யூதேயா (உரோமை மாகாணம்)

யூதேயா மாகாணம்
புரோவின்சியா யூதேயா (இலத்தீன்)
Ἐπαρχία Ιουδαίας (Koinē Greek)
உரோமைப் பேரரசின் ஒரு மாகாணம்

பொ. ஊ. 6–பொ. ஊ. 132
Location of யூதேயா
Location of யூதேயா
அத்ரியனின் ஆட்சிக் காலத்தின் (பொ. ஊ. 125) கீழ் உரோமைப் பேரரசு. யூதேயா சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
தலைநகரம் சீசரியா மேரிதைமா
41க்கு முன் ஆளுநர், 44க்குப் பிறகு கருவூல அதிகாரி
 •  பொ. ஊ. 6–9 கோபோனியசு
 •  பொ. ஊ. 26–36 பொந்தியு பிலாத்து
 •  பொ. ஊ. 64–66 செசியசு புலோரசு
 •  பொ. ஊ. 117 இலாசியசு கொயத்தசு
 •  பொ. ஊ. 130–132 தினேயசு உரூபசு
யூதர்களின் மன்னன்
 •  41–44 முதலாம் அக்ரிப்பா
 •  48–93/100 இரண்டாம் அக்ரிப்பா
சட்டவாக்க அவை யூத தலைமைச் சங்கம்
வரலாற்றுக் காலம் உரோமை பிரின்சிபேத்து
 •  குயிரினியசின் மக்கட்தொகை கணக்கெடுப்பு பொ. ஊ. 6
 •  இயேசு சிலுவையில் அறையப்படுதல் அண். பொ. ஊ. 30/33
 •  காலிகுலாவின் கீழ் பிரச்சினை பொ. ஊ. 37–41
 •  கலிலேயா மற்றும் பேரியா இணைக்கப்படுதல் பொ. ஊ. 44
 •  யூதர்களின் இரண்டாம் கோயில் அழிக்கப்படுதல் பொ. ஊ. 70
 •  பிரித்தோரிய நிலை ஆளுநர் மற்றும் 10வது இலீசியன் கொடுக்கப்படுதல் அண். பொ. ஊ. 74
 •  சிரியா பாலத்தீனாவுடன் இணைக்கப்படுதல் பொ. ஊ. 132 பொ. ஊ. 132
தற்காலத்தில் அங்கம் இசுரேல்
பாலத்தீனம்
4 ஆகத்து 70க்கு முந்தைய காலம் இரண்டாம் கோயில் யூதம் என்று குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து தான் தன்னைம் மற்றும் தொடக்க காலம் கிறித்தவம் தோன்றியது.

யூதேயா (பண்டைக் கிரேக்கம்Ἰουδαία) என்பது பொ. ஊ. 6 முதல் 132 வரை அமைந்திருந்த ஓர் உரோமை மாகாணம் ஆகும். லெவண்ட் பகுதிகளான யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா ஆகிய பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. யூதேயாவின் மக்கபேயர் அரசு மற்றும் எரோதிய இராச்சியம் ஆகியவற்றின் முந்தைய பகுதிகளின் மேல் இது பரவியிருந்தது. இம்மாகாணம் இரும்புக் காலம் யூத அரசிலிருந்து இதன் பெயரைப் பெற்றுள்ளது.

பொ. ஊ. மு. 63ஆம் ஆண்டில் உரோமைக் குடியரசு யூதேயாவைக் கைப்பற்றியதிலிருந்து பகுதியளவு தன்னாட்சியுடைய திறை செலுத்தும் ஓர் அமைப்பை உரோமைக் குடியரசானது யூதேயாவில் பேணி வந்தது. இந்த உரோமை மாகாணம் இணைத்துக் கொள்ளப்பட்டதானது முதலாம் உரோமைப் பேரரசர் அகத்தசுவுக்குக் கீழ் நடத்தப்பட்டது. எரோது ஆர்கீலசுவின் (பொ. ஊ. மு. 4 - பொ. ஊ. 6) மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோரிக்கை வைத்ததற்குப் பிறகு இவ்வாறு இணைக்கப்பட்டது. நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் உரோமை சிரியாவின் ஆளுநரான பப்லியசு சுல்பிசியசு குயிரினியசால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பானது பிரச்சினைகளுக்குக் காரணமானது. யூத எதிர்ப்பாளரான கலிலேயாவின் யூதாசுவின் (பொ. ஊ. 6) கிளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. அண். 30–33 பொ. ஊ.இல் இயேசு சிலுவையில் அறையப்பட்டது (இது கிறிஸ்தவத்தின்தோற்றத்திற்கு வழி வகுத்தது) மற்றும் 37இல் யூத கோயிலில் தனக்குத் தானே ஒரு சிலையை எழுப்ப பேரரசன் காலிகுலா ஆணையிட்டது போன்றவை இந்தப் பகுதியில் நடைபெற்ற பிறகு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.

உரோமை ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த அதிருப்தியானது பொ. ஊ. 66 - 73இல் முதலாம் யூத-உரோமைப் போருக்கு வழி வகுத்தது. இறுதியாக எருசேலம் முற்றுகையிடப்பட்டது. பொ. ஊ. 70இல் யூதர்களின் இரண்டாம் கோயில் அழிக்கப்பட்டது.[1] இரண்டாம் கோயில் காலத்திற்கு முடிவை இது கொண்டு வந்தது. பொ. ஊ. 44இல் கலிலேயா மற்றும் பெரியா ஆகியவை இம்மாகாணத்துடன் இணைக்கப்பட்டன.[சான்று தேவை] பொ. ஊ. 132இல் கலிலேயா மற்றும் யூதேயா ஆகியவை இணைக்கப்பட்டது சிரியா பாலத்தீனா என்ற பெயருடைய ஒரு பெரிதாக்கப்பட்ட மாகாணம் அமைவதற்கு வழி வகுத்தது என ஆதாரங்கள் கூறுகின்றன.[2][3][4]

மேற்கோள்கள்