வாழறை
வாழறை (Living room) என்பது வீடுகளில் குடும்பத்தினைர் இருந்து அளவளாவுவதற்கும், இளைப்பாறுவதற்குமான ஒரு அறை ஆகும். இதை இருக்கையறை என்றும் அழைப்பதுண்டு. தனியான வரவேற்பறை இல்லாத வீடுகளில் வாழறையே வரவேற்பறையாகவும் செயற்படுவதுண்டு.[1] பெரும்பாலான வீடுகளில், குறிப்பாக இது வரவேற்பறையாகவும் தொழிற்படும் வேளைகளில், வாழறை வீட்டு வாயிலுக்கு அண்மையில் காணப்படும். வீடுகளில் வாழறை என்பது ஒரு மேனாட்டுக் கருத்துரு. ஆனாலும், தற்காலத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் கட்டப்படும் வீடுகளில் வாழறைகள் முக்கியமான பகுதியாகக் காணப்படுகின்றன.
வாழறை ஒன்றில் சொகுசிருக்கைகள், நாற்காலிகள், நடு மேசைகள், புத்தக அலுமாரி, தளமின்விளக்குகள், தளவிரிப்புக்கள், மற்றும் வேறு பல தளவாடங்களும் காணப்படலாம். அறை வெப்பமாக்கலுக்கான நவீன முறைகள் புழக்கத்துக்கு வருமுன்னர் பல குளிர் நாடுகளில் குளிர்காய்வதற்கான கணப்பு ஒரு வாழறையின் ஒரு முக்கியமான கூறாக இருந்தது.
மேற்கோள்கள்
- ↑ Martin, Judith (2003). Star-spangled manners: in which Miss Manners defends American etiquette (for a change). New York: W.W. Norton & Co. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-04861-6.