
மைகால் மலைகள்
மைகால் மலைகள்
மைகால் மலைத்தொடரின் இருப்பிடம்
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
Riversநர்மதா and வைகங்கா
தொடர் ஆள்கூறு22°30′N 81°30′E / 22.500°N 81.500°E / 22.500; 81.500

மைக்கால் மலைகள் (Maikal Hills) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள மலைத்தொடர் ஆகும். சத்தீசுகரின் கவார்தா மாவட்டத்திலுள்ள சாத்புரா-வின் கிழக்கு பகுதியில் மைக்கால் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 340 மீ முதல் 941 மீ வரை இருக்கும். அமைதி மற்றும் அழகான சூழ்நிலையால் இது மாநிலத்தின் மிகவும் அழகான இடம் ஆகும். மிக அடர்த்தியான காடுகள் மற்றும் குறைவான மக்கள் தொகை கொண்டதால் இங்கு பல்வேறு சிற்றோடைகள் மற்றும் ஆறுகள் தோன்றுகின்றன, அதில் குறிப்பிடத்தக்கது நர்மதை மற்றும் வைகங்கையின் கிளைநதிகள் ஆகும். இந்த மலைகளில் இரண்டு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் பைகர்கள் மற்றும் கோண்டுகள் ஆவர். இந்த மலைத்தொடரில் பல அரிய வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகங்ள் இருக்கின்றன[1].

புவியியல்

மைக்கால்கள் என்பன மத்திய இந்தியாவின் மலைப் பகுதிகள் ஆகும். இந்த மலைத்தொடர் சத்தீசுகர் மாநிலத்தின் அகலமான நிலவமைப்பு வகைகளில் ஒன்றாகும். இதன் நிலவமைப்பு ஐநூறு கிலோமீட்டர் தூரம் வரை நீண்டு இருக்கின்றது. இதன் ஒரு பக்கத்தில் அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. மற்றொரு பக்கத்தில் மேல்காத் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் அமைந்துள்ளது[2].

இயற்கை பாதுகாப்பு மையங்கள்

கன்கா தேசியப் பூங்கா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மற்றும் பாலாகாட் மாவட்டத்தில் ஒரு புலிகள் பாதுகாப்பு சரணாலயம் சாத்புரா மலைகளில் அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை, பாரசிங்கா என்ற அழிந்து வரும் சதுப்புநில மான் இனத்திற்கு ஒரே புகலிடமாகவும் இருக்கின்றது.[3]

நிலவியல்

பாக்சைட்டு மற்றும் அலுமினியத் தாதுக்கள் இந்த மலைகளில் இருப்பதாக கருதப்படுகிறது.

புகைப்படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Maikal Hill Range in India
  2. "Maikal Range". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-14.
  3. "Kanha National Park". Archived from the original on 2016-04-19. பார்க்கப்பட்ட நாள் 2017-08-14.