விசெவோலத் சரனோவ்
விசெவோலத் சரனோவ் (Vsevolod Sharonov) (1901–1964) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.
வாழ்க்கை
இவர் புனித பீட்டர்சுபர்கில் 1901 மார்ச்சு 10 இல் பிறந்தார்.[1] இவர் இலெனின்கிராதில் 1964 நவம்பர் 26 இல் இறந்தார்.[1]
கல்வி
இவர்1918 இல் பள்ளிப் படிப்பை முடித்தார்[1] பின்னர் பெத்ரோகிராது பல்கலைக்கழகத்தில் 1926 இல் பட்டப் படிப்பை முடித்தார்.[1]
வாழ்க்கைப்பணி
இவரது பெருபாலான பணிகள் புல்கோவோ வான்காணகத்திலேயே அமைந்தது.[1] இவ்ர் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்போது அதன் வான்காணகத்துக்கும் இயக்குநராக இருந்தார்.[2] இவரது ஆய்வு ஆர்வம் கோளாய்விலும் அவற்றின் வளிமண்டல ஒளியியலிலும் குவிந்திருந்தது.
தகைமைகள்
பின்வருவன இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன:
- சரனோவ் (செவ்வாய்க் குழிப்பள்ளம்)
- சிறுகோள் 2416 சரனோவ்
- சரனோவ் (நிலாக் குழிப்பள்ளம்)
நூல்தொகை
இவர் தன் வாழ்நாளில் 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3]
இவர் பின்வரும் நூல்களின் ஆசிரியர்:
- கோள்களின் இயல்புகள்[4]
- ஆழ்தொலைவுப் பொருள்களின் காண்திற அளவீடும் கணிப்புகளும்
- செவ்வாய்
- சூரியனும் அதன் நோக்கீடுகளும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Basu, S.K. Encyclopaedic biography of the world great physicists. Global Vision Publishing House. p. 1453. ISBN 9788182201569. Retrieved 2014-10-31.
- ↑ New Scientist. Reed Business Information. p. 594. ISSN 0262-4079. Retrieved 2014-10-31.
- ↑ "OBITUARY: Vsevolod V. Sharonov; Fernand Baldet; Erich Schoenberg". Irish Astronomical Journal 9: 166. December 1969. Bibcode: 1969IrAJ....9..166.. http://adsabs.harvard.edu/full/1969IrAJ....9..166.. பார்த்த நாள்: 2014-10-31.
- ↑ Vsevolod Vasilʹevich Sharonov (1964). The Nature of Planets: (Priroda Planet). Israel Program for Scientific Translations.
வெளி இணைப்புகள்
- "Sharonov, Vsevolod Vasilievich". springerreference.com. Retrieved 2014-10-31.
- "Sharonov, Vsevolod Vasilievich (1901-1964)". springerreference.com. Retrieved 2014-10-31.