ரெய்கி

ரெய்கி Reiki (霊気 or レイキ? ஆங்கிலம்: /ˈreɪkiː/) என்பது 1922 ஆம் ஆண்டில் மிகாவோ உசுயி என்பவர் உருவாக்கிய ஒரு ஆன்மீக பயிற்சி முறையாகும். ஜப்பானில் உள்ள குறமா மலையில் மூன்று வாரங்களுக்கு மேல் உண்ணா விரதம் இருந்து தியானம் செய்த பிறகு, தனது "ஆற்றல் குறையாது குணப்படுத்தும்" சக்தியை பெற்றதாக மிகவோ உசுயி கூறுகிறார்.[1] இந்த முறையின் ஒரு பகுதியான டெனோஹிரா அல்லது உள்ளங்கையால் குணமாக்கும் முறை மருந்துகளுக்கு பக்க துணையாக அல்லது அவற்றுக்கு பதிலாகவே (complementary and alternative medicine(CAM)) பயன்கிறது.[2][3] டேநோஹிரா என்பது தொழில் புரிபவர்கள் அவர்களுடைய உள்ளங்கையின் மூலமாக "குணப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆற்றலை" (கி எனப்படும் வடிவம் கொண்டது) ஒரு உத்தியாக கையாண்டு (ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு) எதையும் ஊடுருவி நகர்த்தலாம் என்று நம்பிக்கை வளர்த்த முறை ஆகும்.[4][5]

கி என்ற ஒரு பொருள் இருப்பதாகவோ அல்லது கி என்ற இயக்கமுறையைக் கொண்டு ஒரு பொருளை கையாளவோ இயலும் என்பதற்கு அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, மேலும் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற முறைப்படுத்திய சம வாய்ப்புகள் கொண்ட மருத்துவ ரீதியிலான மறுபரிசீலனை ஆய்வுகளில் ரெய்கியின் உச்சவினைகளை கண்டறிய இயலாததால், இந்த முறை எந்த விதமான உடல் நிலைமைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு பரிந்துரைக்கவில்லை.[6][7] வார்ப்புரு:Energy therapy

வரலாறு

Reiki
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை
எளிய சீனம்
Japanese name
Hiragana れいき
Kyūjitai 靈氣
Shinjitai
Korean name
Hangul 령기
Hanja 靈氣
Vietnamese name
Quốc ngữ linh khí

அடிச்சொல் வரலாறு

சீன (Chinese lingqi) மொழியில் லிங்க்கி 靈氣 என்ற சொல்லை கடனாக பெற்று பிறந்த ஜப்பானிய ரெய்கி 霊気 என்ற சொல், "மர்மமான சூழல்; ஆன்மீக ஆற்றல்" என்பதாகும்: இதனை சில சீன-ஆங்கிலேய அகராதிகள் (அழகிய மலைகளின்) ஆன்மீக தாக்கம் அல்லது வளிமண்டலம் என்று மொழி பெயர்க்கின்றன;[8] "① அறிவுத்திறன்; புரிந்துகொள்ளும் ஆற்றல் ② குழந்தைகள் விரும்பும் கதைகளில் வருகின்ற இயற்கையையும் மீறிய சக்தி அல்லது ஆற்றல்; வியக்கத்தக்க ஆற்றல் அல்லது விசை";[9] "① ஆன்மீக தாக்கம் (மலைகளுடைய /முதலியன.) ② புனைத்திறம் வல்ல; அறிவுகூர்மை" என்றும் மொழிபெயர்க்கின்றன.[10] இந்த ஜப்பானிய இணைச்சொல், "பேய், ஆவி, ஆத்மா; இயற்கையையும் மீறிய சக்தி, அற்புதம், தெய்வீகம்; நுட்பமான உடல்" என்றெல்லாம் பொருள் கொண்டுள்ள ரெய் என்ற சொல், மற்றும் "வாயு, காற்று; மூச்சுக்காற்று; ஆற்றல்; விசை; வளிமண்டலம்; மனநிலை; நோக்கம்; உணர்ச்சி; கவனம்" என்ற பொருள்களைக் கொண்டுள்ள கி என்ற சொல்லுடன் இணைகிறது; இங்கு கி-யின் பொருள் "ஆன்மீக ஆற்றல்; உயிராதாரமான சக்தி; வாழ்க்கை சக்தி; வாழ்வின் ஆற்றல்" என பொருள்படுகிறது.[11] ஜப்பானிய-ஆங்கிலேய அகராதிகள் ரெய்கிக்கு நிகரான சொற்களை மொழிபெயர்த்துள்ளன: "மர்மமான உணர்வு",[12] "மர்மமான சூழல் (உணர்வு),[13] மற்றும் "ஐம்புலன்களையும் கடந்த சூழல் (இது புண்ணியத்தலங்களில் புனிதமான எல்லைகளில் மனதில் தோன்றும் பவித்திரமான ஒரு உணர்சசி); (உணர்தல், மெய் மறத்தல்) ஆன்மீக சக்தியை (இறைவன் அருகாமையில் இருப்பதுபோல்) உள்ளத்தூய்மை அடைதல்"[14]

ஆங்கிலேய சொல்லான ரெய்கி ஜப்பானிய ரெய்கியில் இருந்து கடனாகப் பெற்ற சொல்லாகும். ரெய்கி எனும் சொல் (அதன் தலையாய ஆற்றல் அல்லது அதனை சார்ந்து இருக்கும் குணப்படுத்தும் முறைகளை கொண்டு) பெயர்ச்சொல்லாக, வினைச்சொல்லாக, அல்லது பெயரடையாக பயன்படுகிறது. சில மேற்கத்திய எழுத்தாளர்கள் மேலோட்டமாக ரெய்கியை "உலகளாவிய வாழ்க்கை சக்தி" என்று மொழி பெயர்த்துள்ளனர்.[15] ஆனால் இந்த மொழி பெயர்ப்பு பகுதியளவு தவறானது, கி என்பது "வாழ்க்கை சக்தி" — ஆனால் ரெய் என்பது "உலகளாவிய" என்ற பொருள் படாதது.

பிறப்பிடம்

குறமா மலையில் இருபத்தியொரு நாட்கள் தியானம், விரதம் மற்றும் வழிப்பாட்டிற்குப் பின்னர் மிகவோ உசுயி (Mikao Usui) (臼井甕男) 1922 ஆம் ஆண்டில் ரெய்கியை தோற்றுவித்தார்.[1] உசுயியின் உள்ளுணர்வு திறந்ததால் அவருக்கு கிடைத்த மிகையான அறிவாற்றல் மற்றும் தெய்வீகமான ரெய்கி என்ற சக்தியை அவர் மற்றவர்களுக்காக பயன்படுத்தி, மேலும் அவர்களை ஒத்திசைவிக்கப் போவதாக அவர் கூறினார்.

1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உசுயி டோக்யோ சென்று அங்கு உசுயி ரெய்கி ர்யோஹோ கக்கை (Usui Reiki Ryoho Gakkai) என்ற அமைப்பை நிறுவினார் (உசுயி ரெய்கி குணப்படுத்தும் கழகம்).[16]

உசுயி மாமன்னர் மெய்ஜி அவர்களின் இலக்கியங்களை மிகவும் ரசித்தார், மேலும் ரெய்கியை அமைப்புக்கு உட்படுத்தும் போது அவர் மெய்ஜி அரசரின் சில நன்னடத்தை நெறிகள் கொண்ட கொள்கைகளையும் தொகுத்து உட்படுத்தி ரெய்கியை வெளிக்கொண்டு வந்தார். இவை ரெய்கி கொள்கைகள் என்று பின்னர் அழைக்கப் பெற்றன. (ஜப்பானிய மொழியில் கோக்கை ("GOKAI") என்று அழைக்கிறார்கள்) ரெய்கியை கற்றுத்தருபவர்கள் மற்றும் அதனை பயிற்சி செய்பவர்களுள் பலரும் இந்த ஐந்து கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.[17] இதன் ஒரு வகையான மொழி பெயர்ப்பு என்னவென்றால்:

"நல்ல காலத்தை பெற்றுத்தரும் இரகசிய முறை.
எல்லா வகை நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மருந்து
இன்று மட்டும்:
கோபப்படாதீர்
கவலைப்படாதீர்
நன்றியுடன் இருங்கள்
ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்
மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள்.
ஒவ்வொரு காலை மற்றும் இரவு நேரங்களில் கஷோ நிலையில் (Gassho position) அமர்ந்துகொண்டு (கைதுதிக்கும் நிலையில்) இந்த வார்த்தைகளை மனதை விட்டு உரைத்திடுங்கள்.
உடல் மற்றும் ஆன்மாவின் உள்ளதுசிறத்தலுக்கு, உசுயி ரெய்கி ரியோஹோ" — மிகவோ உசுயி, நிறுவனர்.[18]

ரெய்கியின் பயனை உசுயி, ஏறத்தாழ 2000 மாணவர்களுக்கு கற்றுத்தந்துள்ளார். அவருடைய மாணவர்களுள் பதினாறு மாணவர்கள் ஷின்பிடேன் (Shinpiden ) தகுதியை அடைய பயிற்சி எடுத்துக்கொண்டனர், அது மேற்கத்திய மூன்றாம் நிலை, அல்லது முதிர்நிலைக்கு நிகரனாது ஆகும்.[19]

1926 ஆம் ஆண்டு உசுயி காலமானார்.

