1441
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1441 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1441 MCDXLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1472 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2194 |
அர்மீனிய நாட்காட்டி | 890 ԹՎ ՊՂ |
சீன நாட்காட்டி | 4137-4138 |
எபிரேய நாட்காட்டி | 5200-5201 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1496-1497 1363-1364 4542-4543 |
இரானிய நாட்காட்டி | 819-820 |
இசுலாமிய நாட்காட்டி | 844 – 845 |
சப்பானிய நாட்காட்டி | Eikyō 13Kakitsu 1 (嘉吉元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1691 |
யூலியன் நாட்காட்டி | 1441 MCDXLI |
கொரிய நாட்காட்டி | 3774 |
1441 ((MCDXLI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது பொது ஊழி (பொ.ஊ), அனோ டொமினி (கிபி) காலத்தின் 1441 ஆம் ஆண்டும், 2-ஆம் ஆயிரமாண்டின் 441-ஆம் ஆண்டும், 15-ஆம் நூற்றாண்டின் 41-வது ஆண்டும் ஆகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 12 – கேம்பிரிட்ச், அரசக் கல்லூரி இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரால் தொடங்கப்பட்டது.[1]
- நவம்பர் 20 – வெனிசுக் குடியரசுக்கும் மிலனுக்கும் இடையேயான போர் கிரெமோனா உடன்பாட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.[2]
- வாகடூகு மோசி இராச்சியங்களின் தலைநகரானது.
- எத்தியோப்பியப் பேரரசைச் சேர்ந்த இருவர் காப்திக் மரபுவழித் திருச்சபை, இலத்தீன் திருச்சபை ஆகியவற்றின் சாத்தியமான ஒன்றியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக புளோரன்சில் இடம்பெற்ற ஒரு கிறித்தவ திருச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவுடனான காப்திக் திருச்சபையின் எத்தியோப்பியக் கிளையின் ஆரம்பகால பதிவு செய்யப்பட்ட தொடர்பு இதுவாகும்.
- மாயா மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிளவடைந்தனர்.
- லித்துவேனியாவின் உதவியுடன், ஆளுநர் காசி ஐ கிரே என்பவர் தனது மாகாணத்தை தங்க நாடோடிகளிடம் இருந்து பிரித்து கிரிமியக் கானரசை நிறுவினார்.
- அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின ஆப்பிரிக்கர்கள் முதன் முதலாக ஐரோப்பாவிற்கு போர்த்துக்கல் இராச்சியத்தில் உள்ள லாகோசிற்குக் கொண்டு வரப்பட்டனர்.
- விஜயநகரப் பேரரசர் இரண்டாம் தேவ ராயன் ஒரிசாவின் கஜபதியுடனான போரில் மூன்றாவது தடவையும் தோற்கடித்தார்.
- இயக்குவகை அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது (1440 அல்லது 1441).
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 'The colleges and halls: King's', in A History of the County of Cambridge and the Isle of Ely: Volume 3, the City and University of Cambridge, ed. J P C Roach (London, 1959), pp. 376-408. British History Online http://www.british-history.ac.uk/vch/cambs/vol3/pp376-408 [accessed 5 February 2021]
- ↑ Hazlitt, W. Carew (1900). The Venetian Republic: Its Rise, its Growth, and its Fall, 421–1797. Volume II, 1423–1797. London: Adam and Charles Black. pp. 79–80.