ரஜ்னி பாட்டீல்

ரஜ்னி பாட்டீல்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
10 சனவரி 2013 – 2 ஏப்ரல் 2018
தொகுதிமகாராட்டிரம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1996–1998
முன்னையவர்கேசரிபாய் சிறீசாகர்
பின்னவர்ஜெய்சிங்ராவ் கெயிக்வாட் பாட்டீல்
தொகுதிபீடு, மகாராட்டிரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 திசம்பர் 1958 (1958-12-05) (அகவை 66)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அசோக் பாட்டீல்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

ரஜ்னி பாட்டீல் (Rajni Patil) 5 டிசம்பர் 1958) இவர் இந்திய தேசிய காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தற்போது இமாச்சலப் பிரதேசத்திற்கான அகில இந்திய காங்கிரசு கமிட்டி பொறுப்பாளராக உள்ளார்.[1] இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவையில் மகாராட்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தினார் (இந்தியப் நாடாளுமன்றத்தின் மேல்சபை). விலாஸ்ராவ் தேஷ்முக் இறந்த பின்னர் 2013 ல் நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மாநிலங்களவையில் இவரது செயல்பாடுகள் இவருக்கு சிறந்த அறிமுக நாடாளுமன்ற விருது பெற்றுத் தந்தது.[5] இவர் 1996 இல் பீடு நகரிலிருந்து மக்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] 2005 ஆம் ஆண்டில், இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் பெண்களின் நிலை குறித்து ஐ.நா ஆணையத்தின் 49 வது அமர்வில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9] இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தில் கல்லூரியில் மாணவர் அரசியல் தலைவராக இருந்தார். 1992 இல் ஜில்லா பரிஷத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேர்தல் அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[10]

மேற்கோள்கள்

  1. "Rajani Patil is Congress in-charge for Himachal Pradesh". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  2. "Rajni Patil wins RS bypoll from Maharashtra". Zee News. 5 January 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  3. "Maharashtra: Rajni Patil is Cong's Pick for RS By-Poll". Outlook. 1 January 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  4. "Congress leader Rajani Patil wins Rajya Sabha bypoll". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 3 January 2013. Archived from the original on 4 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014. {cite web}: Check date values in: |archive-date= (help)
  5. "Lokmat Parliamentary Awards 2017 honours distinguished LS and RS members of India - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  6. "Rajni Patil may be elected unopposed to Rajya Sabha". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 2 January 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  7. "Sonia Gandhi made the day for outgoing Congress Rajya Sabha MP Rajani Patil". Mohua Chatterjee. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  8. "Girija Vyas new chairperson of NCW, Rajni Patil heads CSWB". Outlook (India). பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  9. "Rajani Patil to represent India at UN session on women". Zee News (in ஆங்கிலம்). 2005-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  10. "Rajani Patil | National Portal of India". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.

வெளி இணைப்புகள்