ஆரம்ப கால வளர்ச்சி

உசுயி இறந்த பிறகு அவரது முன்னாள் மாணவரான சுஜிரோ ஹயஷி (Chujiro Hayashi) உசுயி ரெய்கி ரியோஹோ கக்கையில் இருந்து விலகி தனது சொந்த கழகத்தை ஆரம்பித்தார். ஹயஷி ரெய்கி போதனை முறைகளை எளிமைப் படுத்தியதோடல்லாமல், உடல் நலத்தை பேணும் முறைகளில் கவனம் செலுத்தினார் மேலும் ரெய்கியின் உத்திகளை ஒழுங்குபடுத்தி மேலும் எளிய முறைகளை பயன்படுத்தி மேம்படுத்தினார்.[20]

ஹயஷி ஹவாயோ டகடாவிற்கு[21] ரெய்கியை சொல்லிகொடுத்து அவருக்கு நன்கு பயிற்சி அளித்தார், மேலும் அமெரிக்காவில் பல இடங்களுக்கு பயணித்த அவர், அங்கு முதல் இருநிலைகள் வரை இதர மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சி அளித்தார்.[22]

ரெய்கி சிகிச்சைகளுக்கும் போதனைகளுக்கும் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டகடா அறிவுறுத்தினார். 1976 ஆம் ஆண்டு ஷின்பிடேன் நிலையை கற்றுத்தர ஆரம்பித்த டகடா இந்த கடைநிலையை குறிக்க ரெய்கி குரு அல்லது ஆசிரியர் (Reiki master) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.[23] ரெய்கி ஆசிரியர் நிலை பயிற்சி பெறுவதற்கான கட்டணமாக இவர் $10,000 வசூலிக்க நிர்ணயம் செய்தார்.[மேற்கோள் தேவை]

1980[24] ஆம் ஆண்டில் டகடா இயற்கை எய்தினார், அதற்குள் அவர் வாழ்நாளில் 22 ரெய்கி ஆசிரியர்களை உருவாக்கினார்.[25] ஜப்பானுக்கு வெளியே ரெய்கி போதிக்கப்பட்டதன் காரணம் டகடா தான் என்று சொன்னால் அது மிகையாகாது.[26]

ரெய்கி முறைகள்

இன்று, ரெய்கியில் பல வகைகள் இருந்தாலும், இரண்டு முறைகள் மட்டும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன, அவை மரபு சார்ந்த ஜப்பானிய ரெய்கி (Traditional Japanese Reiki ) , மற்றும் மேற்கத்திய ரெய்கி (Western Reiki) ஆகும்.

ஜப்பானிய மரபுசார்ந்த ரெய்கி

ஒரு ரெய்கி சிகிச்சை அளிக்கப்படும் போது

பொதுவாகhttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&action=edit&section=6 மிகவும் கண்டிப்புடன் மரபுசார்ந்த ஜப்பானிய ரெய்கி என்று அழைக்கப்படுவது, உசுயி போதித்து வந்த குறிப்பிட்ட ரெய்கி முறையாகும், மேலும் இது ஜப்பானுக்கு வெளியே கொண்டு செல்லப்படாத போதனாமுறைகள் ஆகும். 1990 ஆண்டுகளில் இந்த குறிப்பிட்ட முறையுடன் கூடிய ரெய்கியை கண்டறிய ஜப்பானுக்கு சில மேற்கத்திய ஆசிரியர்கள் வந்தனர், ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதனால் அவர்கள் ரெய்கியை கற்றுத்தருவதற்காக ஜப்பானில் ரெய்கி பள்ளிகளை நிறுவத் தொடங்கினர் மேலும் ஜப்பானியர்களுக்கு ரெய்கியை கற்றுத்தர முன்வந்தனர். அதன் விளைவாக, இரகசியமாக மரபுசார்ந்த ஜப்பானிய முறையை பின்பற்றிவந்தவர்கள் தங்கள் பின்பற்றும் முறையை உலகிற்கு அறிவித்து அவர்கள் பெற்ற அறிவை அனைவருக்கும் பரப்ப தொடங்கினார்கள். அன்றிலிருந்து, பல வேறுபட்ட மரபுசார்ந்த ஜப்பானிய ரெய்கி முறைகள் இப்போது நிகழ்வில் உள்ளன, அவற்றுள் சில முக்கியமான முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உசுயி ரெய்கி ரியோஹோ கக்கை என்பது ஒரு கழகத்தை சார்ந்த ஆசிரியர்கள் ஆகும், அவர்கள் கூட்டாக சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான உசுயி முறையை நிறுவினர். இந்த முறையானது தற்காலம் வரை நிலைத்து இருக்கிறது, உசுயி இறந்த பிறகு இந்த கழகத்தின் தலைமைப்பொறுப்பை உஷிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த கழகம் பல ஆண்டுகளுக்கு இரகசியமாக இருந்தது, மேலும் தற்போது இந்த கழகத்தின் தலைவர், ஆசிரியரான மசாகி கொண்டோ ஆவார். இவர்களது போதனைகளில் பல இன்றும் இரகசியமாக காத்து வருகின்றனர், இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக, ஆசிரியர் ஹிரோஷி டோய் போன்ற இக்கழக உறுப்பினர்கள் அவர்கள் பெற்ற அறிவுக்களஞ்சியத்தை உலகில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக தெரிகிறது. இப்படி இருந்தாலும், இந்த கழகம் ஆசிரமமாக பணியாற்றுவதால், அதனை அணுகுவதற்கு கடினமாகவே இருக்கிறது.

ரேய்டோ ரெய்கி கக்கை (Reido Reiki Gakkai) என்ற ரெய்கி முறையானது கக்கையில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களை கொண்டது மற்றும் புமினரி அயோகியால் வழிநடத்தி செல்லப்படுகிறது. புமினரி அயோகி கக்கை கற்றுக்கொண்ட போதனைகளுடன் மேலும் சிலவற்றை சேர்த்துக்கொண்டார், இருப்பினும் இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. புமினரி அயோகியை வியப்பில் ஆழ்த்திய கொரிக்கியின் குறியீடு என்ற முறையையும் இதில் சேர்த்துக் கொண்டார்.

கோம்யோ ரெய்கி கை ஆசிரியர் ஹியாகுடேன் இனமொடோ சென்செய் (Hyakuten Hyakuten Inamoto(稲本 百天) Sensei Sensei)(稲本 百天) என்ற மரபுசார் ஜப்பானிய ரெய்கி பயிற்சியாளர் நிறுவிய பள்ளியை சார்ந்தது ஆகும். இந்த முறை வேறுபட்டது, இது கக்கை முறையை சார்ந்து வரவில்லை, ஆனால் ஹயஷி வழியில் வந்தது மற்றும் இது சியோகோ யாமகுசி (山口 千代子) மூலம் ஜப்பானில் இருந்து வந்ததாகும். இது உசுயி தொடக்க காலத்தில் கற்றுத்தந்த சுயி-உன், புகுயு, ஹோண்ஜா- சே-சொனேன், டை-கோ-மா (Zui-un, Fukuyu, Honja-Ze-Shonén and Dai-Kō-Myō) குறியீடுகளுடன் மேலும் பல உபதேசங்களையும், தலை சிறந்த செயல்திறமைகளையும் கொண்டதாகும். தற்போது உசுயி- இன் மரபு வழி வந்தவராக ஆசிரியர் ஹியகுடேன் இனமோடோ கருதப்படுகிறார், இவரது ஆன்மீக பரிணாம வளர்ச்சி மிக உயர்ந்து இருப்பதால் இவர் உசுயிக்கு அடுத்த படிநிலைக்கு உயர்ந்துள்ளார்.

ஜிகிடேன் ரெய்கி யாமகுசியின் மகனான தடாவோ யாமகுசி (Tadao Yamaguchi)(山口 忠夫) மேம்படுத்திய முறை ஆகும், இது கோம்யோ ரெய்கி கை முறையை போல் அமைந்திருப்பதாகும்.

வடகத்திய ரெய்கி

மேற்கத்திய அல்லது ஒக்சிடென்டல் ரெய்கி என்பது ஹவாயோ டகடா உருவாக்கிய ரெய்கி முறையாகும். இந்த மரபுகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னெவென்றால், உட்புறத்தில் சிகிச்சை அளிக்கையில் கைகளை வைக்க வேண்டிய இடங்கள் மரபுசார் ரெய்கி ஹோ முறையில் குறிப்பிட்டிருந்தாலும், உள்ளுணர்வை கொண்டு குணமாக்கும் முறையை கையாளும் போது மரபுசார் முறையை விட்டு விலகி, "உள்ளுணர்வை ஆதாரமாக கொண்டு" சிகிச்சை அளிப்பதாகும். மேற்கத்திய ரெய்கி முறை நோய்களை குணமாக்குவதில் பெரும் கவனம் செலுத்துகிறது மேலும் இந்த முறை மூலம் மேல் நிலைகளை அடைவது விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.

இந்த மேற்கத்திய ரெய்கி மரபு முதலில் ஹவாய் சென்று அடைந்தது, பின்னர் அங்கிருத்து காலிபோர்னியாவை அடைந்து மேலும் பின்னர் அங்கிருந்து மேற்கத்திய உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால், மேற்கத்தியர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஜப்பானிய ரெய்கி மரபில் நிறைய மாற்றங்களை செய்தார் டகடா. இதன் காரணத்தால் ரெய்கி அமைப்பில் பல வேறுபாடுகள் காணப்பட்டன. கூடுதலாக, டகடா அமைப்பை பின்பற்றும் பெரிய கழகங்களில் இருந்து தனித்து சில சிறு கழகங்களும், தனிப்பட்ட ஆசிரியர்களும் செயல்படுகின்றன. ரெய்கி என்ற பதத்தின் உண்மையான வரையறை பற்றியும், வெவ்வேறு வம்சாவளிகளின் (அடியோலை அச்சோலை) தூய்மை நிலவரம், மற்றும் இது போன்ற இதர விசயங்களைப்பற்றி இதன் பல்வேறுபட்ட மரபு சார்ந்தோர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது.

