வரப்புழாப் பாலம்

[[File:Varapuzha-Bridge.JPG|thumb|right|வரப்புழாப் பாலம் வரப்புழாப் பாலம் (Varapuzha bridge) என்பது கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 17 இல் பெரியார் ஆற்றின் மேலே வரப்புழா மற்றும் சேரநல்லூர் இடையே கட்டப்பட்டுள்ள கொடுங்கைப் பாலமாகும். சமப்படுத்தப்பட்ட குறுக்குக்கோல் (120மீ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேரளாவில் முதன்முதலில் கட்டப்பட்டப் பாலம் வரப்புழாப் பாலம் ஆகும்[1][2]. கெயிசன் தளவமைப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட முதலாவது பாலமும் இதுவாகும். பாலத்தின் நிர்மாணம் தனித்துவம் மிக்கது எனப்பாராட்டி தேசியப் பாலப் பொறியாளர்கள் நிறுவனம் இப்பாலத்திற்கு 1999 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.[3][4] 2001 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று வரப்புழாப் பாலம் போக்குவரத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டது.[5] மலபாருக்கும் கொச்சிக்கும் இடையில் உள்ள தூரம் இதனால் பெரிதும் குறைந்தது.

மேற்கோள்கள்