இலக்னோ

இலக்னௌ

लखनऊ
لکھنؤ

—  தலைநகரம்  —
இலக்னௌ
அமைவிடம்: இலக்னௌ, உத்தரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 26°51′38″N 80°54′57″E / 26.860556°N 80.915833°E / 26.860556; 80.915833
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் இலக்னௌ
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மாநகரத் தலைவர் தினேஷ் சர்மா
மக்களவைத் தொகுதி இலக்னௌ
மக்கள் தொகை

அடர்த்தி

2,800,000 (2006)

331/km2 (857/sq mi)

மொழிகள் ஆங்கிலம், இந்தி, உருது
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2345 கிமீ2 (905 சதுர மைல்)

123 மீட்டர்கள் (404 அடி)

மாவட்ட அதிபர் சந்திரா பானு
குறியீடுகள்
இணையதளம் lucknow.nic.in


இலக்னோ அல்லது இலக்னௌ (இந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. 310.1 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 22,07,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம்.[1] இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது.[2] இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Lucknow Directory of service". lucknowonline.com.
  2. Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam by Juan Ricardo Cole