ராஜரிஷி (முனிவர்)

ராஜரிஷி (Rajarshi) (சமக்கிருதம்: राजर्षि) இந்து தொன்மவியலில் சத்திரியர் குல மன்னரில் ரிஷித்துவம் அடைந்தவரை குறிப்பிடுவதாகும்.[1]எடுத்துக்காட்டாக கௌசிகன் எனும் சத்திரிய மன்னர் விஸ்வாமித்திரர் கடும் தவம் இயற்றி வசிட்டரால் இராஜரிஷி எனும் பட்டம் பெற்றவர். பின்னர் விஸ்வாமித்திரர் பிரம்ம ஞானம் பெற்று பிரம்மரிஷி ஆனவர்..[2]

இந்து சாத்திரங்கள் கூறும் ரிஷிகளில் நான்கு வகையினர்: பின்வருமாறு:

  1. ராஜரிஷி - சனகர்
  2. மகரிஷி - வாமதேவர்
  3. பிரம்மரிஷி - வசிட்டர் & விசுவாமித்திரர்
  4. தேவரிஷி - நாரதர்

இலக்கியங்களில்

இராமாயணத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் இயற்றிய விசுவாமித்திரருக்கு பிரம்மா இராஜரிஷி பட்டம் வழங்கினார் எனக்கூறிப்பிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. www.wisdomlib.org (2017-10-19). "Rajarishi, Rājaṛṣi, Rajarshi: 15 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  2. "Viśwamitra".
  3. Debroy, Bibek (2017-10-25). The Valmiki Ramayana: Vol. 1 (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-87326-26-2.