அகமதாபாது

அகமதாபாத்
மாநகரம்
அம்தாவத்
மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார த்திசையில்: சபர்மதி ஆசிரமம், அதீஸ்சிங் கோயில், நரேந்திர மோடி விளையாட்டரங்கம், சபர்மதி ஆறு, காங்கரியா ஏரி
அகமதாபாத் is located in குசராத்து
அகமதாபாத்
அகமதாபாத்
குஜராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம்
அகமதாபாத் is located in இந்தியா
அகமதாபாத்
அகமதாபாத்
அகமதாபாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°01′21″N 72°34′17″E / 23.0225°N 72.5714°E / 23.0225; 72.5714[1]
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்அகமதாபாத்
அமைப்பு
  • அகமதாபாத்தாக 26 பிப்ரவரி 1411 அன்று உருவானது
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்அகமதாபாத் மாநகராட்சி
 • காவல் துறை ஆணையர்ஆஷிஷ் பாட்டியா [2]
பரப்பளவு[3][4]
 • மாநகரம்505.00 km2 (194.98 sq mi)
 • நகர்ப்புறம்[5]1,866 km2 (720 sq mi)
பரப்பளவு தரவரிசை1-ஆவது (குசராத்தில்)
ஏற்றம்[6]69.65 m (228.51 ft)
மக்கள்தொகை (2011)[7]
 • மாநகரம்5,633,927
 • தரவரிசை5-ஆவது
 • அடர்த்தி11,000/km2 (29,000/sq mi)
 • நகர்ப்புறம்[8]6,357,693
இனங்கள்அகமதாபாத்
அம்தாவாடி (குஜராத்தி)
மொழி
 • ஆட்சிகுஜராத்தி
 • கூடுதல் ஆட்சி மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு3800xx
தொலைபேசி குறியீடு+9179xxxxxxxx
வாகனப் பதிவுGJ-01 (மேற்கு), GJ-27 (கிழக்கு), GJ-38 பாவ்லா (ஊரகம்)[9]
பாலின விகிதம்1.11[10] /
படிப்பறிவு விகிதம்89.62[7]
பெருநகர மொ.உ.உ.$70 billion
இணையதளம்ahmedabadcity.gov.in
மூலம்: இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.[11]

அகமதாபாத் (குசராத்தி: અમદાવાદ, சிந்தி மொழி: ا د آ ڡڢګڪا‎, Ahmedabad) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குசராத்து மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குசராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குசராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குசராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாது இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[12]

உலகின் பாரம்பரிய அறிவிப்பு

அகமதாபாது நகரம் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

அகமதாபாது மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.[13]

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அகமதாபாது மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 55,77,940 ஆகும். அதில் ஆண்கள் 2,938,985 மற்றும் 2,638,955 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,21,034 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.29% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 45,94,895 (81.56%), இசுலாமியர் 7,60,920 (13.51%), சமணர்கள் 2,03,739 (3.62%), கிறித்தவர்கள் 47,846 (0.85%) மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[14] இந்நகரத்தில் பெரும்பான்மையோர் குசராத்தி மொழி பேசுகின்றனர்.

போக்குவரத்து

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் பேருந்து போக்குவரத்து வசதி இந்நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[15]

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

சான்றுகள்

  1. "மாநகராட்சி ஆணையர் :: அகமதாபாத் மாநகராட்சி ஆணையர்". https://ahmedabadcity.gov.in/portal/jsp/Static_pages/corp_comm.jsp. 
  2. Feb 14, TNN |; 2020; Ist, 04:42. "City police chief visits stadium, ashram | Ahmedabad News - Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200214211834/https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/city-police-chief-visits-stadium-ashram/articleshow/74125656.cms. 
  3. "Expansion of Municipal Corporations". https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/gujarat-municipal-limits-of-six-cities-expanded/articleshow/76459795.cms. 
  4. "Municipalities have extension in Gujarat" இம் மூலத்தில் இருந்து 2020-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200920101249/https://www.gnsnews.co.in/municipal-corporation-limits-of-5-cities-including-gandhinagar-extended/. 
  5. "About Us | AUDA" இம் மூலத்தில் இருந்து 2020-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220004611/http://www.auda.org.in/Content/about-us-42. 
  6. "About The Corporation: Ahmedabad Today". Ahmdabad Municipal Corporation இம் மூலத்தில் இருந்து 25 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180425114642/https://ahmedabadcity.gov.in/portal/jsp/Static_pages/about_amc.jsp. 
  7. 7.0 7.1 "சென்சஸ் – 2011". தலைமைப் பதிவாளர் & மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர், இந்தியா இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825155850/http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW00C-01%20MDDS.XLS. 
  8. "Gujarāt (India): State, Major Agglomerations & Cities – Population Statistics in Maps and Charts" இம் மூலத்தில் இருந்து 30 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160430115558/http://www.citypopulation.de/India-Gujarat.html. 
  9. Kaushik, Himanshu; Jan 3, Niyati Parikh / TNN /; 2019; Ist, 03:16. "GJ-01 series registers 12% drop in one year | Ahmedabad News - Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200808104137/https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/gj-01-series-registers-12-drop-in-one-year/articleshow/67356737.cms. 
  10. "Distribution of Population, Decadal Growth Rate, Sex-Ratio and Population Density". 2011 census of India (இந்திய அரசு) இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113182831/http://www.censusindia.gov.in/2011-prov-results/data_files/gujarat/table-1.xls. 
  11. "Ahmedabad (Ahmedabad) District : Census 2011 data". census2011 இம் மூலத்தில் இருந்து 12 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140612111531/http://www.census2011.co.in/census/district/188-ahmadabad.html. 
  12. "Ahmedabad joins ITES hot spots". Times of India. 16 August 2002 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090103080350/http://infotech.indiatimes.com/articleshow/19249001.cms. பார்த்த நாள்: 30 July 2006. 
  13. "அகமதாபாத்: இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம்". கட்டுரை (தி இந்து). 22 சூலை 2017. http://tamil.thehindu.com/society/real-estate/article19326371.ece. பார்த்த நாள்: 23 சூலை 2017. 
  14. Ahmedabad City Census 2011
  15. "City's BRTS didn't enhance public transport usage". 5 January 2016. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Citys-BRTS-didnt-enhance-public-transport-usage/articleshow/50450129.cms. பார்த்த நாள்: 12 January 2016. 

வெளி இணைப்புகள்