வெப்பவியல்

வெப்ப இயல் (ஆங்கில மொழி: thermology) என்பது வெப்பப் படவியலின் ஒரு துறை. மருத்துவத்தில் பயன்படும் அகச்சிவப்புக் கதிர் படமாக்கலின் மூலம் உடலில் வெப்பம் பரவியுள்ள முறையினை அறிந்துகொள்ளப் பயன்படும் ஒரு தொடாநிலை படமாக்க முறையாகும். இந்த படமாக்க முறை உடல் வெப்ப நிலையினைப் பயன்படுத்தி புற்றுநோயினை அறிந்து கொள்ள உதவுகின்றது எனினும் இது ஒரு சிறப்பான மருத்துவக் கண்டறி முறையல்ல என அமெரிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[1][2]

வெப்பப் படவியல்

வெப்பப் படயியலில், அதிக வெப்பமான இடங்கள் வெண்மையாகவும் குளிர்ந்த இடங்கள் கருமையாகவும் காட்சியளிக்கும். (எதிர்மறையாகக் காட்டும் கருவிகளும் உள்ளன). நோயற்ற உடலில் காணப்படும் வெப்பப் பரவல் ஒரு வகையாகவும் நோயுள்ள திசுப் பகுதியில் வெப்பப் பரவல் முறை வேறுவகையாகவும் இருக்கும். இவ்வாறு மாறுபட்டுக் காணப்படும் உடல் வெப்பநிலை நோயினைக் காட்டவல்லது.

வெப்பக் கடத்தல், வெப்பச்சலனம் மற்றும் கதிர் வீச்சின் மூலம் வெப்பமானது ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குப் பரவுகிறது. எல்லா வெப்பமுடைய பொருட்களும் மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. எக்சு-கதிர், அணுக்கரு, மீயொலி போன்றவற்றைப் போலவே இம்முறையிலும் எந்த இயற்பியல் கருவியும் பொருளைத் தொடுவதில்லை. பொருளில் இருந்து வெளிப்படும் இயற்கையான கதிர் வீச்சினையே பயன்படுத்துகின்றது. கிடைக்கப் பெறும் முடிவு, பொருளில் அகச்சிகப்புக் கதிர்கள் எவ்வாறு பரவியுள்ளது என்பதையுணர்த்தும்.

அகச்சிகப்பு கதிர்களின் செறிவு

I = KT4 என்று கொடுக்கப்படுகிறது..

அதாவது
I என்பது வெளிப்படும் அகச்சிகப்பு கதிர்களின் செறிவு
T என்பது தனிவெப்பநிலை
K என்பது பொருளுக்குப் பொருள் மாறுபடும் ஒரு நிலையான எண்

கரும்பொருளுக்கு இது உச்ச அளவாக உள்ளது. உடல்பரப்பு ஓர் உன்னதமான கரும்பொருளாகச் செயல்படுகிறது. இம்மூறையில் பயன்படுத்தப்படும் முக்கிய கருவி உடலிலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களை உணரும் கருவியாகும். இக்கருவியும் அகச்சிவப்புக் கதிர்களை உமிழுகிறது.

அளவிடு முறை

சீரான வெப்பநிலையுடைய ஓர் அறையில் எல்லாமே ஒரே வெப்பநிலையில் இருப்பதால் உணர்கருவி எந்த சமிக்ஞையினையும் பெறாது (எடுத்துக்காட்டாக இறந்த மனித உடல்). மாறாக உயிருள்ள ஒரு மனிதன் இருந்தால், உணர்கருவியினைவிட மனிதனின் உடல்வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும். உடலை இப்போது கதிர்ப்படப்பதிவு செய்தால் வெப்பநிலைக்கு ஏற்றவாறு குறியீடுகள் பெறப்படும். தோலின் வெப்பநிலையினைப் பொறுத்து அமையும் இது திரையில் பெறப்படுகிறது. சரியான கருவியுடன் நிரந்தரமான படமும் பெறலாம்.

நடைமுறையில், பெறப்படும் குறிகள் குறைந்த செறிவுடன் காணப்படுவதால், இரைச்சல் (Noise) சிக்கலைத் தோற்றுவிக்கும். இதனைக்குறைக்க உணர்கருவியின் வெப்பநிலை நீர்மநிலை நைட்ரசன் மூலம் குறைக்கப்படுகிறது. 40,000 தனிப்பட்ட அளவீடுகளை 30 வினாடிகளில் செய்யும் நுட்மான கருவிகள் உள்ளன.

ஆய்விற்கு முன் 10 நிமிடங்கள் திறந்த மேனியுடன் 70 முதல் 76 டிகிரி பாரன்கீட் வெப்பநிலையில் முன் குளிர்வித்தல் உடலுக்குத் தேவை. மார்புப் படம் எடுக்கும்போது குறுக்காக வெப்பம் பாய்வதனைத் தடுக்கக் கைகளை அகல விரித்து வைத்திருக்க வேண்டும். சிறிய அலுமினியத் தகடுகளை உடற்பகுதி குறிகளாகப் பயன்படுத்தலாம்.

பயன்பாடு

மருத்துவ ரீதியாக இன்னும் அதிகப் பயன் பாட்டில் இல்லை. எனினும் பின்வரும் ஆய்வுகளுக்கு இது பயன்படுகிறது

மேற்கோள்கள்