வல்லிபுரம் வசந்தன்
வல்லிபுரம் வசந்தன் கப்டன் மில்லர் | |
---|---|
பிறப்பு | துன்னாலை, யாழ்ப்பாணம் | 1 சனவரி 1966
இறப்பு | 5 சூலை 1987 நெல்லியடி, யாழ்ப்பாணம் | (அகவை 21)
தேசியம் | ஈழத் தமிழர் |
மற்ற பெயர்கள் | கப்டன் மில்லர் |
பணி | தமிழ்ப் போராளி |
அறியப்படுவது | முதலாவது கரும்புலி |
கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் (1 சனவரி 1966 - 5 சூலை 1987) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும் முதலாவது கரும்புலியும் ஆவார்.[1] இவர் 1987 சூலை 5 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட நெல்லியடி சமரில் மரணமடைந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார்.[2]
இயக்கத்தில் இணைவு
இளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வசந்தன் மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார். இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்கை இராணுவம் வடமராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது, வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 சூன் 5 ஆம் நாளன்று நெல்லியடி சமரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து ஒன்றை கரவெட்டியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.[3][4] மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.[5]
240 கரும்புலிகள் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். கரும்புலிகள் நாள் ஆண்டு தோறும் சூலை 5 ஆம் நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.[6] இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Col R Hariharan. "SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS". Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டெம்பர் 2018.
{cite web}
: CS1 maint: unfit URL (link) - ↑ Hartley College Vallipuram Vasanthan
- ↑ Secrets of their success
- ↑ "Suicide bombers feared and revered". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.
- ↑ "Asia Times Online :: South Asia news - Black Tigers bare their fangs". Archived from the original on 2012-07-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.
- ↑ BBC Black Tiger Day Anniversary Photos