லே மாவட்டம்

லே மாவட்டம்
Location of லே மாவட்டம்
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
நிறுவிய ஆண்டு1 சூலை 1979
தலைமையிடம்லே
வருவாய் வட்டங்கள்8
அரசு
 • மக்களவைத் தொகுதிலடாக் மக்களவைத் தொகுதி
பரப்பளவு
 • Total45,110 km2 (17,420 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total1,33,487 (2,011)
 • நகர்ப்புறம்
45,671
Demographics
 • எழுத்தறிவு77.2%
 • பாலின விகிதம்690
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்http://leh.nic.in/

லே மாவட்டம் இந்தியாவின் வடகோடியில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் லே நகராகும். மற்றொரு மாவட்டமான கார்கில் லடாக் பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத்தை லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே மேற்கொள்கிறது.

இது பரப்பளவில் குசராத்தின் கட்ச் மாவட்டதுக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இதன் வட பகுதியில் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலங்களும் தென்பகுதியில் இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டமும், மேற்கில் கார்கில் மாவட்டமும், கிழக்கில் அக்சாய் சின் மற்றும் திபெத்தும் எல்லைகளாக உள்ளன.

1979ம் ஆண்டு வரை லடாக் பகுதி முழுவதும் லே நகரத்தை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது. 1979ல் லடாக் பகுதியை கார்கில், லே என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

திபெத்திலிருந்து வரும் சிந்து ஆறு லே மாவட்டத்தில் கிழக்குமேற்காக பயணித்து, சிறிது தூரம் கார்கில் மாவட்டத்தில் பயணித்து பின் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலங்களுக்கு செல்கிறது.

தன்னாட்சி மலைக் குழு

லே மாவட்டத்தின் நிர்வாகம், 1995-ஆம் ஆண்டு முதல் லே தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

45,110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, லே மாவட்டத்தின் 2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 1,33,487 ஆகும். அதில் ஆண்கள் 78,971 மற்றும் பெண்கள் 54,516 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 690 பெண்கள் மட்டுமே உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,016 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.20% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 பேர் வீதம் மட்டுமே உள்ளனர்.

சமயம்


லே மாவட்ட சமயம் (2011)[1]

  சமணம் (0.08%)
  பிறர் (0.04%)
  சமயம் குறிப்பிடாதோர் (0.75%)

மாவட்ட நிர்வாகம்

லடாக் பகுதியில் லே மாவட்டம்

சூலை, 2019-ஆம் ஆண்டின் படி, லே மாவட்டம் 8 வருவாய் வட்டங்களும், 8 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

  1. லே வருவாய் வட்டம்
  2. கால்சி வருவாய் வட்டம்
  3. நியோமா வருவாய் வட்டம்
  4. காரு வருவாய் வட்டம்
  5. திஸ்கித் நூப்ரா வருவாய் வட்டம், (நூப்ரா பள்ளத்தாக்கு)
  6. சுஸ்போல் வ்ருவாய் வட்டம்
  7. துர்புக் வருவாய் வட்டம்
  8. சுமூர் வருவாய் வட்டம் [2]

ஊராட்சி ஒன்றியங்கள்

லே மாவட்டத்தின் 16 ஊராட்சி ஒன்றியங்கள்::

  1. கல்சி ஊராட்சி ஒன்றியம்
  2. சுகுர்பூச்சான் ஊராட்சி ஒன்றியம்
  3. லிங்செட் (சிங்கெலாலோக்) ஊராட்சி ஒன்றியம்
  4. சஸ்போல் ஊராட்சி ஒன்ரியம் Saspol
  5. நிமோ அல்லது நிமூ ஊராட்சி ஒன்றியம்
  6. சூசோட்கோங்மா ஊராட்சி ஒன்றியம்
  7. திக்சே ஊராட்சி ஒன்றியம்
  8. துர்புக் ஊராட்சி ஒன்றியம்
  9. தாங்சே ஊராட்சி ஒன்றியம்
  10. ரோங் ஊராட்சி ஒன்றியம்
  11. நியோமா ஊராட்சி ஒன்றியம்
  12. ருப்சூ ஊராட்சி ஒன்றியம்
  13. திஸ்கித் ஊராட்சி ஒன்றியம்
  14. சுமூர் ஊராட்சி ஒன்றியம்
  15. துர்டுக் ஊராட்சி ஒன்றியம்
  16. பனமிக் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

லே மாவட்டம் லே மற்றும் நூப்ரா என 2 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.

போக்குவரத்து வசதிகள்

  • சாலை போக்குவரத்து :

லேயில் இருந்து கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் சேவைகள் உள்ளன.

  • விமானம் போக்குவரத்து :

லேயில் இருந்து டெல்லி, ஸ்ரீநகர், ஜம்மு போன்ற நகரங்களுக்கு விமானம் சேவைகள் உள்ளன.

இதனையும் காண்க

சான்று

  1. "Leh District Population Census 2011-2020, Jammu and Kashmir literacy sex ratio and density".
  2. Leh tehsils.