9கே720 இஸ்காந்தர்

9கே720 இஸ்காந்தர் என்பது உருசிய இராணுவத்தால் தயாரிக்கப்படும் ஒரு ஏவுகணை ஆகும்.[1][2] இதை உருசியா, ஆர்மீனியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. இவ்வகை ஏவுகணைகள் உருசியாவின் காலினின்கிராத் மாகாணத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

வகைகள்

இதில் இஸ்காந்தர்-எம், இஸ்காந்தர்-கே மற்றும் இஸ்காந்தர்-ஈ என மூன்று வகைகள் உள்ளன.

இஸ்காந்தர்-எம்

உருசிய இராணுவத்திற்கு இவ்வகை பயன்படுத்தப்படுகிறது. இது 415 கி.மீ. பாயக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 500 கி.மீ. பயக்கூடியது எனக் கருதப்படுகிறது. இது ஒலியின் வேகத்தைப் போல் 6-7 மடங்கு வேகத்திலும் 6-50 கி.மீ. உயரத்திலும் பாயக்கூடியது.[3][4][5]

பயன்பாடு

உருசியா

இந்த ஏவுகணை முதன் முதலில் உருசிய-சார்சிய போரில் பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் உள்ளன.

2018ஆம் ஆண்டு இஸ்காந்தர் ஏவுகணை ஏவப்படுதல்.

உசாத்துணை