விளையாட்டு நிகழ்ச்சி

விளையாட்டு நிகழ்ச்சி எனப்படுவது தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகளில் ஒன்றாகும். இது தொலைக்காட்சி, வானொலி மற்றும் பொது இடங்களில் நடத்தப்படும் ஒரு விதமான போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

தனி நபர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இரு குழுவாக கலந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை பணத்திற்காக பல வித விளையாட்டுகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற முயற்சிப்பது விளையாட்டு நிகழ்ச்சியின் வகையாகும்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோடிஸ்வரன் என்ற நிகழ்ச்சி முதல் தமிழ் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்க, நடிகை ராதிகா தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு டீலா நோ டீலா, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, யெஸ் ஓர் நோ, கையில் ஒரு கோடி போன்ற பல நிகழ்ச்சிகள் இதற்குள் அடங்கும்.

மேற்கோள்கள்