1851
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1851 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1851 MDCCCLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1882 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2604 |
அர்மீனிய நாட்காட்டி | 1300 ԹՎ ՌՅ |
சீன நாட்காட்டி | 4547-4548 |
எபிரேய நாட்காட்டி | 5610-5611 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1906-1907 1773-1774 4952-4953 |
இரானிய நாட்காட்டி | 1229-1230 |
இசுலாமிய நாட்காட்டி | 1267 – 1268 |
சப்பானிய நாட்காட்டி | Kaei 4 (嘉永4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2101 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4184 |
1851 (MDCCCLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 11 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
- மார்ச் 30 - ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- மே 1 - இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சியை விக்டோரியா மகாராணி திறந்து வைத்தார். இது அக்டோபர் 18 வரை இடம்பெற்றது.
- மே 15 - தாய்லாந்தின் நான்காம் ராமா மன்னனாக முடிசூடினார்.
- ஜூலை 1 - விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.
- செப்டம்பர் 18 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
- அக்டோபர் - ராய்ட்டர்ஸ் செய்தித் தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 24 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
- டிசம்பர் 2 - பிரான்சின் ஜனாதிபதி லூயிஸ் நெப்போலியன் பிரெஞ்சு தேசிய சபையைக் கலைத்து தனது பதவிக்காலத்தை நீடிக்கும் புதிய அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தினான். பின்னர் தன்னை மூன்றாம் நெப்போலியன் என்ற பெயரில் நாட்டின் மன்னனாக அறிவித்தான்.
- டிசம்பர் 22 - இந்தியாவின் முதலாவது சரக்கு தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
நாள் அறியப்படாதவை
- சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- அவுஸ்திரேலியாவில் எட்வேர்ட் ஹார்கிரேவ்ஸ் என்பவரால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- ஏப்ரல் 16 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)