லிச்சாவி

லிச்சாவி (Licchavi) (Lichchhavi, Lichavi) நேபாளாத்தில் கி பி 400 முதல் 750 வரை காத்மாண்டு சமவெளியில் லிச்சாவி எனும் அரச மரபினரால் ஆளப்பட்டது. இவர்கள் ஆண்ட பகுதிக்கு லிச்சாவி நாடு என்பர். கௌதம புத்தர் காலத்திய லிச்சாவிகளின் மகாஜனபத குடியரசு நாட்டிற்கும், நேபாளத்தை ஆண்ட இந்த லிச்சாவி அரச குலத்தினருக்கும் உள்ள தொடர்பு அறியப்படவில்லை.

லிச்சாவியர்கள் தங்களது கல்வெட்டு குறிப்புகளை சமஸ்கிருத மொழியில் எழுதி வைத்திருந்தனர். லிச்சாவி எனும் சொல்லிற்கு சமஸ்கிருத மொழியில் நட்சத்திரம் எனப் பொருள். [1]

முதலில் காத்மாண்டு நகர சதுக்கத்தில், கி பி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயில்களை எழுப்பியவர் முதலாம் மானதேவன் எனும் லிச்சாவி குல மன்னர் ஆவார்.

லிச்சாவிகளும் குப்தர்களும்

சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் லிச்சாவி நாட்டின் இளவரசியும், தனது தாயுமான குமாரதேவி-மற்றும் முதலாம் சந்திரகுப்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்லது, கிபி 350 - 380

மகத நாட்டின் குப்தப் பேரரசர் முதலாம் சந்திரகுப்தர், லிச்சாவிகளின் இளவரசி குமாரதேவியை மணந்தவர்.

சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும்.[2] பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில், சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.[3]

பதிவுகள்

நேபாள-இந்திய எல்லையில் பிகார் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருந்த லிச்சாவி இனக் குழுவினர், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், நேபாள நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிராதர்களை வென்று தங்கள் ஆட்சியை நிறுவினர்.

பௌத்த சமய நூல்களில், குறிப்பாக லிச்சாவி சுத்தத்தில் லிச்சாவிய இனக் குழுவினரை பல முறை குறித்துள்ளது.[4]

அன்மையில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகளின் படி லிச்சாவி மன்னன் முதலாம் மானதேவன் நிறுவிய லிச்சாவி நாட்டை கி பி 464 முதல் மூன்று லிச்சாவி அரச குலத்தவர்கள் ஆண்டதாக தெரிகிறது.

பறக்கும் குதிரை உருவத்தின் மேல் லிச்சாவி மன்னன் ஜிஷ்ணு குப்தர் பெயர் பதித்த செப்பு நாணயம் (கி பி 622-633)
ஜிஷ்ணு குப்தரின் செப்பு நாணயத்தின் பின் பக்கம்

ஆட்சியாளர்கள்

நேபாள லிச்சாவி நாட்டை கி பி 185 முதல் 877 முடிய ஆண்ட லிச்சாவி குல மன்னர்களின் தேரயமான பட்டியல்;[5]

  • 464-505 முதலாம் மானதேவன்
  • 505-506 மகிதேவன்
  • 506-532 வசந்ததேவன்
  • 538 வாமனதேவன் என்ற வர்தமானதேவன்
  • 545 ராமதேவன்
  • அமரதேவன்
  • 560-565 கணதேவன்
  • 567-c. 590 பாகுமாகுப்தன் என்ற பூமிகுப்தன்
  • 567-573 கங்கதேவன்
  • 575/576 இரண்டாம் மானதேவன்
  • 590-604 முதலாம் சிவதேவன்
  • 605-621 அம்சுவர்மன்
  • 621 உதயதேவன்
  • 624-625 துருவதேவன்
  • 631-633 பீமார்ஜுனதேவன்
  • 635 ஜிஷ்ணு குப்தர் என்ற விஷ்ணு குப்தர்
  • 640-641 பீமார்ஜுனதேவன்
  • 643-679 நரேந்திரதேவன்
  • 694-705 இரண்டாம் சிவதேவன்
  • 713-733 இரண்டாம் ஜெயதேவன்
  • 748-749 இரண்டாம் சங்கரதேவன்
  • 756 மூன்றாம் மானதேவன்
  • 826 பலிராஜன்
  • 847 பாலதேவன்
  • 877 நான்காம் மானதேவன்

இதனயும் காண்க

மேற்கோள்கள்

  1. "Gautamavajra Vajrācārya, "Recently Discovered Inscriptions of Licchavi Nepal", Kathmandu Kailash - Journal of Himalayan Studies. Volume 1, Number 2, 1973. (pp. 117-134)". Archived from the original on 2008-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
  2. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, University of Calcutta, Calcutta, pp.468-9
  3. Lahiri, Bela (1974) Indigenous States of Northern India (circa 200 BC - 320 AD), University of Calcutta, Calcutta, p.71,71n
  4. "Licchavi Sutta," translated from the Pali by Thanissaro Bhikkhu (2004).
  5. Tamot, Kashinath and Alsop, Ian. "A Kushan-period Sculpture, The Licchavi Kings", Asianart.com

வெளி இணைப்புகள்