வாஇல் குனைம்
வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்) وائل غنيم | |
---|---|
பிறப்பு | திசம்பர் 23, 1980 கெய்ரோ, எகிப்து |
இருப்பிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | எகிப்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கெய்ரோ பல்கலைக்கழகம் (அறிவியல் இளங்கலை பட்டம்) கெய்ரோவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (மேலாண்மை முதுகலைப்பட்டம்) |
பணி | கூகிள் கிழக்கு வடக்கு ஆபிரிக்க சாற்றுதல் தலைவர் பன்னாட்டு செயல்திறனாளர் கணினி பொறியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-நடப்பு |
பணியகம் | கூகிள் |
சமயம் | முசுலிம் |
பிள்ளைகள் | 2[1] |
வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்) (Wael Ghonim[2], அரபு மொழி: وائل غنيم, பிற எழுத்துப்பெயர்புகள்: Ghoneim, Ghonaim) (பிறப்பு: எகிப்தின் கெய்ரோவில் 23 திசம்பர் 1980) ஓர் பன்னாட்டு செயல்திறனாளர், கணினி பொறியாளர் மற்றும் சனவரி 2010 முதல் கூகிள் நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் விற்பனை சாற்றுதலுக்கு தலைவர் ஆவார்.[3]
2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந்த "நாங்கள் அனைவரும் கலீத் சயீத்" என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அவரே நிர்வாகி என்ற காரணத்தால் பதினோரு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை விவரித்த அவரது உணர்ச்சிமிகு நேர்காணல்[4] மூலம் மக்களாட்சி புரட்சி புத்துயிர் பெற்று பன்னாட்டளவில் பாராட்டப்படலானார்.[5][6] அமெரிக்காவின் டயம் என்ற பத்திரிகையின் 2011இல் உலகின் மிகப்பிரபலமான 100 நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Fears for Google employee in Egypt". Amnestyusa.org. 2011-01-28. Archived from the original on 2011-02-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
- ↑ ஒலிப்புதவி: [1] [2]
- ↑ "Wael Ghonim, Google's Marketing Head Reportedly Missing In Egypt". The News Ny. 2011-02-01. Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
- ↑ "An interview with him on Dream TV 2 (அரபு மொழி)engl.subtitle". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
- ↑ "Google worker is Egypt’s Facebook hero". Financial Times. February 9, 2011. http://www.ft.com/cms/s/0/e41c5faa-3475-11e0-9ebc-00144feabdc0.html#axzz1DfvBdbyf.
- ↑ Swaine, Jon (11 Feb 2011). "Egypt crisis: the young revolutionaries who sparked the protests". த டெயிலி டெலிகிராப் (London). http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/egypt/8317055/Egypt-crisis-the-young-revolutionaries-who-sparked-the-protests.html.
- ↑ "டயம்". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2011-04-23.