லேர்னியன் ஐதரா

ஐதரா
(லேர்னியன் ஐதரா)
ஹேர்க்கியூலஸும் லேர்னியன் ஐதராவும்
குழுபுராண இஒதிகாச உயிரினம்
உப குழுபாம்பு
மூலம்தைப்பூன் மற்றும் எக்கின்டா
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுபண்டைக் கிரேக்கம்

லேர்னியன் ஐதரா (Lernaean Hydra) என்பது கிரேக்கத் தொன்மவியலிலும் உரொமத் தொன்மவியலிலும் காணப்படும் ஒரு வகைப் நீர் வாழ்ப் பாம்பு ஆகும். லேர்னா எனப்படும் ஏரியில் ஒன்பது தலைகளைக் கொண்ட இது வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனுடைய தலைகள் வெட்ட வெட்ட இரண்டு மடங்காக பெருகும் ஆற்றல் படைத்திருந்தன.[1] இதன் உடல் நாயைப் போன்று அமைந்திருந்தது.[2] இது வெளியிடும் மூச்சுக்காற்றும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். ஒன்பது தலைகளில் நடுவில் காணப்பட்ட தலை ஒருபோதும் அழியாத ஆற்றலைக் (Immortal) கொண்டிருந்தது.

தொன்மவியல்

ஹேர்க்குலிஸின் இரண்டாம் வேலை

லேர்னியன் ஐதராவைக் கொல்வதே ஹேர்க்கியூலஸிற்குக் கொடுக்கப்பட்ட இரண்டாவது வேலையாகும். தனது மருமகனான அயோலசுடன் இணைந்து தேரில் லேர்னா ஏரி இருந்த இடத்திற்கு ஹேர்க்கியூலஸ் சென்றான்.[3] அதீனா தெய்வத்தின் ஆலோசனைப்படி நெருப்பு அம்புகளால் ஐதராவின் எட்டுத்தலைகளையும் ஹேர்க்கியூலஸ் வீழ்த்தினான். இவ்வாறு ஹேர்க்கியூலஸ் ஐதராவுடன் மும்முரமாக சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது எரா தெய்வம் அவனைக் கொல்வதற்காக கொடிய நண்டொன்றை அனுப்பினாள் எனினும் தனது பலமான கால்களால் அந்நண்டின் ஓட்டை உடைத்து அதனை ஹேர்க்கியூலஸ் கொன்றான். பின்னர் அதீனா தெய்வம் வழங்கிய பொன் வாளால் அவ்வைதராவின் அழியா சக்தி பெற்ற தலையை வெட்டினான். பின்னர் ஐதராவின் இரத்தத்தை தன்னுடைய சில அம்புகளின் முனையில் தோய்த்தெடுத்தான். எரா தெய்வம் ஹேர்க்கியூலஸினால் கொல்லப்பட்ட நண்டை வானில் உடுத்தொகுதியாக மாற்றியமைத்தாள்.[4][5]

இவ்வேலையை செய்து முடிப்பதற்கு ஹேர்க்கியூலஸினால் அயோலசின் உதவி நாடப்பட்டமையால் இவ்வேலை யுரிஸ்தியஸ் மன்னனால் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதற்குப்பதிலாக வேறொரு வேலை கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்