ஸ்கைஃபால்

ஸ்கைஃபால்
The poster shows a man wearing a tuxedo and holding a gun, standing in front of an image that looks like it was taken from the inside of a gun barrel, with the London skyline visible behind him. Text at the bottom of the poster reveals the film title and credits.
பிரித்தானிய திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சாம் மெண்டெசு
தயாரிப்பு
  • மைக்கேல் ஜி. வில்சன்
  • பார்பரா பிராக்கோலி
மூலக்கதைஜேம்ஸ் பாண்ட்
படைத்தவர் இயன் ஃபிளமிங்
திரைக்கதை
  • நீல் பெர்விஸ் மற்றும் ராபர்ட் வேட்
  • சான் லோகன்
இசைதாமஸ் நியூமன்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜர் டீகின்ஸ்
படத்தொகுப்பு
  • ஸ்டுவர்ட் பேய்ர்ட்
  • கேட் பேய்ர்ட்
கலையகம்இயான் தயாரிப்புகள்
விநியோகம்
  • மெட்ரோ கோல்ட்வின் மேயர்
  • கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுஅக்டோபர் 23, 2012 (2012-10-23)(இலண்டன்)
26 அக்டோபர் 2012 (ஐக்கிய இராச்சியம்)
9 நவம்பர் 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்143 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150−200 மில்லியன்
மொத்த வருவாய்$1,108,058,404

ஸ்கைஃபால் (ஆங்கில மொழி: Skyfall) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 23 வது படம் ஆகும். இயான் புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மூன்றாவது முறையாக நடிகர் டேனியல் கிரெய்க் என்பவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

ஸ்கைஃபால் என்ற படம் லண்டனில் உள்ள என்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் 23 அக்டோபர் 2012 இல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து 26 அக்டோபர் 2012 இல் ஐக்கிய இராச்சியத்திலும் மற்றும் 9 நவம்பர் 2012 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இந்த படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பிரித்தானியத் திரைப்படத்திற்கான அகாடமி விருதினை வென்றது.

தயாரிப்பு

தொடக்கம்

மெட்ரோ-கோல்ட்வின் மேயர் குழுவின் நிதி பிரச்சனைகளால் ஸ்கைஃபால் தயாரிப்பு 2010 முழுவதும் நிறுத்தப்பட்டது. 21 திசம்பர் 2010 இல் எம்.ஜி.எம் இன் நிதி பிரச்சனைகள் முடிந்தன. சனவரி 2011 இல் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி 9 நவம்பர் 2012 என குறிப்பிடப்பட்டது. தயாரிப்பு 2011 முடிவில் தொடங்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.எம் மற்றும் சோனி என்டர்டெயின்மென்ட் ஐக்கிய இராச்சிய வெளியீட்டுத் தேதி 26 அக்டோபர் 2012 என கூறின.[2] திரைப்படச் செலவுகள் $150 மில்லியன்[3][4] இலிருந்து $200 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[5][6]

முன் தயாரிப்பு

ஆகத்து 2011 இல் செர்பியன் செய்தித்தாள் 'பிலிக்' 'பாண்ட் 23' 'கார்ட் பிளாஞ்ச்' என பெயரிடப்படுள்ளதாக கூறியது. மேலும் ஜெப்ரி டீவரின் ஜேம்ஸ் பாண்ட் புதினத்தினைத் தழுவி இருக்கும் எனவும் கூறியது.[7] 30 ஆகத்து அன்று இயான் தயாரிப்புகள் பாண்ட் 23 மற்றும் கார்ட் பிளாஞ்ச் ஆகிய இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தது. 3 அக்டோபர் 2011 அன்று பதினைந்து இணையதள பெயர்கள் ('jamesbond-skyfall.com' மற்றும் 'skyfallthefilm.com' போன்று) எம்.ஜி.எம் ஆல் வாங்கப்பட்டது. இதைவைத்து ஸ்கைஃபால் என படம் பெயரிடப்பட்டுள்ளது என செய்திகள் பரவின.[8] 3 நவம்பர் 2011 அன்று திரைப்படத்தின் பெயர் ஸ்கைஃபால் என அறிவிக்கப்பட்டது.[9] திரைப்படப் பெயர் பாண்ட் இன் சிறுவயதுப் பெயரினைக் குறிக்கும் மாதிரி இடப்பட்டுள்ளது.[10]

