ஹடுக்கன்தீன் கோவில்
ஹடுக்கன்தீன் கோவில் குறுக்கு உத்தரம் ஒழுங்குமுறை மண்டபம் | |
---|---|
ஹடுக்கன்தீன் கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 20°35′52″N 93°11′29″E / 20.59778°N 93.19139°E |
சமயம் | தேரவாத பௌத்தம், பௌத்தம் |
ஹடுக்கன்தீன் கோவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மிகத் தொன்மையான அரக்கனீஸ் நகரமான மராக் யுவில், ராகினி மாநிலத்தில், மியான்மரில் உள்ளது. இந்தப் பெயரின் பொருள் குறுக்கு உத்தரம் ஒழுங்குமுறை மண்டபம்.
வரலாறு
ஹடுக்கன்தீன் கோவில் 1571 ஆம் ஆண்டில் மன்னர் மின் பலாங்கால் கட்டப்பட்டது, அவரது ஆட்சியில் மராக் யு பேரரசுக்கு செழுமையையும் விரிவாக்கத்தையும் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. மேலும் மன்னர் மின் பலாங்கால் ஒரு டஜன் தூபிக் கோவில்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதில் 1577 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரசரின் அரண்மனை மற்றும் பிட்டாகா டைக் என்ற நூலகக் கட்டிடம் ஆகிய இரண்டும் மட்டுமே மீதமிருக்கும் கட்டிடங்களாகும்.[1]
பிட்டாகா டைக் ஒரு சிறிய, மிகவும் அழகுபடுத்தப்பட்ட கல் கட்டிடம் மலர் வடிவங்களின் சிற்பங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு திசையில் ஹதுபாயன் தூபியிருக்கும் பகுதிக்கு அருகில் காணப்படும். இந்தக் கோவில் தொன்மையான் பெளத்த புனித நூல் திரிபிடகாவை பாதுகாக்கும் இடமாக மன்னரால் கட்டப்பட்டுள்ளது. இந்த நூல் அப்போதைய சிலோனிலிருந்து (இப்போது இலங்கை) மன்னரால் கொண்டுவரப்பட்டது.[1]
கட்டிட அமைப்பு
மராக் யு புத்தமத கோவில்களைப் போலவே இந்தக் கோவிலும் இரட்டை பயன்பாடு கொண்டதாக கோபுரமாகவும் பதுங்கும் குழிகள் கொண்ட கோட்டை-கோவிலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 'தெய்ன்' (ஒழுங்குமுறை மண்டபம்) என்றாலும், இது மராக் யு இல் உள்ள மிகவும் இராணுவ பயன்பாட்டிற்கான கட்டிடங்களில் ஒன்றாகும், எழுப்பப்பட்ட தரையில் கட்டப்பட்டது, ஒரே நுழைவாயில் மற்றும் சிறிய ஜன்னல்கள் கொண்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராக் யுவில் உள்ள தொன்மையான கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியப் பேரரசு ஒரு தொல்பொருள் நிபுணரான டாக்டர் எமில் ஃபொச்சாம்மேர் அனுப்பியது. அவர் கோவில்களை (தூபிகளை) ஆய்வுகள் செய்து போரின் சமயங்களில் புத்த மதத்தினர் தங்குவதற்காக கட்டப்பட்ட ஒழுங்கு மண்டபம் மற்றும் பதுங்கும் கோட்டைகளாக பயன்படுத்திருக்கலாம் என்றார்.
கோவிலின் நடுவில் ஒரு காளான் வடிவத்தில் ஒரு குவிமாடம் உள்ளது அதன் மேல் கிரீடம் அல்லது ஹதி உள்ளது, நான்கு மூலைகளிலும் சிறிய தூபிகளால் சூழப்பட்டுள்ளது. மத்திய குவிமாடத்தின் முகப்பின் அடிவாரத்தில் ஒரு சதுர ஜ்ன்னல் வடிவமைக்கப்பட்டு, அதன் வழியே விடியற்காலை சூரியனின் கதிர்கள் நேரடியாக பிரதான புத்தர் படத்தின் மையப்பகுதிக்குள் பிரகாசிக்கின்றன. கோயிலின் மேற்கு பக்கத்தில் ஒரு சிறிய தியான அறை உள்ளது, இதை பிரதான வாயில் வழியாக மட்டுமே அணுக முடியும்.
கோவில் செங்கல் மற்றும் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
ஹடுக்கன்தீன் கோவிலில் மூன்று அறைகள் கடிகார முல் சுழற்சி திசையில் வரிசையாக உள்ளது. இந்தக் கோவிலில் மொத்தம் 180 புத்தர் சிலைகள் உள்ளன. தாழ்வாரப் பகுதியில் 179 சிறிய சிலைகளும், மத்திய மண்டபத்தில் ஒரு சிலையும் உள்ளன. இதிலுள்ள ஒவ்வொரு பக்கத்திலும் செதுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளது. இது இந்தக் கோவிலை உருவாக்கவுதற்காக நன்கொடை கொடுத்தவர்களை சிறப்பிப்பதற்காக இந்தச் சிலைகளை உருவாக்கி இருக்கலாம்.
கோவிலின் இருண்ட உட்புறத்தில் மெழுகு வர்திகள் ஏற்றப்பட்டு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது. கோவிலின் உள்ளே செல்ல வளைந்து செல்லும் பாதையில் உட்புறம் சென்றால் நேராக மத்திய் மண்டபத்தில் அமைந்திருக்கும் புத்தர் சிலைக்கு வந்தடைவோம்.
மேலும் பார்க்க
- அடுக்குத் தூபி
- தூபித் திருவிழா
- மியான்மரில் பெளத்தமதம்
- தேரவாத பௌத்தம்
- ஆனந்தா கோவில்
- சிவேஜிகன் தூபி
- மியான்மர் தமிழர்
- சவேடகன் அடுக்குத் தூபி
- பொததாங் அடுக்குத் தூபி
- சவேமாவதாவ் அடுக்குத் தூபி
- சிதி-தாங் கோவில்
- மியான்மர் தமிழர்