மைக்கேல் சமர்

மைக்கேல் சமர்
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு பகுதி

பிரீனே இடிபாடுகளில் இருந்து மைக்கேல் மலையின் ஒரு பகுதியின் தோற்றம்.
நாள் ஆகத்து 27, கி.மு. 479
இடம் மைக்கேல், ஐயோனியா
37°38′10″N 27°06′28″E / 37.635985°N 27.107677°E / 37.635985; 27.107677
கிரேக்க வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
பாரசீகம் ஏஜியன் தீவுகளை இழக்கிறது, ஐயோனியா பாரசீக ஆட்சிக்கு எதிரான இரண்டாவது கிளர்ச்சியைத் தொடங்குகிறது
பிரிவினர்
கிரேக்க நகர அரசுகள் அகாமனிசியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Leotychides
சந்திபஸ்
Perilaus  
Artaÿntes[1]
Ithamitres
Mardontes  
Tigranes  
பலம்
40,000 வீரர்,
110-250 கப்பல்கள்
60,000 வீரர்,
300 கப்பல்கள்
இழப்புகள்
கணிசமானவை[2] பெரும்பாலான இராணுவமும், அனைத்து கப்பல்களும்[2]
Lua error in Module:Location_map at line 391: The value "{longitude}" provided for longitude is not valid.

மைக்கேல் சமர் (Battle of Mycale, பண்டைக் கிரேக்கம்Μάχη τῆς Μυκάλης  ; Machē tēs Mykalēs ) என்பது கிரேக்க பாரசீகப் போர்களின் போது கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவந்த இரண்டு பெரிய போர்களில் (மற்றொன்று பிளாட்டீயா போர் ) ஒன்றாகும். இது கி.மு. 479 ஆகத்து 27 அன்று சாமோஸ் தீவுக்கு எதிரே ஐயோனியா கடற்கரையில் உள்ள மைக்கேல் மலையின் சரிவுகளில் நடந்தது. எசுபார்த்தா, ஏதென்சு, கொரிந்த் உட்பட கிரேக்க நகர அரசுகளின் கூட்டணிக்கும், செர்கசின் பாரசீகப் பேரரசுக்கும் இடையே இந்தப் போர் நடந்தது.

இதற்கு முந்தைய ஆண்டு செர்க்செஸ் தலைமையில் நடந்த பாரசீக படையெடுப்பில், தெர்மோபைலே மற்றும் ஆர்ட்டெமிசியம் போர்களில் பாரசீகம் வெற்றிகளை ஈட்டியது. மேலும் தெசலி, போயோட்டியா, அட்டிகா போன்ற பகுதிகளைக் கைப்பற்றியது; இருப்பினும், அடுத்தடுத்து நடந்த சலாமிஸ் போரில், நேச நாட்டு கிரேக்க கடற்படைகள் சாத்தியமில்லாத வெற்றியைப் பெற்றன. எனவே பாரசீகம் பெலோனியாவை வெல்வது தடுக்கப்பட்டது. இதனால் செர்க்சஸ் பின்வாங்கினார். அடுத்த ஆண்டில் கிரேக்கர்களை வெற்றிகொள்ள அவரது தளபதி மார்தோனியசு கணிசமான இராணுவத்துடன் விட்டுவந்தார்.

கிமு 479 கோடையில், கிரேக்கர்கள் ஒரு பெரிய இராணுவத்தை திரட்டி பிளாட்டியா போரில் மார்தோனியசை எதிர்கொள்ள அணிவகுத்துச் சென்றனர். அதே நேரத்தில், கிரேக்க நேச நாட்டுக் கடற்படை சமோசுக்குச் சென்றது, அங்கு பாரசீக கடற்படையின் மனச்சோர்வடைந்த மீதமுள்ள கடற்படைகள் இருந்தன. பாரசீகர்கள், போரைத் தவிர்க்க முயன்று, மைக்கேல் மலைச் சரிவுகளுக்குக் கீழே தங்கள் கடற்படையைக் கொண்டு சென்றனர். மேலும் ஒரு பாரசீக இராணுவக் குழுவின் ஆதரவுடன், அரண் செய்யப்பட்ட முகாமை அமைத்தனர். கிரேக்கத் தளபதி லியோடிசைட்ஸ், எப்படியாயினும் பாரசீகர்களைத் தாக்க முடிவு செய்தார். அதன்படி கடற்படையை தரை இறங்கினார்.

பாரசீகப் படைகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டிய போதிலும், பலத்த கவசங்களைக் கொண்ட கிரேக்க ஹாப்லைட் வீரர்கள் தங்களைப் போரில் சிறந்தவர்கள் என்று மீண்டும் நிரூபித்தார்கள். இறுதியில் பாரசீக துருப்புக்களை விரட்டியடித்தனர், அவர்கள் தங்கள் முகாமுக்கு ஓடிவிட்டனர். பாரசீக இராணுவத்தின் கூட்டாளிகளாக இருந்த ஐயோனியன் கிரேக்கக் குழுக்கள் அவர்களிடமிருந்து விலகிச் சென்றன. மேலும் பாரசீக முகாம் தாக்கப்பட்டது. இதில் ஏராளமான பாரசீகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் பாரசீக கப்பல்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்டன. பாரசீக கடற்படையின் முழுமையான அழிவு, பிளாட்டியாவில் மார்டோனியசின் இராணுவத்தின் அழிவுடன் (மைக்கேல் போர் நடந்த அதே நாளில் என்று கூறப்பட்டது), கிரேக்க படையெடுப்பு முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்புகள்

  1. "Archived copy". Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2011-06-22.{cite web}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 According to Herodotus