விஷ்ணு சஹாய்
விஷ்ணு சஹாய் (Vishnu Sahay) (22 நவம்பர் 1901 - 3 ஏப்ரல் 1989) [1] [2] முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இந்திய இந்திய அமைச்சரவைச் செயலாளரும் ஆவார். இவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும் , கேரளா மற்றும் இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான பகவன் சஹாயின் மூத்த சகோதரர் ஆவார். இவர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌசி, எஸ்.எம் கல்லூரியிலும், பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்றார். [3] இவர் இந்தியக் குடிமைப் பணியின் 1925 தொகுதிகளில் உறுப்பினராக இருந்தார். அதே ஆண்டு அக்டோபர் 16 அன்று தேர்வில் தேர்ச்சி பெற்றார். [4]
அரசுப் பணியாளர்
இவர், இந்தியக் குடிமைப் பணியில் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையை கொண்டிருந்தார். இவர் , உத்தரப் பிரதேசத்தின் சர்க்கரை ஆணையாளராகவும், சர்க்கரை கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். [5] மேலும், இந்திய அரசின் வேளாண் செயலாளராக இருந்தபோது , அமுல் நிறுவனத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வர்கீஸ் குரியனுக்கு நியூசிலாந்து சென்று பால்பண்ணை சார்ந்து படிப்பதற்கான உதவித்தொகை பெற உதவினார். இவர் வெளிவிவகார அமைச்சகத்தில் காஷ்மீர் விவகாரங்களுக்கான செயலாளராகவும் பணியாற்றினார். 1958- 1960 மற்றும் 1961- 1962 காலங்களில் இரண்டு முறை இந்திய அமைச்சரவைச் செயலாளராவும் இருந்தார். [6]
ஆளுநர் பதவிக்காலம்
இவர், இரண்டு முறை அசாமின் ஆளுநராக இருந்தார். 1960 நவம்பர் 12 முதல் 1961 சனவரி 13 வரையிலும், 1962 செப்டம்பர் 7 முதல் 1968 ஏப்ரல் 17 வரையிலும் பணியாற்றினார். [7] [8] அசாமின் ஆளுநராக, இவர் 1964இல் நாகா கிளர்ச்சியாளர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். [9] மேலும், நாகாலாந்தின் முதல் ஆளுநராகவும் இருந்தார். 1963 திசம்பர் 1 முதல் 1968 ஏப்ரல் 17 வரை அந்த பதவியை வகித்தார்.
மேற்கோள்கள்
- ↑ Mukherjee, Amiya Ranjan (1961). Current Affairs. A. Mukherjee & Company. p. 315.
- ↑ Asia & Pacific Oceania, 2003, S. 733
- ↑ "SM College - Alumni". SM College. Archived from the original on 27 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The London Gazette, 6 November 1925
- ↑ "Problems Of Sugar Industry In India". பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
- ↑ "Cabinet Secretaries Since 1950". Cabinet Secretariat. Archived from the original on 10 March 2010. பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
- ↑ "States of India since 1947". பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
- ↑ "Governors of Assam since 1937 onwards". பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
- ↑ "Dawn of Peace in Nagaland". Archived from the original on 14 March 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.