மோன் மொழி

மோன் மொழி எழுத்துக்கள் பற்றிய விளக்கப்படம்
பர்மாவில் மோன் மொழி

மோன் மொழி ( / ˈmoʊ n /,[1] கேளீர்; மோன்: ဘာသာမန် [pʰesa mɑn]; மோன்-தாய் மொழி: ဘာသာမည် [pʰiəsa moʊn]; பர்மியம்: မွန်ဘာသာ ; தாய் மொழி: ภาษามอญ; என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். இந்த மொழி மோன் மக்களால் பேசப்படுகிறது. இந்த மொழி தாய்லாந்திலும் மியன்மாரிலும் பூர்வீக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 2010ல் மோன் மொழியை "அருகிய மொழி" ஆக வகைப்படுத்தியது.[3] மியான்மர், தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் மோன் மொழி பல அழுத்தங்களை எதிர்கொள்வதால், அங்கு மோன் வம்சாவளியைச் சேர்ந்த பலர் இப்போது பர்மியம் அல்லது தாய் மொழியை மட்டுமே பேசுகின்றனர். 2007 ஆம் ஆண்டில், மோன் மொழி பேசும் மக்கள் 800,000 முதல் 1 மில்லியன் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டது.[4] மியான்மரில், மோன் மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையான மக்கள் தெற்கு மியான்மரில், குறிப்பாக மோன் மாநிலத்தில் அதிகம் வாழ்கின்றனர், இதைத் தொடர்ந்து தனிந்தரி பிரதேசத்திலும் கயின் மாநிலத்திலும் வாழ்கின்றனர்.[5]

வரலாறு

மோன் மாயாசெடி கல்வெட்டு (கி.பி. 1113) மியான்மரிலுள்ள மிகப்பழைய கல்வெட்டு.

பர்மிய வரலாற்றில் மோன் மொழி ஒரு முக்கியமான மொழியாகவே இருந்து வருகிறது . 12 ஆம் நூற்றாண்டு வரை, ஐராவதி பள்ளத்தாக்கின் பொது மொழியாக இருந்தது, கீழ் ஐராவதியின் மோன் இராச்சியங்களில் மட்டுமல்ல, பாமர் மக்களின் மேல்நிலை பேகன் இராச்சியத்திலும் மோன் ஒரு பொது மொழியாகவே இருந்தது. 1057 இல் தடோனின் இராச்சியம் பேகனிடம் வீழ்ந்த பிறகும் ஒரு மதிப்புமிக்க மொழியாகத் தொடர்ந்தது. பாகனின் கியான்சித்தா மன்னர் (ஆட்சி. 1084-1113) மோன் கலாச்சாரத்தை மதித்தார் மோன் மொழியும் அங்கீகரித்தார்.

கியான்சித்தா மன்னர் மோன் மொழியில் பல கல்வெட்டுகளை செதுக்கினார். இந்த காலகட்டத்தில் நான்கு பக்கங்களிலும் பாலி, பியூ, மோன் மற்றும் பர்மிய மொழிகளில் ஒரே மாதிரியான கல்வெட்டுகளைக் கொண்ட மாயாசெடி கல்வெட்டு செதுக்கப்பட்டது.[6] கியான்சித்தாவின் மரணத்திற்குப் பிறகு, பாமர்களிடையே மோன் மொழியின் பயன்பாடு குறைந்து. மோன் மற்றும் பியூவை மாற்றாக பர்மிய மொழி ஒரு பொது மொழியாக மாற்றத் தொடங்கியது.[6]

பேகனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹந்தவாடி இராச்சியம் ( 1287-1539) என்னும் மோன் மொழி பேசும் இராச்சியம் ஆட்சிக்கு வந்தது, இந்த இராச்சியத்தின் மன்னர் மீண்டும் மோன் மொழியை பொது மொழியாக மாற்றினார்.

கியான்சித்தா மன்னர் மோன் மொழியில் பல கல்வெட்டுகளை செதுக்கினார். இந்த காலகட்டத்தில் நான்கு பக்கங்களிலும் பாளி, பியூ, மோன் மற்றும் பர்மிய மொழிகளில் ஒரே மாதிரியான கல்வெட்டுகளைக் கொண்ட மாயாசெடி கல்வெட்டு செதுக்கப்பட்டது.[7] கியான்சித்தாவின் மரணத்திற்குப் பிறகு, பாமர்களிடையே மோன் மொழியின் பயன்பாடு குறைந்து. மோன் மற்றும் பியூவை மாற்றாக பர்மிய மொழி ஒரு பொது மொழியாக மாற்றத் தொடங்கியது.[7]

மேற்கோள்கள்

  1. "Mon". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. "International Convention on the Elimination of All Forms of Racial Discrimination" (PDF). 28 July 2011. Archived from the original (PDF) on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  3. "UNESCO Atlas of the World's Languages in danger". பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  4. McCormick, Patrick; Jenny, Mathias (2013-05-13). "Contact and convergence: The Mon language in Burma and Thailand" (in en). Cahiers de Linguistique Asie Orientale 42 (2): 77–117. doi:10.1163/19606028-00422P01. பன்னாட்டுத் தர தொடர் எண்:1960-6028. https://brill.com/view/journals/clao/42/2/article-p77_1.xml. 
  5. "The Mon Language". Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-10-18.
  6. 6.0 6.1 Strachan, Paul (1990). Imperial Pagan: Art and Architecture of Burma. University of Hawaii Press. pp. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1325-1.
  7. 7.0 7.1 Strachan, Paul (1990). Imperial Pagan: Art and Architecture of Burma. University of Hawaii Press. pp. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1325-1.