  • ரெய்கி உசுய் சிக்கி ரிஓஹோ (Reiki Usui Shiki Ryoho) என்று மேற்கத்திய ரெய்கி முறை அறியப்படுகிறது, அதன் பொருள் "உசுய் இயற்கை சிகிச்சை முறை" ஆகும் மேலும் ஹவயோ தகட (Hawayo Takata) என்ற ஆசிரியரின் அசலான பயிற்சி (போதனை) முறைகளை பிளவில்லாமல் செயல்பட முனையும் செய்முறையாகும். எடுத்துக்காட்டாக இந்நாளில் இம்முறையை டகடாவின் பேத்தியான ப்ய்ல்லிஸ் லேய் புருமொடோ (Phyllis Lei Furumoto,) அவர்களின் தலைமையிலான ரெய்கி அல்லையன்ஸ் (Reiki Alliance) என்ற அமைப்பு செயல்படுத்துகிறது. இந்த முறையிலும், இதர மேற்கத்திய ரெய்கி முறைகளைப் போல, நிலைகள் உள்ளன, கிரமமாக (வரிசைப்படி) முதலாம் நிலை, இரண்டாம் நிலை மற்றும் குரு/ஆசிரியர் / பயிற்சியாளர் நிலை. இம்முறையில், அசலான நான்கு குறியீடுகளின் டகடா சார்ந்த பதிப்புகள் பயன்படுகின்றன, அவை முறையே, சோ-கு ரேய் (Cho-Ku Rei) (பொதுவாக "சக்தி குறியீடு ") என அறியப்படுவது, செய்-ஹி-கி (Sei-He-Ki) (பொதுவாக "மனம் சார்ந்த/உணர்ச்சி வயப்படுவதற்கான குறியீடு ") என அறியப்படுவது, ஹோன்-ஷா-ஜே-ஷோ-னேன் (Hon-Sha-Ze-Sho-Nen) (பொதுவாக "இடைவெளிக்கான ") குறியீடு, மற்றும் டை-கோ-மையோ உசுய் (Dai-Ko-Myo Usui) (பொதுவாக "குரு அல்லது ஆசிரியரின் குறியீடு ").[27]
  • உசுய் /திபெத்திய ரெய்கி (Usui/Tibetan Reiki), அமெரிக்கரான வில்லியம் எல். ரேண்ட் (William L. ரேண்ட்) என்பவர் உருவாக்கிய ரெய்கி முறைக்கு வைத்த பெயராகும். இந்த முறையானது தகடாவின் உசுய் ரெய்கி முறைகள் அதாவது உசுய் ரெய்கி ரிஓஹோ காக்கை முறையில் அடங்கிய ப்யோசன் ஸ்கான்னிங் (byosan scanning), க்யோஷி ஹோ (gyoshi ho), கேன்யோகு (kenyoku), மற்றும் கச்ஷோ (gassho) போன்றவையுடன் ஆர்தர் ராபர்ட்சன் (Arthur Robertson) என்பவர் கற்றுத்தரும் திபெத்திய ராகு கை முறையின் (Tibetan Raku Kei system) சில தொன்ம நுட்பங்களும் அடங்கும். இம்முறையில் வையோலெட் மூச்சு (Violet Breath), இரு திபெத்திய குறியீடுகளுடன் நான்கு உசுய் குறியீடுகள் போன்றவைகள் கலந்த மாற்றியமைத்த ஒத்திசைவுமுறைகள் பயன்படுகிறது. இந்த குறியீடுகள் திபெத்திய டை-கோ-மியோ (Dai-Ko-Mio) மற்றும் தீ பாம்புகளின் குறியீடுகளாகும். வையோலெட் மூச்சு (Violet Breath) மற்றும் அதிக குறியீடுகளை அறிமுகப் படுத்தியதோடல்லாமல், உசுய் / திபெத்திய ரெய்கியில் உள்ளம் சார்ந்த அறுவை சிகிச்சை (psychic surgery) யும் சேர்க்கப்பட்டுள்ளது (இந்த முறை ரேண்ட் மேம்படுத்தியது மேலும் பிலிப்பின் நாட்டு பதிப்பில் இருந்து வேறுபட்டது). ரெய்கி உசுய் சிக்கி ரிஓஹோ போல் அல்லாமல், இம்முறை நான்கு நிலைகள் கொண்டது, முதல்நிலை, இரண்டாம் நிலை, மேம்பட்ட ரெய்கி பயிற்சி, மற்றும் குரு ஆசிரியர் / பயிற்சியாளர்.
  • கெண்டை ரெய்கி ஹோ (Gendai Reiki Ho) , ஹிரோஷி டோய் (Hiroshi Doi) மேம்படுத்தியது, மேற்கூறிய இரு முறைகளின் கூறுகளை கொண்டதாகும். மிக்கோ மிட்சுய் (Mieko Mitsui) என்பவர், "சுடரொளி உத்தி" ("Radiance Technique.") என்பதன் ஆசிரியர், டோய் அவர்களுக்கு முதலில் மேற்கத்திய ரெய்கியை கற்றுக்கொடுத்தார். 1993 ஆம் ஆண்டில், அவர் உசுய் ரெய்கி ரிஓஹோ காக்கையில் உறுப்பினராக சேர்ந்தார். இம்முறையானது பாரம்பரிய ஜப்பானிய ரெய்கி முறைகள் மற்றும் மேற்கத்திய முறைகளுடைய ஒத்திசைவுடன் செயல்படுகிறது, என்றாலும் இது ஒரு மேற்கத்திய முறையே ஆகும், ஏன் என்றால் டோய் பாரம்பரிய ஜப்பானீய குருவின் தகுதியை பெற்றவரல்ல.

இதர செயல்முறைகள்

தற்போது, மேற்கத்திய ரெய்கியை சார்ந்த சில ஆசிரியர்கள் அவர்களாகவே சில தகவல்கள் மற்றும் குறியீடுகளை வைத்துக்கொண்டு, அவர்களுடைய தனிப்பட்ட முறைகளை உருவாக்கியுள்ளனர் மேலும் ரெய்கி முறையில் காணப்படும் கைகளை ஓரிடத்தில் வைத்து கையாளும் முறைகளையும் பின்பற்றி பணிசெய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தோன்றிய சில மேற்கத்திய முறைகள் மிகவோ உசுயியின் வழிமுறையில் வந்தவை அல்ல. இவ்வாறான முறைகளில் கருணா ரெய்கி, செய்கிம் அல்லது ரெய்கி செய்கிம்-செய்சிம் SKHM, ரெய்கி சதோரி, ரெயின்போ ரெய்கி, செல்டிக் ரெய்கி, குண்டலினி ரெய்கி, கருணா கி, ரெய்கி ஓப் தி நைன்த் கி, பையோரெய்கி, சம்பள ரெய்கி, தேர மை ரெய்கி, மற்றும் திபெத்திய-தந்திரிய ரெய்கி போன்றவை அடங்கும்.

மேற்கூறிய ரெய்கி முறைகளில், கீழே கொடுத்துள்ளவை மிகவும் பரவலாகவும் உலக அளவில் பெயர் பெற்றவை ஆகும்; உசுயி ரெய்கி ரியோஹோ காக்கை (மரபு சார் ஜப்பானீய உசுய்), திபெத்திய ரெய்கி, கருணா ரெய்கி, ரெய்கி செய்கிம் -செகெம், மற்றும் கொம்யோ ரெய்கி , மேலும் செல்டிக் ரெய்கி மற்றும் குண்டலினி ரெய்கி போன்றவைகளும் அதிகமாக பெயர் பெற்று வருகிறது, மாற்று மருத்துவ முறைகளின் பயன்பாட்டில் இவை முன்னணியில் உள்ளன. சில பரவலாக காணப்படும் பெயர்பெற்ற முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கருணா ரெய்கி

கருணை என்பது ஒரு சமஸ்கிருத மொழி சொல்லாகும் மேலும் அச்சொல் இந்துமதம், திபெத்திய புத்த மதம் மற்றும் ஜென் புத்த மதம் (Zen Buddhism) போன்ற மதங்களில் பயன்படுத்திய சொல்லாகும், அதன் மொழி பெயர்ப்பு கருணை கொண்ட செயல்பாடுகள் ஆகும். இந்த முறையை அமெரிக்காவில் கதேரின் மில்நேர் (Katherin Milner) நிறுவினார், மேலும் இன்று அதனை "தேர மை" ("Tera Mai") என்றழைக்கின்றனர். இம்முறை ஸ்பெயின் நாட்டில் 1995 ஆம் ஆண்டில் அந்தோனியோ மோராகா (Antonio Moraga) அறிமுகப்படுத்தினார், அவர் இந்தியாவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகு, குறியீடுகள் மற்றும் உத்திகளை நிறைவு செய்தார், இப்படியாக கருணா-ப்ரிக்ருதி (கருணா என்றால் "கருணை" மேலும் பிரகிருதி என்பது இறை சக்தி அல்லது வடிவில்லாத சக்தி) என்ற முறை அமுலுக்கு வந்தது. இந்த முறை பிரகிருதி-கருணா ரெய்கி குறியீடுகள் கொண்டது மேலும் அவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ரெய்கி குருக்களுக்கு வழிமுறைப்படுத்தியதாகும். அவருடைய வழிமுறை தொடக்கங்களை பின்பற்றி, அந்தோனியோ மோராக என்பவர் அதை மேம்படுத்தியுள்ளார், மேலும் அம்முறை மதிப்புடன் கூடிய ஆற்றலுக்கான 21 புதிய குறியீடுகள் கொண்டவையாகும், அவற்றை மரபுசார் உசுய் முறை மற்றும் ஜப்பானீய-திபெத்திய தாந்த்ரிக் முறையுடன் இணைந்து செயல் புரியலாம்.

பிரகிருதி சக்தியை மையமாக கொண்ட குறியீடுகளை சுவாமி ப்ரேம் ஆனந்த என்பவர் ஒருவழிப்படுத்தினார் மேலும் அவற்றை ஆசிரியர் கிராமிற்கு (Master Kiram) வழங்கினார், மேலும் அவர் அதை அந்தோனியோ மொரகாவிடம் அளித்தார்.

கருணா-பிரகிருதி சார்ந்த குறியீடுகள், அதன் வலிமையான சக்தி காரணமாக ஆழ்ந்த குணப்படுத்தும் தன்மையோடல்லாமல், அன்பு மற்றும் ஆதரவுடன் கூடிய இணக்கம், தன் மதிப்பில் உயர்வு காணுதல், உணர்ச்சிவசப்படுவதில் நிதானம் (சமப்படுகை), கர்மாவில் இருந்து விடுதலை, மேன்மையான விழிப்புணர்வு மற்றும் தூய்மை, சக்கரங்களின் இசையம், நாம் ஏன் பிறந்தோம் என்ற வினாவிற்கான தெளிவு மற்றும் மனதில் சமாதானம் அடைதல் மற்றும் நிலையமைதி பெறுதல் போன்றவைகளை வழங்கும் தன்மை கொண்டதாகும்.

