வரைகலை நூலகம் (தொழில்நுட்பம்)
வரைகலை நூலகம் (Graphics library) என்பது கணினித் திரையில் காட்சிகளைக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க நூலகம் ஆகும். இது பொதுவாக வழக்கமான வரைகலை செயல்பாடுகளை கையாள ஈடுபடுத்தப்படுகின்றது. இது முழுமையாக மையச் செயற்பகுதியில் (CPU) செயல்படக்கூடியது, பதிக்கப்பட்ட அமைப்புகளில் பொதுவானது. வரைகலை செயலி அலகினால் (GPU) செயல்படுத்தப்படுகின்றது. இதை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிரலால் திரையில் காட்சிகளை கொண்டுவர முடியும். இது, இந்த நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கும் மற்றும் கையாளும் நிரலாளருக்கு உதவுகின்றது. மேலும் அவர்களுக்கு வரைகலை நிரலை உருவாக்க அனுமதிக்கின்றது. இது முக்கியமாக கணினி விளையாட்டுக்களில் பயன்படுகின்றது.
சில நூலகங்கள் ஜி.எல் (G.L) எனும் பெயரைப் பயன்படுத்துகின்றன, குறிப்பாக திறந்த ஜி எல், வலை ஜி எல்.
உதாரணங்கள்
- கைரோ வரைகலை[1]
- கிளட்டர்[2]
- டிரக்ட்எக்ஸ்[3] (மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நூலகம், விண்டோஸ் இயங்குதளங்களிலும் எக்ஸ் பாக்சிலும் இயங்கக்கூடியது)
- எம்வின்[4] (ஒரு பதிக்கப்பட்ட வரைகலை நூலகம்)
- மேசா முப்பரிமாணம்[5] (திறந்த ஜி எல்லை செயல்படுத்தும் நூலகம்)
- மினி ஜி.எல்.[6] (சில முழுமையற்ற திறந்த ஜி எல் செயலாக்கங்கள்)
- திறந்த இன்வென்ட்டர்[7]
- திறந்த இஸ்கியா[8]
- கியூ டீ[9] (ஒரு பல் இயங்குதள நிரல் கட்டமைப்பு)
- எஸ்.எப்.எம்.எல்[10]
- எளிய நேரடி ஊடக அமைப்பு[11]
- இஸ்கியா வரைகலை நூலகம்[12]
மேற்கோள்கள்
- ↑ cairographics.org
- ↑ clutter-project.org
- ↑ https://msdn.microsoft.com/en-us/library/windows/desktop/ee663274(v=vs.85).aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-29. Retrieved 2015-12-20.
- ↑ http://www.mesa3d.org/
- ↑ https://github.com/victords/minigl
- ↑ http://www.openinventor.com/
- ↑ https://code.google.com/p/openskia/
- ↑ http://www.qt.io/
- ↑ http://www.sfml-dev.org/
- ↑ https://www.libsdl.org/
- ↑ https://skia.org/