வானியல் அலகு

1 வானியல் அலகு =
SI அலகுகள்
149.6×109 மீ 149.6×106 கிமீ
வானியல் அலகுகள்
வாஅ 15.813×10−6 ஒஆ
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்
490.81×109 அடி 92.956×106 மை

வானியல் அலகு (astronomical unit, AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு. இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.

1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.

எடுத்துக்காட்டுகள்

  • பூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.
  • சந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.
  • செவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.
  • வியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.
  • புளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.

தூரங்கள் இங்கு சராசரித் தூரங்கள் ஆகும்.

சில மாற்றீடுகள்:

  • 1 AU = 149 597 870.691 ± 0.030 கிமீ
  • 1 Au ≈ 92 955 807 மைல்கள்
  • 1 Au ≈ 8.317 ஒளி நிமிடங்கள்
  • 1 Au ≈ 499 ஒளி-செக்கன்கள்
  • 1 ஒளி-செக்கன் ≈ 0.002 AU
  • 1 கிகாமீட்டர் ≈ 0.007 AU
  • 1 ஒளி-நிமிடம் ≈ 0.120 AU
  • 1 டெராமீட்டர் ≈ 6.685 AU
  • 1 ஒளி-மணி ≈ 7.214 AU
  • 1 ஒளி-நாள் ≈ 173.263 AU
  • 1 ஒளி-வாரம் ≈ 1212.84 AU
  • 1 ஒளி-மாதம் ≈ 5197.9 AU
  • 1 ஒளியாண்டு ≈ 63,241 AU
  • 1 பார்செக் ≈ 206,265 AU
  • 1 microparsec ≈ 0.206 AU
  • 1 milliparsec ≈ 206.265 AU

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்