திபெத்திய-தந்திரிய ரெய்கி

திபெத்திய-தந்திரிய ரெய்கி, திபெத்திய ரெய்கி என்றும் அறியப்படுவது, 11 சக்திக் குறியீடுகள் அடங்கியது. கர்மாவின் காரணமாக ஒருவருக்கு ஏற்பட்ட வியாதிகளை, இதன் போதனா முறைப்படி, இக்குறியீடுகளை பயன்படுத்தி குணமளிக்கலாம். அதன் படி, புற்று நோய் மற்றும் வேட்டைநோய் போன்றவை குணப்படுத்தலாம், மற்றும் வெவ்வேறு பொருட்கள் மற்றும் உணர்வுகளுக்கிடையே நிலவும் இணக்கத்தினை மீட்டெடுக்கலாம். இவற்றில் நான்கு குறியீடுகள் "திபெத்திய குறியீடுகள்," என்றும், மற்றவை ஏழும் "தாந்த்ரிக் குறியீடுகள்." என அறியப்படுகின்றன. போதனா முறையின் படி, தாந்த்ரிக் குறியீடுகள், புத்த மதத்தை திபெத்தில் அறிமுகப்படுத்திய பத்மசம்பவ (ஆசிரியர் ரின்போச்சே) Padmasambava (Guru Rinpoche) என்ற புத்தரின் இரகசிய வம்சாவளியில் விண்ணுலகில் இருந்து மண்ணுலகில் வந்து பிறந்த ஷக்யமுனி புத்தர் (Shakyamuni Buddha) என்பவர் வழங்கிய போதனா முறைகளில் இருந்து பிறந்ததாகும். இக்குறியீடுகள் மற்றும் திபெத்திய தாந்த்ரிக் முறைகளின் நோக்கமானது பெறுபவரின் உடலில் இத்தகைய ஜீவசக்தியைப் பெருக்கி, குண்டலினி சக்தியை மேலும் மேம்படுத்துவதாகும். இவ்வாறான குறியீடுகள் சக்கரங்களின் மீதும் பணிபுரிய வல்லதாகும்.

ரெய்கி செய்கிம்-செய்சிம்

ரெய்கி செய்கிம்-செய்சிம் (Reiki Sekhem-Seichim)("செய்கிம்" என்ற உச்சாடனம் மற்றும் "SKHM" என குறைத்தல்) என்ற சொல் எகிப்திய சொல்லான செகேம் (Sekhem) என்ற சொல்லின் தழுவலாகும், அதன் மொழிபெயர்ப்பானது "சக்தியின் சக்தி" ஆகும். இதை பட்ரிக் சிக்ளீர் என்பவர் நிறுவினார். ரெய்கி செய்கிம்-செய்சிம் (SKHM) தற்காலத்தில் பட்ரிக் தனது சக்தி சார்ந்த பணிகளை சுட்டிக் காட்டுவதாகும்.

1979 ஆம் ஆண்டில், பட்ரிக் ஜீக்ளேர் (Patrick Zeigler) செயோப்சில் Cheops) உள்ள பட்டைக்கூம்பில் இருக்கும் போது ரெய்கி செய்கிம்-செய்சிம் (SKHM ) எனப்படும் தன்னியல்பு கொண்ட சக்தியைப் பற்றி தெரிந்து கொண்டார் மற்றும் அதைப் பற்றி ஷேக் முஹம்மத் ஒஸ்மான் ப்ரஹணி என்பவருடன் அதை படித்தார். 1984 ஆம் ஆண்டில் ஜீக்ளேர் கிறிஸ்டின் கெர்பேர் என்பவரை சந்தித்தார், அவர் மரத் என்ற, 2500-ஆண்டுகள் -பழமையான ஆவியாகும் மேலும் அந்த ஆவி ஒரு காலத்தில் செய்கிம்மின் குருவாக திகழ்ந்ததாகும், அவர் தகவல்களை சலக்கம் செய்தவர் (ஒருவழிபடுத்தியவர்), அவர் செய்கிம் ரெய்கியில் சேர்ந்து கொள்ள அனுமதி அளித்தார். 1984 ஆம் ஆண்டில் ஜீக்ளேர் டோம் சீமான் என்பவருக்கு செய்கிம் ரெய்கியை கற்றுக்கொடுத்தார், இப்போது அவர் இந்த முறை மேலும் விரிவாக்கம் அடைவதற்கு காரணமானவராக உள்ளார். 1985 ஆம் ஆண்டில், போனிக்ஸ் சம்மர்பீல்ட் (Phoenix Summerfield) மேலும் அதிகமாக ஏழு குறியீட்டுகளை உருவாக்கினார் மற்றும் அந்த முறை செய்கிமை கற்பிக்க தொடங்கினார். 1985 மற்றும் 1987 ஆண்டுகளுக்கிடையே, சம்மர்பீல்ட் செய்கிமை ஆஸ்திரேலியாவில் கற்றுக் கொடுக்கத்தொடங்கினார், மேலும் இந்த முறை உலகம் முழுதும் இப்பொழுதும் பரவிக்கொண்டிருக்கிறது. 1995 ஆம் ஆண்டில், ஷேவ்மேகர் (Shewmaker) என்பவர் ரெய்கி குருவாக ஆவதற்கான செய்கியில் முதல் ஒத்திசைவு பயிற்சி பெற்றார். 1996 ஆம் ஆண்டில், ஷேவ்மேகர் ஒரு செய்கிம் குருவாக ஆனார் மேலும் அதை பிறருக்கும் கற்பிக்க தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில், அவர் இயல்பான துவக்க சலக்கம் (வழிமுறைபடுத்தல்) பெற்றபின்னர், ஷேவ்மேகர் செகெம்மின் (sekhem) மேலும் ஒரு தன்மையில் சலக்கம் அளிக்க தொடங்கினார், மற்றும் செகெம் -செய்கிம் ரெய்கி (Sekhem-Seichim Reiki) என்ற ரெய்கிமுறையை கற்பிக்கத்தொடங்கினார். இறுதியில், ஷேவ்மேகர் மற்றும் மார்ஷா பராக் என்போர் இம்முறையை கற்றுத்தரும் உறுப்பினர்கள் ஆனார்கள்.

செல்டிக் ரெய்கி

செல்டிக் ரெய்கி முறையின் முதற்கோள் இரு வேறுபட்ட தத்துவங்களை குவிமையப்படுத்துகிறது, அதாவது நவீன செல்டிக் இறையியல் செல்டிக் மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை ஊகஞ்செய்கிறது மற்றும் ஷின்டோ முறைப்படி அது கி வடிவத்தின் பல ரூபங்களில் ஒன்றாக கருதுகிறது. இவ்விரு வெவ்வேறு இயலுறு தோற்றங்கள் கொண்ட முறைகளின் இணைப்பு மரங்கள் மற்றும் இதர தாவர வாழ்க்கைகளின் இயற்கையான உலகத்தை மையமாக கொண்ட மருத்துவ முறையாகும். மிக முக்கியமாக, செல்டிக் ரெய்கியானது இதர ரெய்கி முறைகளின் நடைமுறைகளை தழுவியது என்றாலும், சில இடங்களில் அதன் ஆராய்ச்சி முறை மிகவும் வேறுபட்டுள்ளது. பண்டைய காலத்து ரெய்கி முறைகளை அறிமுகப்படுத்துவது, அதுவும் உசுய் முறைகளுக்கு எதிர்மறையாக, மேலும் செல்டிக் ரெய்கி ஆசிரியர்களின் பயிற்சி முறைகள் மற்றும் பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து பொருந்த செய்வது போன்றவை அடிப்படை இனப்பண்பாக ஊக்கமளிக்கப்படுகிறது.

போதனைகள்

ரெய்கி தத்துவங்களின் ஆதாரமானது உலகத்தில் முடிவே இல்லாத, எடுக்க எடுக்க வற்றாத, உலகளாவிய "உயிர் விசை" எனப்படும் ஆன்மீக சக்தி நிறைந்திருப்பதாகவும்,[28][29] அதை வைத்துக்கொண்டு குணப்படுத்தும் தன்மையை தூண்டி விடலாம் என்பதே.[30] இதனை நம்புபவர்கள் சொல்வது என்ன என்றால் யார் வேண்டுமானாலும் இந்த சக்தியை பெறலாம் என்றும்[31] ஒரு ரெய்கி ஆசிரியரின் ஒத்திசைவு செய்முறைகளால் [32] இந்த சக்தியை அடையலாம் என்றும் கூறுகின்றனர்.[33] இது போன்ற சக்தி இருப்பதாக கூறும் கூற்றிற்கு அறிமுறை அல்லது உயிர் இயற்பியல் அடிப்படையிலான ஆதாரங்கள் எதுவுமில்லை.[4][34][35]

ரெய்கி முறையை ஒட்டி வாழ்பவர் கூறுவதாவது ரெய்கி ஒரு முழுதளாவிய மருத்துவ முறையாகும் மேலும் அதன் மூலமாக உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்ச்சிகள் சார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிலைகளில் சிகிச்சை பெற்று குணமடையலாம்.[36] ரெய்கியில் உள்ள நம்பிக்கையானது இந்த சக்தி பயிற்சி யாளரின் கைகள் மூலமாக, ஒரு உடைகள் அணிந்த நிலையில் இருக்கும் பெறுபவனின் உடல் மீதோ, இல்லை அவன் அருகாமையிலோ, கைகளை வைக்கும் பொது, அதன் மூலமாக அந்த சக்தி பெருக்கெடுத்து ஓடும் மேலும் அவனிடம் சென்றடையும், மேலும் உடலில் மாறுதல்களை நிகழ்த்தும் என்பதே.[37] சில பயிற்சிகள் ஒரு பயிற்சியாளரின் மனம் கொண்டுள்ள நோக்கம் அல்லது கருத்து அல்லது இந்த செய்முறையில் உளதாம் தன்மை இருத்தல் முக்கியமாக கருதப்படுகிறது, மற்றும் வேறு சிலர் கூறுவது என்ன என்றால் இந்த சக்தியை பெறுபவனின் உடலில் உள்ள காயங்கள் இழுத்து இயல்பான குணப்படுத்தும் தன்மையை செயல்படுத்தும் அல்லது அதனை மேம்படுத்தும் என்பதே. .[38] மேலும் கூடுதலாக, இந்த சக்தியானது "புத்திகூர்மையுள்ளதாகவும்",[39] அதனால் நோயின் காரணம் அறிதல் தேவையற்றதாகவும் காணப்படுகிறது.

