1943 வங்காளப் பஞ்சம்
1943 வங்காளப் பஞ்சம் (Bengal famine of 1943) என்பது 1943 இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். 20 முதல் 40 லட்சம் மக்கள் இப்பஞ்சத்தால் மாண்டனர். பஞ்சத்தின் காரணங்கள், அதனைக் காலனிய அரசு கையாண்ட முறை பற்றி உலக வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியாவில் உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவியதாகப் பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பருவ மழைப் பொய்ப்பு, பயிர் நோய்கள் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்தது. வங்காளத்தின், குறிப்பாக கொல்கத்தா நகரின் உணவுத் தேவைகள் பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால் பூர்த்தி செய்யப்பட்டன. 1942 இல் பர்மா மீது ஜப்பானியப் படைகள் படையெடுத்ததால், அங்கிருந்து அரிசி இறக்குமதி தடைபட்டது. மேலும் பர்மாவிலிருந்து வங்காளத்துக்கு தப்பி வந்த அகதிகளால் மக்கள் தொகையும் அதிகரித்தது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட, இந்திய இராணுவத்தின் எண்ணிக்கை பலமும் வெகுவாகக் கூட்டப்பட்டிருந்தது. அரிசித் தேவை அதிகரித்தவுடன் பதுக்கலும் பரவலானது என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[1][2][3]
இந்த பஞ்சத்துக்கு உணவு தட்டுப்பாடு காரணம் அல்ல, இரண்டாம் உலகப் போரால் உணவுப் பொருட்களின் விலை ஐந்து மடங்கு ஏறியதால், சாதாரண மக்கள் உணவை வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதுவே இந்த பஞ்சத்துக் காரணம் என்கிறார் அமர்த்தியா சென். மேலும் கல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்களை பிரித்தானிய இந்திய அரசு விநியோகித்து நகர்புற மக்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிக்க நினைத்தது. ஆனால் கிராமப்புறங்களில் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது. இதனால் கல்கத்தாவுக்குப் போனால் உணவு கிடைக்கும் என கிராமங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கல்கத்தாவில் குவிந்தனர் என்றார்.[4] குறித்து 1943 இல் கொல்கத்தாவில் மக்கள் உணவின்றி மடியத் தொடங்கினர். பட்டினிச் சாவுகளைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஒரு சாரரும், வழக்கமாக பஞ்சங்களை எதிர்கொள்ள அரசு எடுக்கும் முடிவுகள் இப்பஞ்சத்தை சமாளிக்கப் போதுமானதாக இல்லை என ஒரு சாரரும் கருதுகின்றனர். 1944 இல் பஞ்சம் தீர்ந்த போது 20 முதல் 40 லட்சம் மக்கள் மாண்டிருந்தனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ A. Sen 1980, ப. 202; A. Sen 1981a, ப. 201.
- ↑ Limaye, Yogita (20 July 2020). "Churchill's legacy leaves Indians questioning his hero status". BBC News. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.
- ↑ "Did Churchill Cause the Bengal Famine?". The Churchill Project. Hillsdale College. 8 April 2015.
- ↑ https://www.hindutamil.in/news/literature/722473-home-in-the-world-a-memoir.html ஷங்கர்ராமசுப்ரமணியன், கட்டுரை, அமர்த்தியா சென் சுயசரிதை: உலகின் வெளிச்சத்தை அனுமதிக்கும் குடில், இந்து தமிழ், 2021. அக்டோபர். 3
மேலும் படிக்க
- Abdullah, Abu Ahmed (Autumn 1980). "The Peasant Economy in Transition : The Rise of the Rich Peasant in Permanently Settled Bengal". The Bangladesh Development Studies 8 (4): 1–20.
- Ali, Tariq (2022). Winston Churchill: his times, his crimes. London; New York: Verso. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78873-577-3.
- Famine Inquiry Commission (August 1945). Final Report. Madras: Government of India Press.
- Goswami, Omkar (1990). "The Bengal Famine of 1943: Re-examining the Data". The Indian Economic and Social History Review 27 (4): 445–463. doi:10.1177/001946469002700403.
- Government of Bengal (1940a). Report of the Land Revenue Commission, Vol. I. Vol. With Minutes of Dissent. Alipore: Bengal Government Press.
- Government of Bengal (1940c). Report of the Land Revenue Commission, Vol. VI (PDF). Vol. Replies to the Commission's questionnaire by the Associations concerned with tenants, Bar Associations, etc., and their oral evidence. Alipore: Bengal Government Press. Archived from the original (PDF) on 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 April 2017.
- Passmore, R. (1951). "Famine in India: an historical survey". The Lancet 258 (6677): 303–307. doi:10.1016/s0140-6736(51)93295-3. பப்மெட்:14862183.
- Tauger, Mark B.; Sen, Amartya (24 March 2011). "The Truth About the Bengal Famine". The New York Review of Books.
- Tauger, Mark B.; Sen, Amartya (12 May 2011). "The Bengal Famine". The New York Review of Books.
வெளி இணைப்புகள்s
- Bengal Famine materials in the South Asian American Digital Archive (SAADA)
- Hungry Bengal – War, Famine, Riots, and the End of Empire 1939–1946
- BBC/OU: The things we forgot to remember – The Bengal famine பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்