மோர்ட்டன் கிராமம்

மோர்ட்டன் கிராமம்
Kampung Morten
Kampung Morten
பொதுவான தகவல்கள்
வகைமலாய் மக்கள் கிராமம்
இடம்மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா
ஆள்கூற்று2°12′12.2″N 102°15′03.7″E / 2.203389°N 102.251028°E / 2.203389; 102.251028
திறப்பு1920

மோர்ட்டன் கிராமம் (ஆங்கிலம்; மலாய்: Kampung Morten; சீனம்: 甘榜莫登) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகர் மையத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பாரம்பரிய மலாய் மக்களின் கிராமம் ஆகும்.[1]

1920-ஆம் ஆண்டுகளில், மலாக்காவில் பணிபுரிந்த பிரித்தானிய நில ஆணையரான பிரடெரிக் ஜோசப் மோர்ட்டன் (Frederick Joseph Morten) என்பவரின் பெயர், இந்தக் கிராமத்திற்கும் பெயரிடப்பட்டு உள்ளது.

இந்தக் கிராமத்தை அமைப்பதில் பிரடெரிக் ஜோசப் மோர்ட்டனின் பங்கு சிறப்புக்குரியது. இந்த இடம் முதலில் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. அவரின் அரிய முயற்சிகளினால் இந்த இடம் தற்போது மலேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகப் பரிணமித்து உள்ளது.[2]

பொது

இந்த சிறிய கிராமத்தைச் சுற்றி மலாக்கா ஆறு ஓடுகிறது. மலாக்கா ஆற்றுப்பயண படகுச் சவாரி (Melaka River Cruise) என்று அழைக்கப்படும் சுற்றுலா பயணத்தின் போது, படகு பயணம் செய்பவர்கள் இந்த கிராமத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.[3]

கம்போங் மோர்ட்டன் என்று மலாக்கா மக்களால் அழைக்கப்படும் மோர்ட்டன் கிராமம், தற்போது ஒரு வாழும் அருங்காட்சியகமாகக் கருதப்படுகிறது. அதன் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இன்னும் பாரம்பரிய மலாய் வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

மலாக்கா சுல்தானகத்தின் வரலாற்றுப் பின்னணி

இந்தக் கிராமத்தில் 200 மலாக்கா பாரம்பரிய வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அவற்றின் தனித்துவமான கூரை, படிக்கட்டு, உள்துறை அலங்காரம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் சுற்றுப்புறச் சூழல் பழைய மலாக்கா சுல்தானகத்தின் வரலாற்றுப் பின்னணிகளை நினைவூட்டுகிறது.[4]

1960; 1970-ஆம் ஆண்டுகளில் அமைதியான இடமாக இருந்த இந்தக் கிராமம், 1989-ஆம் ஆண்டு மலாக்காவின் பாரம்பரிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரம்பரிய கிராமமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டது. தற்போது, 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மலாய் வீடுகள் உள்ளன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • Villa Sentosa, a Malay living-history museum depicting life in a wealthy early-20th-century home.