இரண்டாம் நிலை பயிற்சியானது, மீண்டும் ஒரு துவக்கம் அடங்கும், அதன் மூலம் ஒரு பயிற்சியாளர் கொஞ்சம் தூரத்தில் ஒரு இடைவெளியுடன் இருந்துகொண்டே ரெய்கி சிக்கிச்சையை அளிக்க இயலும் என்பதே.[40] இந்த முறையில், இதற்காக தனி குறியீடுகள் உருவாக்கி மேலும் அதன் மூலமாக பயிற்சியாளர் மற்றும் பெறுபவனுக்கு இடையே ஒரு தற்காலிக இணைப்பு ஏற்படுத்தும், அது இடத்தை சார்ந்ததாக இராமல், ரெய்கியின் சக்தியை இயல்பாக ஏற்றுக்கொண்டு எடுத்து செல்லும்.[41] மேலும் சில உத்திகளின் மூலமாக ரெய்கி சக்தியானது கடந்த காலத்திலோ, அல்லது வரும் காலத்திலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வழி வகுக்கும் செயல்முறைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.[42]

பயிற்சிகள் மேற்கொள்வது.

முழு உடல் சிகிச்சை

முழு உடலுக்கான ரெய்கி சிகிச்சை அளிப்பதற்கு,[43] பயிற்சியாளர் தனது சிகிச்சை ஏற்றுக்கொள்பவரை கீழே படுக்க சொல்வார், பொதுவாக ஒரு ஒத்தடம் கொடுக்கும் மேஜையில் படுத்து ஓய்வெடுக்க சொல்வார். தளர்வான, வசதியாக இருக்கும் உடைகளை சிகிச்சை அளிக்கும் போது அணிந்துகொள்ள வேண்டும். பயிற்சியாளர் தனது மனதை அமைதி படுத்திக்கொண்டு மற்றும் ஒருமுகப்படுத்திக்கொண்டு சிகிச்சைமுறைகளுக்கு தன்னை தயார் செய்துகொள்ள[44] சில நிமிடங்கள் பிடிக்கலாம், அப்போது அவர்கள் தேவையில்லாத பேச்சுவார்த்தைகள்[45] இல்லாமல் அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள்.

பயிற்சியாளர் சிகிச்சை பெறுபவரின் உடல் மீது தனது கைகளை பல இடங்களில் வைக்கும் போது, சிகிச்சை துவங்குகிறது. இருந்தாலும். சில பயிற்சியாளர்கள் கைகளால் தீண்டாமலேயே சிகிச்சை அளிக்கலாம், அப்போது அவர்கள் தனது கரங்களை சிகிச்சை பெறுபவரின் உடலின் சில சென்டிமீட்டர் தூரத்தில் வைத்து, சில இடங்கள் அல்லது அனைத்து இடங்களிலும் தீண்டாமலேயே, சிகிச்சையை அளிப்பார். 3 முதல் 5 நிமிடங்கள் வரை கரங்கள் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு இருந்த பின்னால், கைகளை அடுத்த இடத்திற்கு நகர வைப்பார். மொத்தமாக, கைகள் பொதுவாக தலை, உடலின் முன் மற்றும் பின் பாகங்கள், முட்டுகள் மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடுவதாக அமையும். 12 முதல் 20 இடங்கள் பயன்படுத்தப்படும், மேலும் முழு அளவிலான சிகிச்சைக்கு 45 முதல் 90 நிமிடங்கள் எடுக்கலாம்.[46]

சில பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் மட்டுமே கைகளை வைத்துக்கொள்வார்கள். வேறுசிலர் அவர்களுடைய உள்ளுணர்வை வைத்து எந்த பாகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமோ,[47] அங்கே கொண்டு செல்வார்கள் மேலும் அதற்காக அவர்களில் சிலர் சிகிச்சை பெறுபவரின் முழு உடம்புப்பகுதிகளையும் "தேடிச்சேர்த்துப்" பார்ப்பார்கள். உள்ளுணர்வுகளுடன் கூடிய அணுகுமுறையில், கைகளை சில இடங்களில் குறைவான நேரத்திற்கும், மற்றும் இதர இடங்களில் நீண்ட நேரத்திகும் சிக்கிச்சை அளிப்பதற்காக நிறுத்தப்படலாம்.

சிகிச்சை பெறுபவர்கள் சிகிச்சை பெறும் பாகங்களில் ஒரு விதமான வெப்ப உணர்ச்சியையோ, அல்லது கூச்ச உணர்வுகளையோ, கரங்களால் தீண்டப்படாத சிகிச்சை முறைகளிலும், அடைவார்கள் என அறியப்படுகிறது. ஒரு விதத்தில் ஆழமான ஒய்வுபெற்றதாகவும், கூடவே மனதில் ஒரு விதமான நல்லிணக்கமும் சிகிச்சை அளித்தவுடன் உணர்வதாகவும், உடனுக்குடன் பெறுவதாகவும், சிகிச்சை பெற்றவர்கள் கூறுகிறார்கள், மேலும் சில நேரங்களில் அவர்கள் உணர்ச்சிவசப்படுவதும் காணலாம்.[48] ரெய்கி சிகிச்சை முறையானது இயற்கையின் இயல்பு முறைகளை தழுவியதாக இருப்பதால், தனிப்பட்ட உடல் பிரச்சினைகளுக்கு உடனுக்குடனான ஒரு "கணத்தீர்வுகள்" பொதுவாக காண்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு தொடராக மூன்று அல்லது அதற்கு மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்க வேண்டியதாக இருக்கும், அதுவும் ஒன்று முதல் ஏழு நாட்களுடன் கூடிய இடைவெளியுடன் கூடிய சிகிச்சை முறைகள், கடினமான நோய்களின் தாக்கத்தை தீர்ப்பதற்கு தேவையாக இருக்கும்.[49] வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதால், தொடர்ந்து கொண்டே இருப்பது, உடல் நலனை பேணுவதற்கான குறிக்கொளுடன், எப்போதுமே செய்துகொள்ளலாம். இதற்கான சிகிச்சைகளுக்கு இடையேயான இடைவெளி ஒன்று முதல் நான்கு வாரங்களாக இருக்கலாம், ஆனால் தனக்கு தானே பொதுவாக சிகிச்சை அளிக்கும் போது, இதனை ஒவ்வொரு நாளும் தொடரலாம்.[50]

தனிப்பட்ட உடலுறுப்பு சிகிச்சை

தனிப்பட்ட உடலுறுப்புகளின் ரெய்கிமுறை சிகிச்சைக்காக பயிற்சி அளிப்பவரின் கைகள் உடலின் ஒரு குறிபபிட்ட அங்கத்தின் மீதோ அல்லது அருகாமையிலோ வைக்க வேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு இவ்விதமாக சிகிச்சை அளிக்கலாம்,[51] அதன்படி அடிபட்ட இடத்தை குறி வைக்கலாம். இது போன்ற சிகிச்சை முறைகளுக்கு ஆகும் நேரம் சரிவர குறிப்பிடவில்லை மேலும் மிகையான வேறுபாடுகள் கொண்டது, இருந்தாலும் 20 நிமிடங்கள் என்பது ஒரு மாதிரியான எடுத்துக்காட்டாகும்.

சில பயிற்சியாளர்கள் சிலவகை வியாதிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை பயன்படுத்துகின்றனர், மேலும் சில பதிப்பாளர்கள் அதற்கான கைகளை வைக்கும் முறைகளை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளனர்.[52] இருந்தாலும், இதர பயிற்சியாளர்கள் நீடித்த நோய்களை குணப்படுத்துவதற்கு, முழு உடலுக்கும் சிகிச்சை அளிக்கும் முறையை விரும்புகிறார்கள், ஏன் என்றால் அம்முறை மேலும் முழுமையாக தாக்கங்களுடன் அமையும் என்பதனால்.[53] மேலும் ஒரு முறையானது, முதலில் முழு உடம்பிற்கும் சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் குறிப்பிட்ட பாகங்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஆகும்.[54]

பயிற்சி

ஜப்பான் நாட்டுக்கு வெளியே ரெய்கி முறைகளைபபற்றி பயிற்சி வழங்குவதற்கு பொதுவாக மூன்று தளங்கள் அல்லது நிலைகளை கடந்தாக வேண்டும்.[55]

முதல் நிலை

முதல் நிலை ரெய்கி பயிற்சி வகுப்பில் [56] அடிப்படை கொள்கைகள் மற்றும் செயல் முறைகளைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மாணாக்கனுக்கு ஆசிரியர் நான்கு முறை "ஒத்திசைவு" அடையும் பயிற்சிகள் வழங்குகிறார்.[57] மாணவர்கள் ஏற்றுக்கொள்பவரின் உடலில் எங்கெங்கெல்லாம் கைகளை வைக்கவேண்டும் என்பதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர், அவ்விடங்கள் முழு உடல் சிகிச்சைக்கான செய்முறைகளுக்கு மிகையான உகந்த ஏற்புள்ள இடங்களாகும்.[58] முதலாம் நிலை பயிற்சி பெற்ற மாணவன், அவன் தன்னையோ அல்லது வேறு சிலரையோ, ரெய்கி முறையில் சிகிச்சை அளித்துப்பார்க்கலாம். இந்த பயிற்சிக்கான கால அளவு நான்கு கூட்டத்தொடர்வுகள் கொண்டதாகும், மிக்கவாறும் அவை ஒன்றுக்குப்பின் ஒன்றாக தொடர்ந்து 2, 3, அல்லது 4 தொடர்நாட்களில் கற்றுத்தரலாம்.[59]

