விசாபூர் கோட்டை

விசாபூர் கோட்டை
விசாபூர், மகாராட்டிரம்
விசாபூர் கோட்டைச் சுவர்கள்
விசாபூர் கோட்டை is located in மகாராட்டிரம்
விசாபூர் கோட்டை
விசாபூர் கோட்டை
ஆள்கூறுகள் 18°43′21″N 73°29′24″E / 18.72250°N 73.49000°E / 18.72250; 73.49000
வகை Hill fort
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
கட்டுப்படுத்துவது மராட்டியப் பேரரசு]] (c. 1720-1818)
ஐக்கிய இராச்சியம்

 இந்தியா (1947-)

மக்கள்
அனுமதி
உண்டு
நிலைமை அழிந்த நிலையிலுள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் பொது ஊழி 1713-1720
பயன்பாட்டுக்
காலம்
1713-1818
கட்டியவர் பாலாஜி விஸ்வநாத்
கட்டிடப்
பொருள்
கற்கல்
உயரம் 1,084 m (3,556 அடி) ASL

விசாபூர் கோட்டை ( Visapur Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள விசாபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். இது லோகாகாட் -விசாபூர் கோட்டையின் ஒரு பகுதியாக உள்ளது.

இடம்

இது புனே மாவட்டத்தில் மலாவ்லி தொடருந்து நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிமீ தொலைவில் உள்ளது. அதில் 3 கிமீ செங்குத்தான சாலையும் அடங்கும். இது கடல் மட்டத்திலிருந்து 1084 மீட்டர் உயரத்தில் [1] லோகாகாட் போன்ற பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

இது மராட்டியப் பேரரசின் முதல் பேஷ்வாவான பாலாஜி விஸ்வநாத் என்பவரால் பொது ஊழி 1713-1720 இல் கட்டப்பட்டது. [1] [2] விசாபூர் கோட்டை லோகாகாட் கட்டப்பட்டப் பின்னர் பிற்பகுதியில் கட்டப்பட்டது. ஆனாலும் இரண்டு கோட்டைகளின் வரலாறுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

விசாபூர் கோட்டையின் சூரிய ஒளி காட்சி

1818 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் பேஷ்வாவின் கோட்டைகளைக் குறைக்கும் நடவடிக்கையின்போது, 4 மார்ச் 1818 அன்று விசாபூர் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. [2] [3]

விசாப்பூர் கோட்டையின் உயரத்தையும் லோகாகாட்டின் அருகாமையையும் பயன்படுத்தி, பிரித்தானியத் துருப்புக்கள் விசாபூரில் தங்கள் பீரங்கிகளை நிறுவி, லோகாட் மீது குண்டுவீசி மராட்டியர்களை தப்பி ஓடச் செய்தனர். 1818 ஆம் ஆண்டில், லோகாகாட் -விசாபூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் கர்னல் புரோதரின் மேற்பார்வையில் வைக்கப்பட்டது. விசாபூரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு (கொங்கண்) மற்றும் தெற்கு (தக்காணம்) நுழைவாயில்கள் இரண்டும் தகர்க்கப்பட்டன. ஒரு சில குடிசைகளைத் தவிர, எதுவும் நிற்கவில்லை. [3] மாறாக, லோகாட் கோட்டையின் பெரும்பகுதி இன்றும் அப்படியே உள்ளது.

முக்கிய அம்சங்கள்

விசாபூர் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டுள்ள லோகாகாட்டை விட பெரியது. மேலும் உயரமாக உள்ளது.[2] கோட்டைக்குள் குகைகள், குளங்கள், அலங்கரிக்கப்பட்ட வளைவு மற்றும் வீடுகள் உள்ளன. வெளிப்புற அல்லது வராண்டா சுவர்களால் சூழப்பட்டுள்ள இரண்டு கூரையற்ற கட்டிடங்களும் ஒரு காலத்தில் அரசாங்க அலுவலகங்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கல்லால் கட்டப்பட்ட ஒரு பெரிய வீட்டின் இடிபாடுகள் பேஷ்வாவின் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. அனுமனின் பெரிய செதுக்கலைத் தவிர, அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்களும் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. [4]

இங்குள்ள ஒரு கிணறு பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று ஒரு புராணம் கூறுகிறது. [3] 1885 ஆம் ஆண்டில், வடக்குச் சுவருக்கு அருகில் பத்து அடி நீளமும், நான்கு அங்குல துளையும் கொண்ட இரும்புத் துப்பாக்கி கிடைத்து. இது அநேகமாக ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்திய துப்பாக்கியாக இருக்கலாம். கனனோஜி ஆங்கரே அல்லது மராட்டிய கடற்படையின் வேறு சில தளபதிகளால் ஆங்கிலக் கப்பல் பேஷ்வாவிடம் வழங்கப்பட்டது. கோட்டையில் உள்ள மற்ற துப்பாக்கிகளைப் போலவே இதுவும் கப்பலின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் ஒரு பழைய மகாதேவர் சன்னதியின் எச்சங்கள் உள்ளன. [3]

உள் அமைப்பைப் போலன்றி, அதன் சுவரின் பெரும்பகுதி இன்றும் அப்படியே உள்ளது. மிதமான வேகத்தில், விசாப்பூர் கோடைச் சுவர்களில் நடக்க இரண்டு மணி நேரம் ஆகும். [4] உயரமான இது மேற்கு பகுதியில் கோபுரங்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில், சுவர் 3 அடி தடிமனில் கட்டப்பட்டுள்ளது. பாழடைந்த மத்திய வாயிலில் இரண்டு பெரிய கோட்டைகள் இன்றும் உள்ளன. [3]

பருவமழை காலத்தில் விசாபூர்

அருகிலுள்ள இடங்கள்

கோட்டைக்குச் செல்லும் வழிகள்

கோட்டையை அடைவதற்கான எளிதான மற்றும் வசதியான வழி தொடருந்தில் செல்வதாகும். [5] விசாபூர் கோட்டைக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் மலாவ்லி நிலையம் (தோராயமாக. 5 கிமீ) இது மும்பை, லோணாவ்ளா மற்றும் புனே ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மலாவ்லி நிலையத்திலிருந்து விசாபூர் கோட்டையை மூன்று சக்கர வாகனம் மூலமும் அடையலாம்

புகைப்படங்கள்

மேற்கோள்கள்