வளையபெண்டனோன்

வளையபெண்டனோன்
Cyclopentanone[1]
வளையபெண்டனோன்
வளையபெண்டனோன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையபெண்டனோன்
வேறு பெயர்கள்
கீட்டோவளையபெண்டேன்
அடிப்பிக்கு கீட்டோன்
இனங்காட்டிகள்
120-92-3 Y
ChEBI CHEBI:16486 Y
ChEMBL ChEMBL18620 Y
ChemSpider 8141 Y
InChI
  • InChI=1S/C5H8O/c6-5-3-1-2-4-5/h1-4H2 Y
    Key: BGTOWKSIORTVQH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8O/c6-5-3-1-2-4-5/h1-4H2
    Key: BGTOWKSIORTVQH-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00557 Y
பப்கெம் 8452
வே.ந.வி.ப எண் GY4725000
  • C1CCC(=O)C1
UNII 220W81TN3S Y
பண்புகள்
C5H8O
வாய்ப்பாட்டு எடை 84.12 கி/மோல்
தோற்றம் தெளிவானது, நிறமற்ற நீர்மம்
மணம் peppermint-like
அடர்த்தி 0.95 கி/செ.மீ3, நீர்மம்
உருகுநிலை −58.2 °C (−72.8 °F; 215.0 K)
கொதிநிலை 130.6 °C (267.1 °F; 403.8 K)
சிறிதளவு கரையும்
-51.63·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Cyclopentanone
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H315, H319
P210, P302+352, P305+351+338[2]
தீப்பற்றும் வெப்பநிலை 26 °C (79 °F; 299 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

வளையபெண்டனோன் (Cyclopentanone) என்பது C5H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (CH2)4CO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வளைய கீட்டோன் சேர்மமான இது நிறமற்றதாகவும் ஆவியாகக் கூடியதாகவும் கானாப்படுகிறது.

தயாரிப்பு

உயர்ந்த வெப்பநிலையில் பேரியம் ஐதராக்சைடுடன் ​​அடிப்பிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் கீட்டோனாக்கல் வினை நிகழ்ந்து வளையபெண்டனோன் உருவாகிறது:[3]

(CH2)4(CO2H)2 → (CH2)4CO + H2O + CO2

பயன்கள்

வளையபெண்டனோன் வாசனை திரவியங்கள் தயாரிக்க உதவும் ஒரு பொதுவான முன்னோடிச் சேர்மமாகும். குறிப்பாக மல்லிகை மணம் இதனுடன் தொடர்பானது. 2-பெண்டைல்- மற்றும் 2-எப்டைல்வளையபெண்டனோன் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[4] வளையபெண்டனோன் ஒரு பல்துறை செயற்கை இடைநிலை ஆகும். வளையபெண்டோபார்பிட்டால் தயாரிப்பதற்கான முன்னோடியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது.[5]

வளையபெண்டனோன் சேர்மத்திலிருந்து வளையபெண்டோபார்பிட்டால் மருந்து தயாரித்தல்

பென்சிகுரான் என்ற பூச்சிக்கொல்லி மற்றும் வளையபெண்டமீன், பெண்டெத்தில்வளையனோன் போன்றவற்றைத் தயாரிக்கவும் வளையபெண்டனோன் பயன்படுத்தப்படுகிறது.[5]

கியூபேன்-1,4-டைகார்பாக்சிலேட்டு தயாரிக்க உதவும் முன்னோடியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. உயர் வெடிமருந்துகளான எப்டாநைட்ரோகியூபேன் மற்றும் ஆக்டாநைட்ரோகியூபேன் போன்ற பிற மாற்று கியூபேன்களை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Merck Index, 11th Edition, 2748.
  2. Sigma-Aldrich Co., Cyclopentanone.
  3. J. F. Thorpe and G. A. R. Kon (1925). "Cyclopentanone". Organic Syntheses 5: 37. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0192. ; Collective Volume, vol. 1, p. 192.
  4. Johannes Panten and Horst Surburg "Flavors and Fragrances, 2. Aliphatic Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2015, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.t11_t01
  5. 5.0 5.1 Hardo Siegel (2005). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a15_077. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2. 
  6. Bliese, Marianne; Tsanaktsidis, John (1997). "Dimethyl Cubane-1,4-dicarboxylate: A Practical Laboratory Scale Synthesis" (in en). Australian Journal of Chemistry 50 (3): 189. doi:10.1071/C97021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. http://www.publish.csiro.au/?paper=C97021.