இரண்டாம் நிலை

இரண்டாம் நிலை ரெய்கி பயிற்சி வகுப்பின் போது,[60] மாணவன் மூன்று குறியீடுகளின் பயன்பாட்டினைப்பற்றி தெரிந்து கொள்கிறான், அதன் மூலம் ஒரு மனிதனின் வலிமை மற்றும் இந்த பாதிப்பை ஏற்படுத்துவதற்கான இடைவெளியை அதிகரிக்கும் தனமையுடையதாக காணப்படுகிறது.[61] மேலும் ஒரு ஒத்திசைவிற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது, இதன் மூலம் மாணவனுக்குள் ரெய்கியின் சக்தியானது ஊடுருவும் திறன் அதிகரிப்பதாகவும், மேலும் மாணாக்கனிடம் இந்த மூன்று குறியீடுகளின் பயன்பாட்டை மேம்படுத்தும் ஆற்றலை விளைவிக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.[62] இரண்டாம் நிலை முடிவுற்ற பிறகு, மாணவன் பயிற்சி பெறுபவரின் முன்னால் பிரத்தியட்சமாக இருந்தே பயிற்சிகளை வழங்கவேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படுகிறது.[63]

மூன்றாவது நிலை அல்லது ஆசிரியர் பயிற்சி

மூன்றாவது நிலை பயிற்சியின் மூலம், அதாவது "ஆசிரியர் பயிற்சி" மூலம்,[64] மாணவன் ஒரு ரெய்கி ஆசிரியராக மாற்றம் அடைகிறார். (ரெய்கி சொல்வழக்கப்படி, "குரு (ஆசிரியர்)" என்ற பதத்திற்கு அகநிலைச்சார்ந்த தெளிவூட்டு தேவைப்படுவதில்லை.) ஒன்று அல்லது அதற்கு மேலுமான ஒத்திசைவுப்பயிற்சிகளுக்குப் பிறகு மாணவனுக்கு ஆசிரியர் அல்லது குரு அளவிலான அடையாளக்குறி பெறுகிறான்.[65] மூன்றாம் நிலை ஆசிரியருக்கான பயிற்சிக்குப்பின், இந்த புதிய ரெய்கி குரு (ஆசிரியர்) இதர மக்களுக்கு ரெய்கி ஒத்திசைவு அளிக்கலாம் மேலும் ரைகியின் மூன்று நிலை முறைகளிலும் பயிற்சிகள் வழங்கலாம். மூன்றாம் நிலை ஆசிரியர் பயிற்சிக்கான கால அளவு, பயிற்சியை வழங்கும் பள்ளிக்கூடம் மற்றும் பயிற்சியை அளிக்கும் ஆசிரியரின் ரெய்கி தத்துவநிலைகளைப் பொறுத்து ஒரு நாள் அல்லது ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

வேறுபாடுகள்

பயிற்சி முறைகள், விரைவு மற்றும் விலை போன்றவற்றில் மிகையான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ரெய்கி முறைகளுக்கு தரநிர்ணயம் செய்யும் அமைப்புகள் இல்லாமல் உள்ளன மேலும் அதன் பயிற்சியை கட்டுப்படுத்தும் முறைகளும் முறைபடுத்தவில்லை. ரெய்கி பயிற்சி வகுப்புகளை வலைத்தளங்கிலும் பெறலாம், பழமைவாதிகள் ஒத்திசைவு பொருத்தம சரியாக அமைவதற்கு நேரடியான தொடர்பு அவசியம் என்று கூறினாலும், ரெய்கி முறையில் ஒத்திசைவு செய்யும் குரு/ஆசிரியர் நிஜமாகவே சிகிச்சை பெறும் மனிதனின் உடம்பில் உள்ள சக்தி பீடங்களை தொட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறுகிறார்கள். சில பழமைவாதிகள் நம்பிக்கையுடன் சொல்வது என்ன என்றால் விரைவாக அல்லது வேகமாக சொல்லித்தரப்படும் எந்த ரெய்கி முறையும் அதைப்போலவே வலிமையான பலன் கொண்டதாக இருக்க இயலாது, ஏன் என்றால் அனுபவங்களால் தேர்ச்சி அடைதல் மற்றும் பொறுமையுடன் இக்கலையில் வல்லமை பெறுதலுக்கு ஈடாக எதுவும் இருக்க இயலாது என்பதே.[66]

அறிவியல் ஆய்வு

ரெய்கியைப்பற்றி அறிவியல் முறைகளில் ஆய்வது என்பது சிக்கல் நிறைந்ததாகும், ஏனென்றால் ஆறுதல் மருந்து-கட்டுப்பாடுடன் கூடிய (placebo-controlled study) ஆய்வில், அனைத்து விதத்திலும் ஆறுதல் மருந்தின் சிகிச்சையைப்போல் இருக்க வேண்டும்.[67]

2008 ஆண்டு வரை மேற்கொண்ட மிகவும் வலிமையான ஆராய்ச்சியில் கூட, எந்த விதமான நிலைமையிலும் ரெய்கி ஒரு பயனுடைய சிகிச்சை முறை என்பதை நிரூபிக்க இயலவில்லை. இப்படி முறையான மறுபரிசீலனை இதற்கான ஆதார அடிப்படையை மதிப்பிட்டுப்பார்த்தது, அவற்றில் ஒன்பது ஆய்வறிக்கைகளே அவர்களுடைய தேர்விற்கான திட்ட அளவைகளுக்கு ஒத்திசைவதாக அமைந்தது.[6] பார்வையற்ற மருத்துவர்களின் சிக்கலை ஈடு கட்டும் பொருட்டு, ஒரு மாற்றியமைத்த ஜடாடு மதிப்பீடு (Jadad score) தர ஆராய்ச்சி முறையியல் பயன்படுத்தப்பட்டது. சமவாய்ப்பு அளிக்கப்படாத ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, ஏன் என்றால் தெரிந்தோ தெரியாமலோ பாரபட்சமாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இவ்வகைகளில் மிகையாக இருக்கலாம், அதனால் அதன் முடிவுகளை சரியாக பொருள் விளக்கம் அளிக்க முடியாமல் போகலாம். என்ன இருந்தாலும், மொத்தத்தில், ஆதார அடிப்படையின் தர ஆராய்ச்சி முறையியல் குறைவுள்ளதாகவே காணப்பட்டது, அதிக மதிப்பீடு பெற்ற ஆய்வுகளில் கூட ஆறுதல் மருந்தின் பாதிப்புகளால் மற்றும் மிகையான ஆராய்வுகள் "முறைசார்ந்த குறைகள் கொண்டதாக அதாவது சிறிய மாதிரி எண்ணிக்கை, போதாத ஆய்வு வடிவமைப்பு மற்றும் குறைவான அறிக்கைகள் போன்றவை" கொண்டதாக அமைந்தது.[6] இது போன்ற குறைகள் மிகுந்த ஆய்வுகளை மேற்கொள்வதில், மிகைப்படுத்திக் கூறப்படும் சிகிச்சை பலன்கள் கொண்டிருப்பதால், தேவையான அளவிற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை, அதனால் ரெய்கி ஒரு பயனுடைய தனிப்பட்ட அல்லது துணை மருந்து சிகிச்சை முறை என்பதை ஏற்க இயலாது மேலும் அம்முறையில் ஆறுதல் மருந்தின் பாதிப்பை மீறிய எந்த நன்மையும் விளைந்ததாக தெரியவில்லை.[6][7]

பாதுகாப்பு மற்றும் குணப்படுத்தும் ஆற்றல்

சோதனை செய்யாத இதர பதிலீடான மருத்துவ முறைகளில் காணப்படும் பாதுகாப்பைபோலவே ரெய்கி மருத்துவ முறை பற்றிய கவலைகளும் அமைந்துள்ளன. மருத்துவ மற்றும் அதை சார்ந்த உடல் நல மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் கடுமையான நோய்களால் அவதியுறும் போது, மருத்துவத்தில் முறையாக சோதனை செய்த சிகிச்சை முறைகளை விட்டுவிட்டு, இதுபோன்ற முறைசாரா மற்றும் சோதிக்கப்படாத மருத்துவ முறைகளை நாடி செல்லலாம் என நம்புகிறார்கள்.[68] ரெய்கி முறையை பின்பற்றும் பயிற்சியாளர்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களை கடினமான வியாதிகளுக்கு ஒரு மருத்துவரை பார்க்க செல்லுமாறு அறிவுறுத்தலாம், மற்றும் முறையான மருத்துவத்திற்கு ஒத்திசையாக ரெய்கி முறையையும் பயன்படுத்தலாம் என்று கூறலாம்.[69] ரெய்கி முறைகளை பயன்படுத்துவதால், நோயாளிகள் ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகிறார்களா என்ற மருத்துவ சோதனைகள் எதுவும் அறிக்கை விடவில்லை.[6]

தி நேஷனல் கவுன்சில் அகைன்ச்ட் ஹெல்த் பிராட் (The National Council Against Health Fraud) கூறும் யோசனை என்ன என்றால், ரெய்கி முறை சிகிச்சையால் ஏதேனும் ஒரு மருத்துவ தாக்கம் ஏற்பட்டது என்றால் அது அதற்கான யோசனை கூறியதால் ஏற்பட்டதே என்பதே இம்முறை (ஆறுதல் மருந்தின் விளைவு),[70] மற்றும் ரெய்கி ஒரு "நல்ல-உணர்வினை" கொடுக்கவல்லதான மருத்துவ சிகிச்சை என முத்திரை குத்தப்பட்டதாகும், மேலும் அதை பெறுபவர்களே அதன் மூலம் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாதவர்களே ஆகும்.[71]

உள்ளடங்கிய சர்ச்சைகள்

ரெய்கியை கற்றுத்தருவதற்கான பல்வேறு வேறுபட்ட முறைகள் இருப்பதால், சில குழுமங்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் புரிபவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ரெய்கி சக்தி போன்ற தலைப்புகளில் கூட கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன, பயிற்சி வகுப்புகள் அமைப்பு மற்றும் அதற்கான கட்டணம், பயிற்சி முறைகள், குறியீடுகளின் (அடையாளங்களின்) ரகசியத்தன்மையை காத்தல், மேலும் ஒத்திசைவு முறைகள் போன்றவை சர்ச்சைக்குரியதாக காணப்படுகின்றன.[72][73]

