அனுமக்கொண்டா மாவட்டம்
அனுமக்கொண்டா மாவட்டம்
హనుమకొండ జిల్లా (தெலுங்கு) பழைய பெயர்:வாரங்கல் நகர்புற மாவட்டம் | |
---|---|
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் அனுமக்கொண்டா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | அனுமக்கொண்டா |
மண்டல்கள் | 14 |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. ராஜீவ்காந்தி ஹனுமந்து, இ.ஆ.ப |
• காவல் ஆணையர் | முனைவர். தருண் ஜோஷி, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,309 km2 (505 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,93,841 |
• அடர்த்தி | 840/km2 (2,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
வாகனப் பதிவு | TS–03[3][4] |
இணையதளம் | hanumakonda |
அனுமக்கொண்டா மாவட்டம் (Hamumakonda District), இதன் பழைய பெயர் வாரங்கல் நகர்புற மாவட்டம் என்பதாகும். இது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். அக்டோபர், 2016-இல் வாரங்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதன் நகர்புறங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டு அனுமக்கொண்டா மாவட்டம் என்றும், வாரங்கல் மாவட்டத்தின் கிராமப்புறங்களைக் கொண்டு, வாரங்கல் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[5] அனுமக்கொண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அனுமக்கொண்டா நகரம் ஆகும்.
வரலாறு
வாரங்கல் பகுதியை காக்கத்தியர்கள் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323 வரை ஆண்டனர். இவ்வம்சத்தின் முக்கிய இராணி ருத்திரமாதேவி ஆவார். பின்னர் 1326 முதல் முசுனூரி நாயக்கர்கள் வாரங்கல் பகுதியை ஆண்டனர். பின்னர் பாமினி சுல்தான்கள் 1347 ஆண்டு முதல் 1527 முடிய ஆண்டனர். பாமினி சுல்தான்களுக்குப் பின்னர் வாரங்கல் பகுதியை கோல்கொண்டா சுல்தான்கள் ஆண்டனர்.
1687-இல் முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் வாரங்கல்லை கைப்பற்றினார். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வாரங்கல் பகுதி 1724-இல் ஐதராபாத் நிசாம் ஆட்சிப் பகுதியில் சென்றது.
இந்திய விடுதலைக்குப் பின்னர்
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், வாரங்கல் ஒன்றுப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு மாவட்டமாக விளங்கியது. சூன் 2, 2014 அன்று ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து, தெலங்கானா மாநிலம் நிறுவப்பட்டப் போது வாரங்கல் மாவட்டம் தெலங்கானா மாநிலத்தின் பகுதியாக விளங்கியது.
அக்டோபர் 2016-இல் தெலங்கானா மாவட்டங்களை மறுசீரமைத்து புதிதாக 21 மாவட்டங்கள் துவக்கப்பட்ட போது வாரங்கல் (நகர்புறம்) மாவட்டம் உருவானது.
மக்கள் தொகையியல்
அனுமக்கொண்டா மாவட்டம் 1309 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அனுமக்கொண்டா மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வாரங்கல் நகர்புற மாவட்டத்தின் மக்கள் தொகை 10,93,841 ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
அனுமக்கொண்டா மாவட்டம் 2 வருவாய்க் கோட்டத்தைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 14 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டல்கள்
அனுமக்கொண்டா கோட்டம் | பார்க்கல் கோட்டம் |
---|---|
அனுமக்கொண்டா | பார்க்கல் |
காசிப்பேட்டை | நதிக்குடா |
இன்வோல் | டமேரா |
ஹசன்பார்த்தி | ஆத்மகூர் |
வேலேயர் | சாயம்பேட்டை |
தர்மசாகர் | |
எல்கதுர்த்தி | |
பீமதேவரப்பள்ளி | |
கமலாபூர் |
பொருளாதாரம்
2006-ஆம் ஆண்டின் இந்திய அரசின் அறிவிப்பின் படி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் வாரங்கல் நகர்புற மாவட்டமும் ஒன்றாகும்.[6] இம்மாவட்டம் பின் தங்கிய பிரதேசங்களுக்கான வளர்ச்சி நிதி இந்திய அரசிமிடமிருந்து பெறுகிறது.[6]
பண்பாடு
உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, 2013-ஆம் ஆண்டில் யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.[7] முக்கிய சுற்றுலாத் தலங்கள்:
- ஆயிரங்கால் கோயில்
- பத்மாட்சி கோயில்
புகழ் பெற்றவர்கள்
- ருத்திரமாதேவி (காக்கத்தியர் அரசி)
- பி. வி. நரசிம்ம ராவ்
- கலோஜி நாராயண ராவ் (கவிஞர்)
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
ஐதராபாத் நகரத்தையும் – சத்தீஸ்கரின் பூபாளபட்டினத்தினையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 163 மற்றும் ஜஜித்தியால் – கம்மம் நகரை இணைக்கும் நேசிய நெடுஞ்சாலை எண் 563 வாரங்கல் நகரத்தின் வழியாக செல்கிறது.
இருப்புப் பாதை
வாரங்கல் மற்றும் காசிப்பேட்டை என இரண்டு தொடருந்து நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கே செல்லும் அனைத்து தொடருந்துகளும் வாரங்கல் தொடந்து நிலையம் வழியாகச் பயணிக்கிறது.
வானூர்தி நிலையம்
இம்மாவட்டத்தில் உள்ள மம்மூர் எனுமிடத்தில் வாரங்கல் வானுர்தி நிலையம் உள்ளது. சிறிய விமானங்களை இயக்க வல்ல இவ்வானூர்தி நிலையத்தினைப் பொதுமக்கள் பயன்படுத்த இயலாது. பெரிய விமானங்கள் இயங்கும் வகையில், இவ்விமான நிலையத்தின் விரிவாக்கப்பணி 2030ஆம் ஆண்டில் நிறைவடையும் வகையில் நடந்து கொண்டு வருகிறது.[8]
கல்வி
வாரங்கல் நகரப்புற மாவட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்கள்;
- வாரங்கல் தொழிநுட்ப நிறுவனம்
- காகாத்தீய மருத்துவக் கல்லூரி
- கலோஜி நாராயண ராவ் சுகாதரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்
- வாரங்கல் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- காக்காதீய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ https://hanumakonda.telangana.gov.in/about-district/whos-who/
- ↑ 2.0 2.1 https://hanumakonda.telangana.gov.in/demography/
- ↑ "Telugu States Latest News, Breaking News, News Headlines, Live Updates, Today Top News". Archived from the original on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
- ↑ "Vehicle Registration Codes For New Districts In Telangana". Sakshipost இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161019204136/http://www.sakshipost.com/telangana/2016/10/13/vehicle-registration-codes-for-new-districts-in-telangana.
- ↑ "Warangal (rural) district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ 6.0 6.1 Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "TV9 – Warangal accorded World Heritage town status by UNESCO – Telugu TVTelugu TV". Telugutv.au.com. 2013-02-28. Archived from the original on 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
- ↑ Mamnoor airport to function only after 2030