வெளியீடு மற்றும் வரவேற்பு

23 அக்டோபர் 2012 அன்று ராயல் ஆல்பர்ட் ஹால் இலண்டனில் திரையிடப்பட்டது.[11] மூன்று நாட்களுக்கு பின்னர் 26 அக்டோபர் அன்று இங்கிலாந்து முழுவதும் வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 8 நவம்பர் அன்று வெளியிடப்பட்டது.[12] ஸ்கைஃபால் IMAX இல் வெளியிடப்பட்ட முதல் பாண்ட் திரைப்படமாகும்.[13] வட அமெரிக்க IMAX திரையரங்குகளில் வெளியீடு நாளுக்கு ஒரு நாள் முன்னரே வெளியிடப்பட்டது.[14][15]

கதாப்பாத்திரங்கள்

  • டேனியல் கிரெய்க் - ஜேம்ஸ் பாண்ட், ஏஜென்ட் 007.
  • சூடி டென்ச் - எம், எம்ஐ6 தலைவி
  • ஹாவியர் பார்டெம் - ரவுல் சில்வா (பிறப்பு டியாகோ ராட்ரிகேஸ்),[16] திரைப்பட வில்லன்.
  • ரால்ப் பியென்னஸ் - கேரத் மேல்லரி.
  • நயோமி ஹாரிஸ் - ஈவ் மனிபென்னி.
  • பெரெனிஸ் மார்லோஹ் - சவெரின்.
  • ஆல்பர்ட் பின்னி - கின்கேட்.
  • பென் விசா - க்யூ.
  • ரோரி கின்னியர் - பில் டான்னர்.
  • ஓலா லபேஸ் - பட்ரீஸ்

நடிகர்கள்

பாத்திரம் அசல் நடிகர்கள் இந்தியாஇலங்கை மொழி மாற்றம் தமிழ்
(குறிப்பிடப்பட்டது இல் டிவிடி வெளியீடு) [17][18]
ஜேம்ஸ் பாண்ட்/ஏஜென்ட் 007 டேனியல் கிரெய்க் சீனிவாச மூர்த்தி
எம்/எம்ஐ6 தலைவி சூடி டென்ச் துர்கா
ரவுல் சில்வா (பிறப்பு டியாகோ ராட்ரிகேஸ்) சேவியர் பார்டெம் சாம் ஜி
கேரத் மேல்லரி ரால்ப் பியென்னஸ் விஜயா குமார்
ஈவ் மனிபென்னி நயோமி ஹாரிஸ் பிரியா
சவெரின் பெரெனிஸ் மார்லோஹ் திவ்யா
கின்கேட் ஆல்பர்ட் பின்னி ராமு
க்யூ பென் விசா கார்த்திக்
பில் டான்னர் ரோரி கின்னியர் அருண் அலெக்சாண்டர்
பட்ரீஸ் ஓலா லபேஸ் ????
சிஎன்என் நியூஸ் ஆங்கர் வொல்ப் ப்ளித்சர் பிரதீப்

