யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்

யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
Yerevan State Linguistic University
Երևանի պետական լեզվաբանական համալսարան
வகைபொது
உருவாக்கம்1935
கல்வி பணியாளர்
389 [1]
மாணவர்கள்3,954[2]
பட்ட மாணவர்கள்3,728
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்226
அமைவிடம்,
40°11′14.77″N 44°30′38.62″E / 40.1874361°N 44.5107278°E / 40.1874361; 44.5107278
இணையதளம்www.brusov.am/en

யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ஆர்மீனியாவின் யெரெவான் நகரில் அமைந்துள்ளது. இங்கு ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, கிரீக் மொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள். இவற்றுடன் பிற மாந்தவியல் படிப்புகளுக்கும் கல்வி கற்பிக்கின்றனர்.

துறைகள்

  • வெளி நாட்டு மொழிக்கான துறை
    • மொழியியல்
    • வெளிநாட்டு மொழிகள்
  • மொழியியல், பண்பாட்டுத் தொடர்புகள் துறை
  • ரஷ்ய மொழி, இலக்கியம் மற்றும் வெளிநாட்டு மொழித் துறை

முதுநிலை படிப்புகள்

  • வெளி நாட்டு மொழியைக் கற்பிக்கும் முறை
  • ஜெமானிய மொழிகள் (ஆங்கிலம், ஜெர்மன்)
  • ரோமானிய மொழிகள் (பிரெஞ்சு)
  • சுலாவோனிய மொழிகள
  • வேற்று நாட்டு இலக்கியம்
  • ரஷ்ய இலக்கியம்
  • மொழியியல்
  • ஒப்பீட்டு மொழியியல்
  • ஆர்மீனிய மொழி
  • மெய்யியல்
  • ஆங்கிலத்தில் செய்முறைத் திறன்
  • பிரெஞ்சு மொழியில் செய்முறைத் திறன்
  • ஜெர்மன் மொழியில் செய்முறைத் திறன்
  • கணினித் திறன்

உலகளாவிய தொடர்புகள்

இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் அமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.

  • மொழிக் கொள்கைப் பிரிவு
  • நவீன மொழிகளுக்கான ஐரோப்பிய நடுவம்
  • உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
  • பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
  • கருங்கடல் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
  • ஐரோப்பிய மொழி மன்றம்
  • ரஷ்ய மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஆசிரியர்களின் கூட்டமைப்பு

இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

  • உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றங்களுக்கான வாரியம், ஆர்மீனியா
  • யூரேசிய பங்குதாரர் அறக்கட்டளை
  • கொரிய அறக்கட்டளை

இது கீழ்க்காணும் பல்கலைக்கழ

  • மின்ஸ்க் அரசு மொழியியல் பல்கலைக்கழகம், பெலாரஸ்
  • சோஃபியா பல்கலைக்கழகம், பல்கேரியா
  • ஷான்க்சி பல்கலைக்கழகம், சீனா
  • தலியான் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
  • தல்லின் பல்கலைக்கழகம், எஸ்தோனியா
  • செரெதெலி ஆசியவியல் நிறுவனம், ஜார்ஜியா
  • இலியா அரசு பல்கலைக்கழகம், ஜார்ஜியா
  • சிகென் பல்கலைக்கழகம், ஜெர்மனி
  • ஹல்லே-விட்டன்பர்கு பல்கலைக்கழகம், ஜெர்மனி
  • பிர்தௌசி பல்கலைக்கழகம், இரான்
  • பெருகியா பல்கலைக்கழகம், இத்தாலி
  • வெரோனா பல்கலைக்கழகம், இத்தாலி
  • லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பெல்ஜியம்
  • சியோல் தேசியப் பல்கலைக்கழகம், கொரியா
  • அஜௌ பல்கலைக்கழகம், கொரியா
  • ஹங்குக் வெளிநாட்டுக் கல்வி பல்கலைக்கழகம், கொரியா
  • கொரியப் பல்கலைக்கழகம், கொரியா
  • விதாவுதஸ் மாக்னஸ் பல்கலைக்கழகம், லிதுவேனியா
  • மால்டோவா அரசு பல்கலைக்கழகம், மால்டோவா
  • மால்டோவா பன்னாட்டுப் பல்கலைக்கழகம்
  • ஓவிடியஸ் பல்கலைக்கழகம், ரோமானியா
  • மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், ரஷ்யா
  • மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம், ரஷ்யா
  • மாஸ்கோ அரசு மாந்தவியல் பல்கலைக்கழகம், ரஷ்யா
  • பியதிகோர்ஸ்க் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
  • ரியாசன் அரசு பல்கலைக்கழகம்
  • தாதர் அரசு மாந்தவியல் பல்கலைக்கழகம்
  • பெரெயசிலாவ்-குமெல்னித்ஸ்கி அரசு பல்கலைக்கழகம்

நூலகம்

நூலகத்தில் 400,000 நூல்கள் உள்ளன. அரசியல், கல்வி தொடர்பான நூல்களும், ஆர்மீனிய மொழி, ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழி, பாரசீகம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தைத் தவிர, துறைகளுக்கென தனி நூலகங்கள் உள்ளன.

இணைப்புகள்

சான்றுகள்

  1. "YSLU: About the university". Yerevan State Linguistic University. Archived from the original on 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  2. "YSLU: Statistics 2008" (PDF). Yerevan State Linguistic University. Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.