வெள்ளீய(II) ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீய(II) ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
சிடானசு ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12026-24-3 | |
ChemSpider | 19989070 |
பண்புகள் | |
Sn(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 152.73 கி/மோல் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy offormation ΔfH |
−561 கியூ•மோல்−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
155 யூ•மோல்−1•கெல்வின்−1[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீய(II) ஐதராக்சைடு (Tin(II) hydroxide) என்பது Sn(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் சிடானசு ஐதராக்சைடு, டின் ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வெள்ளீயம்(II) உலோகத்தின் கனிமவேதியியல் சேர்மமும் இதுவேயாகும். இச்சேர்மத்துடன் தொடர்புடைய பல வேதிப்பொருட்கள் அறியப்பட்டாலும் Sn6O4(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஆக்சி ஐதாக்சைடு சேர்மத்திற்கு மட்டுமே உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன. இவைகள் யாவும் வெண்மை நிறத்துடன் நீரில் கரையாத உப்புகளாக உள்ளன.
தயாரிப்பும் கட்டமைப்பும்
Sn6O4(OH)4 படிகங்களின் பண்புகள் எக்சு கதிர் விளிம்பு விளைவு சோதனையின் மூலம் வரையறுக்கப்படுகின்றன. வெள்ளீயம்(II) இன் காரக் கரைசல்களிலிருந்து இத்தொகுதிகள் கிடைக்கின்றன. Sn மையங்களின் எண்முகங்களை இச்சேர்மம் கொண்டுள்ளது. ஆக்சைடு அல்லது ஐதராக்சைடுகள் ஒவ்வொரு முகத்திற்கும் உச்சியாக உள்ளன. எண்முக தடங்களின் துணை அலகான Mo6S8 இன் கட்டமைப்பை நினைவூட்டுவதாக இது உள்ளது[2]. தூய்மையான Sn(OH)2 கட்டமைப்பு அறியப்படவில்லை.
புரோட்டான் ஈயா கரைப்பானிலுள்ள SnCl2 உடன் (CH3)3SnOH வினைபுரிவதால் Sn(OH)2 உருவாகிறது:[3].
- 2 Me3SnOH + SnCl2 → Sn(OH)2 + 2 Me3SnCl
இப்பொருளைப் பற்றிய வேறு படிகவியல் ஆய்வு முடிவுகள் ஏதும் அறியப்படவில்லை.
வினைகள்
வெள்ளீய (II) ஐதராக்சைடு காற்றினால் எளிதாக ஆக்சிசனமேற்றம் அடைந்து வெள்ளீய ஆக்சைடாக மாறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
- ↑ R. A. Howie; W. Moser (1968). "Structure of Tin(II) "Hydroxide" and Lead(II) "Hydroxide". Nature 219 (5152): 372–373. doi:10.1038/219372a0.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5