தமிழ்மொழி மாற்றம் பணியாளர்கள்

  • மொழி மாற்ற பதிப்பு வெளியீட்டு தேதி: நவம்பர் 9, 2012 (சினிமா)
  • ஊடகம் : சினிமா / குறுந்தட்டு / டிவிடி / நீலக்கதிர் வட்டு / டெலிவிஷன்
  • இயக்குநர்: கே சபரிநாதன்
  • மொழிபெயர்ப்பு: கே சபரிநாதன்
  • பொறியாளர் பதிவு: சாம் மோசே
  • ஆக்கப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: பிரதீப் தாஸ்
  • ஸ்டுடியோ: சவுண்ட் அண்ட் விஷன் இந்தியா
  • கூடுதல் டப்பிங் குரல்கள்: தேவன் குமார், வினோத், லமைன், அனந்த, தனலட்சுமி, சுலோச்சன்ன, புனிதன், சாந்த குமார்
  • டப்பிங் வேறு மொழிகள்: ஹிந்தி / தெலுங்கு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Skyfall". British Board of Film Classification (BBFC). 12 October 2012. Archived from the original on 12 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
  2. Metro-Goldwyn-Mayer(1 June 2011). "MGM and Sony Pictures Entertainment Announce UK Release Date for Bond 23". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 8 January 2013.
  3. Sizemore, Charles (10 October 2012). "Bond Investing. James Bond Investing". Forbes இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121117111938/http://www.forbes.com/sites/moneybuilder/2012/10/10/bond-investing-james-bond-investing/. பார்த்த நாள்: 16 November 2012. 
  4. Smith, Grady (1 November 2012). "Box office update: 'Skyfall' blazes past $100 million internationally". Entertainment Weekly. http://insidemovies.ew.com/2012/11/01/skyfall-smashes-100-million/. பார்த்த நாள்: 16 November 2012. 
  5. "Skyfall". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
  6. Dawn, Randee (11 November 2008). "'Quantum' is Marc Forster's 007 art film". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  7. "Serbian to play cello in Bond movie". Blic Online. Archived from the original on 31 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011. {cite web}: Check date values in: |archive-date= (help)
  8. Thompson, Paul (7 அக்டோபர் 2011). "007 now has a name! The new troubled James Bond film will be called Skyfall". Daily Mail (இலண்டன்). http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2046172/James-Bond-23-title-revealed-Skyfall.html. பார்த்த நாள்: 8 October 2011. 
  9. Reynolds, Simon (3 நவம்பர் 2011). "James Bond 23 press conference: Daniel Craig on 'Skyfall' - video". Digital Spy. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2013.
  10. "The Sky is Fall-ing! Things start to heat up for James Bond as his countryside lodge is destroyed in a huge explosion". Daily Mail (London). 26 மார்ச்சு 2012. http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2120378/Skyfall-James-Bonds-countryside-lodge-destroyed-huge-explosion.html. பார்த்த நாள்: 3 நவம்பர் 2012. 
  11. "Skyfall: Daniel Craig at world premiere in London". BBC Online (London). Skyfall: Daniel Craig at world premiere in London இம் மூலத்தில் இருந்து 2013-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6E4g80Mj1?url=http://www.bbc.co.uk/news/entertainment-arts-20050813. 
  12. "Skyfall: Worldwide release dates". Danjaq. Archived from the original on 30 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 November 2012.
  13. Vlessing, Etan (23 பிப்ரவரி 2012). "Sam Mendes' 'Skyfall' First James Bond Film on Imax Screens". Los Angeles: The Hollywood Reporter. Archived from the original on 31 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 6 December 2012. {cite web}: Check date values in: |date= and |archivedate= (help)
  14. Vlessing, Etan (18 October 2012). "IMAX to Release 'Skyfall' a Day Early in North America". The Hollywood Reporter. Archived from the original on 30 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2012.
  15. Bercovici, Jeff (9 நவம்பர் 2012). "James Bond in 'Skyfall': Hero, Patriot and ... Exploiter of Sex Trafficking Victims?". Forbes.com (Forbes) இம் மூலத்தில் இருந்து 2013-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6E4hV5hCx?url=http://www.forbes.com/sites/jeffbercovici/2012/11/09/james-bond-in-skyfall-hero-patriot-and-exploiter-of-sex-trafficking-victims/. பார்த்த நாள்: 30 திசம்பர் 2012. 
  16. "Javier Bardem Speaks". Mi6-hq.com. 7 April 2012. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2012. {cite web}: Check date values in: |accessdate= (help)
  17. "Skyfall Dubbing Cast - Hindi, Tamil, Telugu, Russian, Ukrainian". YouTube.com. 2014-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  18. "Image - Tinypic - Free Image Hosting, Photo Sharing & Video Hosting". Tinypic.com. 2014-06-21.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்கைஃபால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.