ஹவாயோ தகடவின் இறப்பிற்குப்பிறகு, 1990 ஆண்டுகளின் இடைக்காலங்களில், ரெய்கியின் "கிராண்ட்மாஸ்டர்" (Grandmaster) பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது. இருந்தாலும், தகட அவர்களே இந்த சொல்லை உருவாக்கியதாக அறிந்த பின், இந்த கருத்து வேறுபாடு தன்னிச்சையாகவே அடங்கிவிட்டது.[74]

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதங்கங்கள்

மார்ச் 2009 ஆண்டில், தி கமிட்டி ஒன் டாக்டரின் ஓப் தி யுனைடேட் ஸ்டேட்ஸ் கான்பெரென்ஸ் ஓப் கதோலிக் பிஷப்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள் (கைட்லைன்ஸ் போர் எவாலுயேடிங் ரெய்கி அஸ் அன் அல்டேர்நேடிவ் தெராபி [75], 25 மார்ச் 2009) ஹால்டிங் தி ப்ராக்டிஸ் ஓப் ரெய்கி பை காதொலிக்ஸ், இன்க்ளுடிங் ரெய்கி தேராபீஸ் யூஸ்ட் இன் சம் காதொலிக் ரிட்ரீட் சென்டர்ஸ் அண்ட் ஹாஸ்பிடல்ஸ்.(கத்தோலிக்கர்கள் ரெயகி முறையை பின்பற்றுவதை தடை செய்வதற்கான முயற்சி) அதன் முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பாணை கூறியதாவது "ரெய்கி தெரபி கிறிஸ்துவ போதனைகள் மற்றும் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இல்லாததால், கத்தோலிக்க நிறுவனங்களுக்கு, அதாவது கத்தோலிக்க உடல் நல வசதிகள் மற்றும் ஓய்வு மையங்கள், அல்லது தேவாலயங்களின் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள், அதாவது கதோலிக் பாதிரியார்கள் போன்றோர், ரெய்கி தெரபியை மேம்படுத்துவதோ அல்லது அதற்கு ஆதரவாக இருப்பதோ, சரிப்பட்டு வராது."

மேலும் பார்க்க

  • ஈடு செய்யும் மருந்து
  • ஆற்றல் மருந்து
  • கினேசியா தெரப்பி
  • கி
  • ரெய்கி வரலாறு, காலவரிசையில் ஒரு சுருக்கமான ரெய்கி வரலாறு
  • அதிர்வுடன் கூடிய மருந்து

குறிப்புகள்

  1. 1.0 1.1 உசுயிஸ் 21 டே ரிட்ரீட்: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 14); வாட் இஸ் தி ஹிஸ்ட்ரி ஓப் ரெய்கி?
  2. நேஷனல் சென்டர் போர் கம்ப்ளிமேன்டறி அண்ட் அல்டேர்நேடிவ் மெடிசின் "ரெய்கி: அன் இன்ட்றோடக்சன்", nccam.nih.gov/health/reiki/ . நவம்பர் 24, 2008 அன்று அணுகப்பட்டது.
  3. இன்ஸ்டிடுட் போர் கம்ப்ளிமேன்டறி அண்ட் நேச்சுரல் மெடிசின் "பி ஆர் சி பி டிவிசன்ஸ் அண்ட் ப்ராக்டிசெஸ்" பரணிடப்பட்டது 2007-08-12 at the வந்தவழி இயந்திரம், i-c-m.org.uk . நவம்பர் 24, 2008 அன்று அணுகப்பட்டது.
  4. 4.0 4.1 நேஷனல் சென்டர் போர் கம்ப்ளிமேன்டறி அண்ட் அல்டேர்நேடிவ் மெடிசின் அன் இன்ட்றோடக்சன் டு ரெய்கி
  5. ரெய்கி ப்ளௌஸ் த்ரூ ஹான்ட்ஸ்: (மக்கேன்சீ 1998 ப 18); (எல்ல்யர்ட் 2004 ப 27); (போராங் 1997 ப 9); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 33)
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Lee, MS; Pittler, MH; Ernst, E (2008). "Effects of reiki in clinical practice: a systematic review of randomized clinical trials". International Journal of Clinical Practice 62 (6): 947. doi:10.1111/j.1742-1241.2008.01729.x. பப்மெட்:18410352. http://doi.org/10.1111/j.1742-1241.2008.01729.x. பார்த்த நாள்: 2008-05-02. 
  7. 7.0 7.1 ஹெண்டெர்சன், மார்க். "பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கைட் டு அல்டேர்நேடிவ் மெடிசின் 'இனக்குரேட்'" பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம், தி டைம்ஸ். ஏப்ரல் 17, 2008 நவம்பர் 24, 2008 அன்று அணுகப்பட்டது.
  8. லின் யுடங், 1972, லின் யுடங்க்ஸ் சைனீஸ்-இங்கிலீஷ் டிக்சனரி ஓப் மாடர்ன் யுசேஜ் , சைனீஸ் யுனிவேர்சிட்டி ஓப் ஹாங் காங் பிரஸ்.
  9. லிங்க் யுஅன், 2002, தி கண்டெம்பரரி சைனீஸ் டிக்சனரி, சைனீஸ்-இங்கிலீஷ் எடிசன் , போறேய்ன் லாங்குவேஜ் டீச்சிங் அண்ட் ரிசெர்ச் பிரஸ்.
  10. தே பிரான்சிஸ், ஜான், 2003, எபி சி சைனீஸ்-இங்கிலீஷ் காம்ப்றேஹென்சிவ் டிக்சனரி, யுனிவெர்சிட்டி ஓப் ஹவாய் பிரஸ்.
  11. டிரைவேசன் ஓப் நேம்: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 அத் 6)
  12. எம். ச்பாஹ்ன் அண்ட் டபிள்யு. ஹடமிட்ட்சி, 1989, ஜப்பானீஸ் காரக்டர் டிக்சனரி வித் காம்பௌன்ட் லூக்கப் வையா எனி கஞ்சி, நிசிகை.
  13. ஜே.எச். ஹேக், ஆ. 1997, தி நியூ நெல்சன் ஜப்பானீஸ்-இங்கிலீஷ் காரக்டர் டிக்சனரி, டுட்டில்.
  14. டி. வாடனாபே, ஈ., ஆர். ச்க்ரசிப்ச்சாக், பி. ச்நோவ்டென், 2003, கேன்க்யுசாஸ் நியூ ஜப்பானீஸ்-இங்கிலீஷ் டிக்சனரி.
  15. லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 302; மக்கேன்சீ 1998 ப 18; ஷுப்ப்ரே 1998 ப 1
  16. பௌண்டிங் ஓப் உசுய் ரெய்கி ரிஓஹோ கக்கை: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 14)
  17. ப்ராக்டிஸ் ஓப் 5 ப்ரின்சிபில்ஸ்: பார்ட் ஓப் ரெய்கி அல்லயன்ஸ் மெம்பர்ஷிப் அக்ரீமென்ட்[தொடர்பிழந்த இணைப்பு]
  18. தி 5 ரெய்கி ப்ரின்சிபில்ஸ்: ரெய்கி ப்ரின்சிபில்ஸ்; (பெட்டர் 1998 ப 29); (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 95)
  19. நம்பர் ஓப் பீபில் டாட் பை உசுய்: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 16)
  20. ஹயஷிஸ் டீச்சிங்க்ஸ்: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 17, அத் 19)
  21. ஹயஷி ட்றேயின்ட் தகட: (எல்ல்யர்ட் 2004 ப 13)
  22. தகடாஸ் ரெய்கி ப்ராக்டிஸ் அண்ட் டீச்சிங் இன் தி யு எஸ்: (எல்ல்யர்ட் 2004 ப 15)
  23. ஸ்டார்ட் ஓப் தகடாஸ் டீச்சிங் ஓப் ரெய்கி மாஸ்டர்ஸ்: (எல்ல்யர்ட் 2004 ப 15)
  24. (பெட்டர் 1997 ப 21), (வேல்தேம், வேல்தேம் 1995 ப 26)
  25. தகட ட்றேயின்ட் 22 ரெய்கி மாஸ்டர்ஸ்: (எல்ல்யர்ட் 2004 ப 14), (வேல்தேம், வேல்தேம் 1995 ப 26), (பெட்டர் 1997 ப 20)
  26. சிக்நிபிகன்ஸ் ஓப் தகட இன் பிரிங்கிங் ரெய்கி அவுட் ஓப் ஜப்பான்: (எல்ல்யர்ட் 2004 ப ப 14,16), (வேல்தேம், வேல்தேம் 1995 ப 26)
  27. ரெய்கி சிம்பல்ஸ் ப்ரம் reiki.info
  28. ரெய்கி இஸ் இநெக்ஸ்சாச்டிபிள். மக்கேன்சீ 1998 ப 18; போராங் 1997 ப 9
  29. ரெய்கி அஸ் யுனிவேர்சல் லைப் போர்ஸ் எனெர்ஜி: லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 62; மக்கேன்சீ 1998 ப 18; எல்ல்யர்ட் 2004 ப 75; (லுபெக் 1994 ப 13); (போராங் 1997 ப 8)
  30. மக்கேன்சீ 1998 ப 18; லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப ப 14, 68; வேல்தேம், வேல்தேம் 1995 ப 30; எல்ல்யர்ட் 2004 ப 27
  31. எனிவன் கான் பி அட்டுன்ட் டு ரெய்கி: (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 8); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 35); (எல்ல்யர்ட் 2004 ப 77)
  32. அக்செஸ் இஸ் பை மீன்ஸ் ஓப் அட்யுன்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப ப 27,31); (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 ப 22); (மக்கேன்சீ 1998 ப ப 18,19); (கோல்லாகேர் 1998 ப 26); (போராங் 1997 ப 12)
  33. குறிப்பு: அட்யுன்மென்ட் மற்றும் "இநிசியேசன்" ஆகிய இரு சொற்களும் ரெய்கியைப்பொறுத்தவரை பொதுவாக ஒன்றுக்கொன்று மாற்றியமைக்கலாம். எப்பொழுதாவது அவற்றில் சிறிய வேறுபாட்டை அதன் வலுவூட்டங்களில் காணலாம், அட்யுன்மென்ட் என்பதை ரெய்கியின் சக்தியை அடைந்த நிலையிலும், மற்றும் "இநிசியேசன்" ஒரு தனி மனிதனின் (ஆன்மீக) வளர்ச்சியை குறிப்பிடும் போது பயன்படுத்துவதாகும். இவ்விரண்டு கோணங்களும் ஒரே தன்மையினை ஒரே நடைமுறையை குறிப்பிடுவதாகும்.
  34. The 'National Center for Complementary and Alternative Medicine (13 October 2006). "Energy Medicine: An Overview". Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04."
  35. Stenger, Victor J. (1999). "The Physics of 'Alternative Medicine' Bioenergetic Fields". Scientific Review of Alternative Medicine 3 (1): 1501. doi:10.1126/science.134.3489.1501. பப்மெட்:14471768. http://www.sram.org/0301/bioenergetic-fields.html. பார்த்த நாள்: 2008-03-30. 
  36. ரெய்கி இஸ் ஹோலிஸ்டிக், பரிங்கிங் ஹீலிங் ஓன் பிசிகல், மெண்டல், எமோசனல் அண்ட் ஸ்பிரிச்சுவல் லெவேல்ஸ்: (பகின்ஸ்கி, ஷார்மன் 1988 ப 35); (கோள்ளகேர் 1998 ப 44); (போராங் 1997 ப 10); (மக்கேன்சீ 1998 ப 81)
  37. ரெசிபியன்ட் மே பி க்லோத்ட்: (லுபெக் 1994 ப 48); (மக்கேன்சீ 1998 ப 81); (போராங் 1997 ப ப 10,36)
  38. ரெய்கி ஆக்டிவேட்ஸ் ஓர் என்ஹன்செஸ் நாச்சுரல் ஹீலிங்: (மக்கேன்சீ 1998 ப 18); (வேல்தேம், வேல்தேம் 1995 ப ப 78,93); (கோள்ளகேர் 1998 ப 24)
  39. ரெய்கி இஸ் "இண்டல்லிஜென்ட்": (எல்ல்யர்ட் 2004 ப ப 28,29); (போராங் 1997 ப 10)
  40. செகண்ட் லெவல் அல்லௌஸ் டிஸ்டன்ஸ் ஹீலிங்: (எல்ல்யர்ட் 2004 ப 107); (மக்கேன்சீ 1998 ப 56); (லுபெக் 1994 ப 155); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 119)
  41. யூஸ் ஓப் சிம்பல்ஸ் போர் கோன்னேச்சன் ட்யுரிங் டிஸ்டன்ட் ஹீலிங்: (மக்கேன்சீ 1998 ப 39); (எல்ல்யர்ட் 2004 ப 110)
  42. ரெய்கி கேன் பி சென்ட் டு பாஸ்ட் ஓர் பியுச்சர்: (மக்கேன்சீ 1998 ப 39); (எல்ல்யர்ட் 2004 ப 115); (லுபெக் 1994 ப 155)
  43. ஹோல் போடி ட்ரீட்மென்ட்: (லுபெக் 1994 அத் 4, அத் 5); (மக்கேன்சீ 1998 ப 84); (எல்ல்யர்ட் 2004 ப 45); (லுபெக், பெட்டர், ரேண்ட் 2001 அத் 20); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 79); (பெட்டர் 1997 ப ப 50,55); (போராங் 1997 ப 36)
  44. மெண்டல் ப்ரிபரேசன் பை ப்ராக்டிசனர் அட் ஸ்டார்ட் ஓப் ட்ரீட்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப 46)
  45. மினிமம் டால்கிங் டுரிங் போர்மல் ட்ரீட்மென்ட்ஸ்: (எல்ல்யர்ட் 2004 ப 45)
  46. டுரேசன் ஓப் ஹோல் போடி ட்ரீட்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப 41)
  47. யூஸ் ஓப் இன்ட்யுசன்: (உசுய், பெட்டர் 2003 ப 17)
  48. இம்மிடியெட் எபக்ட்ஸ் ஓப் ட்ரீட்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப 44)
  49. பிரீக்வென்சி ஓப் ட்ரீட்மென்ட் ஓப் அதர்ஸ்: (எல்ல்யர்ட் 2004 ப 41)
  50. பிரீக்வென்சி ஓப் ஸெல்ப்-ட்ரீட்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப 41)
  51. ட்ரீட்மென்ட் ஓப் இஞ்ச்யுரீஸ்: (மக்கேன்சீ 1998 ப 110); (எல்ல்யர்ட் 2004 ப 70); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 77)
  52. ஹான்ட் போசிசன்ஸ் போர் ஸ்பெசிபிக் எயில்மென்ட்ஸ்: (உசுய், பெட்டர் 2003 ப ப 49-67); (லுபெக் 1994 ப ப 173-184)
  53. ஹோல் போடி ட்ரீட்மென்ட் போர் குரோனிக் கண்டிசன்ஸ்: (மக்கேன்சீ 1998 ப 108); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 81)
  54. லொகாலைஸ்ட் ட்ரீட்மென்ட் போல்லோவிங் ஓன் ப்ரம் ஹோல் போடி ட்ரீட்மென்ட்: (மக்கேன்சீ 1998 ப 105)
  55. ரெய்கி இஸ் டாட் இன் 3 லெவெல்ஸ்: (மக்கேன்சீ 1998 ப 54); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 117); (பெட்டர் 1997 ப 38)
  56. பிரஸ்ட் டிகிரி கோர்ஸ் கன்டென்ட்: (மக்கேன்சீ 1998 ப 54); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 118); (பெட்டர் 1997 ப 38)
  57. எப்பெக்ட் ஓப் 4 அட்யுன்மென்ட்ஸ் இன் 1ஸ்ட் லெவல்: (எல்ல்யர்ட் 2004 ப 37)
  58. டீச்சிங் ஓப் ஹான்ட் போசிசன்ஸ் ட்யுரிங் பிரஸ்ட் டிகிரி கோர்ஸ்: (பகின்ஸ்கி, ஷார்மன் 1988 ப 48), (பெட்டர் 1997 ப 39)
  59. டுரேசன் ஓப் பிரஸ்ட் டிகிரி கோர்ஸ்: (பகின்ஸ்கி, ஷார்மன் 1988 ப 46), (பெட்டர் 1997 ப 38)
  60. செகண்ட் டிகிரி கோர்ஸ் கன்டென்ட்: (மக்கேன்சீ 1998 ப 56); (வேல்தேம், வேல்தேம் 1995 ப 119); (பெட்டர் 1997 ப 43)
  61. டீச்சிங் ஓப் சிம்பல்ஸ் இன் செகண்ட் டிகிரி: (எல்ல்யர்ட் 2004 ப 81)
  62. எப்பெக்ட் ஓப் 2ன்ட் லெவல் அட்யுன்மென்ட்: (எல்ல்யர்ட் 2004 ப 81)
  63. ஹீலிங் அட் எ டிஸ்டன்ஸ் டாட் ட்யுரிங் செகண்ட் டிக்ரீ கோர்ஸ்: (பெட்டர் 1997 ப 43)
  64. மாஸ்டர் ட்ரைனிங்: (மக்கேன்சீ 1998 ப 58); (வேல்தேம், வேல்தேம் 1995 ப ப 120-124); (பெட்டர் 1997 ப ப 47-49)
  65. கன்டென்ட் ஓப் மாஸ்டர் ட்ரைனிங்: (எல்ல்யர்ட் 2004 அத்16, அத்17)
  66. "ரெய்கியின் நிலைகள்". Archived from the original on 2009-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04.
  67. அஹ்லம் எ. மன்சூர், மரியன் புசே, கைல் லைங், அன் லேஇஸ், ஜூடி நர்ஸ், "எ ஸ்டடி டு டெஸ்ட் தி எப்பெக்டிவ்னெஸ் ஓப் ப்லாசெபோ ரெய்கி ஸ்டான்டர்டைசேசன் ப்ரோசீஜர்ஸ் டெவேலப்ட் போர் எ ப்லான்ன்ட் ரெய்கி எபீகாசி ஸ்டடி", ஜெர்னல் ஓப் அல்டேர்நேடிவ் அண்ட் காம்ப்ளிமென்டரி மெடிசின், ஏப்ரல் 1999, 5(2): 153-164. doi:10.1089/acm.1999.5.153.
  68. Lilienfeld, Scott O. (2002). "Our Raison d’Être". The Scientific Review of Mental Health Practice 1 (1). http://www.srmhp.org/0101/raison-detre.html. பார்த்த நாள்: 2008-01-28. 
  69. ரெய்கி டஸ் நாட் ரிப்ளேஸ் கண்வென்சணல் மெடிசின் பட் கம்ப்ளிமென்ட்ஸ் இட்: (மக்கேன்சீ 1998 ப ப 7,18,105)
  70. எ ஸ்கெப்டிகல் அஸ்செஸ்மென்ட் ஓப் ரெய்கி: நேஷனல் கவுன்சில் அகைன்ஸ்ட் ஹெல்த் பிராட் ஆர்டிகிள்.
  71. சம் தோட்ஸ் அபௌட் "காம்" பிலீப்ஸ்
  72. "Charging for Reiki Healing". Indobase. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
  73. Ray, Barbara (1995). "The Radiance Technique, Authentic Reiki: Historical Perspectives". The Radiance Technique International Association Inc. பார்க்கப்பட்ட நாள் 2008-04-02.
  74. "கிரான்ட்மாஸ்டர்" டிச்ப்யுட்: (வேல்தேம், வேல்தேம் 1995 ப 106), (எல்ல்யர்ட் 2004 ப ப 21,23)
  75. "கைட்லைன்ஸ் போர் எவேலுயெடிங் ரெய்கி அஸ் அன் அல்டெர்நேடிவ் தெரபி, 25 மார்ச் 2009" (PDF). Archived from the original (PDF) on 2009-06-20. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்